ஸ்டாலினை விடுங்க.. உதயநிதிக்கு ஸ்கெட்ச் போட்ட எடப்பாடி.. ஆளுநர் ரவியிடம் அப்படி சொன்னாரா? போச்சே!
சென்னை: விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முக்கியமான புகார் ஒன்றை ஆளுநர் ஆர். என் ரவியிடம் வைத்ததாக கூறப்படுகிறது.
ஆளுநர் ஆர். என் ரவியை நேற்று அவரின் இல்லத்தில் சந்தித்தார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. மதுபான - கள்ளச்சாராய மரணங்கள் குறித்து புகார் மனுவோடு சென்று எடப்பாடி, ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தார்.

இதற்காக அதிமுகவினர் நேற்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக பேரணி காரணமாக சென்னையில் அண்ணா சாலை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடும் வெயிலில் 12க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர்.
எடப்பாடி உதயநிதி
இதில் கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக எடப்பாடி புகார் கொடுத்து இருந்தாலும் கூட, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முக்கியமான புகார் ஒன்றை ஆளுநர் ஆர். என் ரவியிடம் வைத்ததாக கூறப்படுகிறது.
ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்த புகாரில், ரெட் ஜெயண்ட் நிறுவனம் கடந்த 2 வருடங்களில் 50க்கும் அதிகமான படங்களை தயாரித்து ரிலீஸ் செய்துள்ளனர். 2011-2021 வரை 10 வருடங்கள் 2 படங்கள் மட்டுமே தயாரித்த இவர்கள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி இப்போது அதிக படங்களை தயாரிக்கிறார்கள்.
இப்போது அதில் பல முறைகேடுகள், ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. இந்த நிறுவனம் முதல்வர் ஸ்டாலினின் குடும்ப சொத்து ஆகும். உதயநிதி ஸ்டாலின் இதை நடத்துகிறார். அமைச்சரான அவர் நடத்தும் இந்த நிறுவனம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் புகார் அளித்து உள்ளாராம்.
அறிக்கை:
நேற்று நடந்த இந்த சந்திப்பு குறித்து எடப்பாடி அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில்.,
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாகவே ஆளுநர் ஆர்.என் ரவியிடம் எடப்பாடி புகார் அளித்தார். ஏற்கனவே விழுப்புரத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், ராஜவேல்(38) என்பவர் விழுப்புரத்தில் பலியாகி உள்ளார்.
ஏற்கனவே செங்கல்பட்டில் கள்ளச்சாராயத்தால் 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதில் பலியான நபர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் கள்ளச்சாராயம் உச்சத்தில் இருந்தது. 90 களில் உச்சத்தில் இருந்த பிஸ்னஸ் ஆகும் இது. அதன்பின் அரசு தீவிரமாக செயல்பட்டு இதை முடக்கியது.
அப்போது கண்கள் போன பரிதாபமும், உயிர்கள் போன கொடூரமும் அரங்கேறியது. அதன்பின் டாஸ்மாக் வந்ததும் கள்ள சாராயத்திற்கான தேவை குறைந்தது. படிப்படியாக கள்ளச்சாராயம் அதிகம் ஆனது.
இது போக தஞ்சாவூர், கீழவாசல் பகுதியில் உள்ள அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் மது அருந்திய இரண்டு பேர் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் அருந்திய மதுவில் சையனைடு கலந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் கொலையாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி, வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கள்ளச்சாராயத்தால் 23 பேர் பலியான சுவடே இன்னும் மறையும் முன்னர்,நேற்று தஞ்சாவூரில் அரசு பாரில் சட்டவிரோதமான மது விற்பனையில் இருவர் மரணம் அடைந்துள்ள சூழ்நிலையில்,
இன்று தனியார் தொலைக்காட்சி நடத்திய கள ஆய்வில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு அனுமதி பெற்ற மதுபான பாரில் சிறிதும் அச்சமின்றி, கந்தவர்கோட்டை காவல் ஆய்வாளரின் முழு ஒத்துழைப்போடு அவர்களின் நேரடி கண்காணிப்பில் 24 மணிநேரமும் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்று வருவது அம்பலமாகியுள்ளது, இதை கண்டு சட்டவிரோத மது விற்பனையால் இன்னும் எத்தனை உயிரிழப்புகள் நிகழுமோ என மக்கள் அச்சம் கொள்கின்றனர்.
மக்கள் உயிர்களைப் பற்றி கொஞ்சமும் அக்கறையின்றி தங்களுக்கு கமிஷன் கிடைத்தால் மட்டும் போதும் என்ற எண்ணத்துடன் செயல்படும் இந்த விடியா திமுக அரசு இன்னும் எத்தனை உயிர்பலிகளை வாங்கத் துடிக்கிறது எனத் தெரியவில்லை, ஆகவே இந்த குடும்ப ஆட்சியின் பொம்மை முதல்வர் இதுகுறித்தாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்., என்றுள்ளார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications