ஸ்டாலினின் வீட்டுகிட்டயே இந்த அக்கிரமம்.. திமுக போட்ட கள்ள ஓட்டு? புட்டு புட்டு வைத்த தமிழக பாஜக
சென்னை: சென்னையில் திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக கொந்தளித்துள்ளது. இது தொடர்பான புகார் ஒன்றையும் தேர்தல் ஆணையத்திடம் கொண்டு சென்று, வேலியே பயிரை மேய்வதா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறது.
விறுவிறுப்பான நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தநிலையிலும்வட, தமிழகத்தில் அதன் பரபரப்புகள் இன்னமும் அடங்கவில்லை... பதிவான ஒட்டுமொத்த வாக்கு சதவீதம் கடந்தமுறை தேர்தலைவிட குறைவு என்றே கூறப்படுகிறது.. இதற்கான சில காரணங்களையும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கு நடுவில், அரசியல் கட்சிகள், ஒருவருக்கொருர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறது.. அந்தவகையில், திமுக மீது பாஜக முக்கிய குற்றச்சாட்டை வைத்துள்ளது.
அதிருப்தி: அதாவது, சென்னையில் திமுகவினர் கள்ள ஓட்டு போட்டதுடன், பாஜகவின் கிளை முகவராக பணியாற்றியவர் மீதும் தாக்குதல் நடத்தியிருப்பதாக தமிழக பாஜகவின் மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் உள்ளதாவது:
"வேலியே பயிரை மேய்ந்த கதையாக, தமிழக முதல்வரின் இல்லத்திற்கு அருகிலேயே வாக்கு சாவடியை கைப்பற்றி கள்ள வாக்குகளை பதிவு செய்துள்ளனர். திமுகவினர் தென் சென்னை பாராளுமன்ற தொகுதியில், தேனாம்பேட்டை 122 வது வட்டம் வாக்கு சாவடி எண் 13 ல் பாஜகவின் கிளை முகவராக பணியாற்றிக் கொண்டிருந்த கெளதம் என்ற பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இளைஞரை வாக்குச்சாவடிக்குள் புகுந்து தாக்கியுள்ளதோடு, வாக்குச் சாவடியை கைப்பற்றி கள்ள வாக்குகளை பதிவு செய்துள்ளது அறிவாலய கும்பல்.
கராத்தே தியாகராஜன்: தகவலறிந்து பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் அவர்கள் உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆவன செய்தும், திமுகவின் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலுவின் அழுத்தத்தினால் காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வன்முறைக் கும்பலுக்கு ஆதரவாக பேசியதோடு, பாஜகவின் கெளதம் ஜாதி ரீதியாக பேசினார் என்ற உண்மைக்குப் புறம்பான தகவலை பொது வெளியில் கூறியுள்ளார் மயிலை வேலு அவர்கள்.
திமுகவின் அராஜக செயலை மூடி மறைக்க ஜாதிய மோதலை உருவாக்க முனைகிறார் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர். பாதிக்கப்பட்ட கெளதம் மற்றும் தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜனின் தலைமை முகவர் கரு.நாகராஜ் அளித்துள்ள புகாரின் மீதும் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.
கோரிக்கை: மேலும், பாஜக நிர்வாகி, கெளதமை தாக்கிய திமுக குண்டர்கள் மீதும், அவர்களுக்கு துணை நின்றதோடு 'ஜாதி' ரீதியான கலவரத்தை தூண்ட முனைந்த குற்றத்திற்காக மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாரயணன் திருப்பதி கேட்டுக் கொண்டுள்ளார்
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications