Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கவனிச்சீங்களா.. ஒரு வார்த்தைகூட எடப்பாடி சொல்லலயாமே .. மறுபடியும் முதல்ல இருந்தா? கோவையே குழம்புது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, சிறுபான்மையினர் ஓட்டுக்கள் பிரதானமாக கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்து கொண்டாலும், இதுவரை பாஜகவை பற்றியோ, பாஜகவின் திட்டங்களை பற்றியோ, பாஜக தலைவர்களை பற்றியோ எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கவேயில்லை.

Did Edappadi palanisamy Criticized the BJP in Coimbatore Meeting and Will AIADMK get DMKs minority votes

ஆளுநர் : ஆளுநர் விவகாரத்திலும் இதேபோன்ற ஒரு சலசலப்பு கிளம்பியது.. ஆரியர், திராவிடர் குறித்த ஆளுநரின் கருத்துக்குகூட, எடப்பாடி பழனிசாமி இதுவரை, ஒரு வார்த்தை எதிர்த்து பேசவும் இல்லை, ஆதரித்து பேசவும் இல்லை.. சித்தாந்த ரீதியான மோதலில் கவர்னருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கருத்து சொல்லாததை, திமுக இப்போதுவரை கடுமையாக விமர்சித்து கொண்டிருக்கிறது.

அப்படியானால், 6 வருட காலமாகவே, இழந்துவிட்ட சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெறுவதற்காகவே, அதிமுக முன்னெடுக்கும் முயற்சியாகவே இது பார்க்கப்பட்டும் வருகிறது.

இஸ்ரேல் : கடந்த வாரம் திடீரென எடப்பாடி பழனிசாமி, இன்டர்நேஷனல் பாலிட்டிக்ஸை தொட்டிருந்தார்.. இது தொடர்பான அறிக்கையில், "சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து பாலஸ்தீன விவகாரத்தில் நம் முன்னோர்கள் கடைப்பிடித்த சுதந்திர பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவாக இருந்து வருவதால், பாஜக மீது முஸ்லிம்கள் வருத்தத்திலும், அதிருப்தியிலும் உள்ளனர்.. இப்படிப்பட்ட சூழலில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தருவதுடன், இஸ்லாமியர்கள் மீதான நம்பிக்கையையும் பெற முடியும், அத்துடன் பாஜகவின் எதிர்ப்பு வாக்குகளையும், அறுவடை செய்ய முடியும் என்பதாலும்தான், இப்படி ஒரு அறிக்கை வெளியானதாம்.

பழனிசாமி அறிக்கை: அதுமட்டுமல்ல, நாங்களும் பாஜகவை எதிர்க்கவே செய்கிறோம் என்பதை எதிர்க்கட்சிகளுக்கு உணர்த்தவும், எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டதாக சொல்கிறார்கள்.

"அதிமுக - பாஜகவுக்குள் ரகசிய டீலிங் இப்போதுவரை இருக்கிறது" என்று, திமுக கூட்டணி ஓயாமல் விமர்சித்து வரும்நிலையில், "பட்டும் படாமல்" வெளியிடப்பட்ட இந்த அறிக்கையும், பெருத்த விவாதத்தை சோஷியல்மீடியாவில் கிளப்பிவிட்டது. நேற்றைய தினம், கோவையில் நடந்த கூட்டத்தையும், அங்கு எடப்பாடி பழனிசாமி பேசியதையும் திமுக தரப்பு கவனிக்காமல் இல்லை..

திமுக : நேற்று நடந்த கிறிஸ்தவ விழாவில், பாஜகவை எதிர்த்தும், விமர்சித்தும் எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தைகூட பேசவில்லையாம்.. வழக்கம்போல் திமுகவை சாடியதே தவிர, பாஜகவை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, 'செல்லுமிடமெல்லாம் பாஜகவை சாடியும், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் சொல்லுங்கள் என்று தன்னுடைய நிர்வாகிகளுக்கு உத்தரவிடும் எடப்பாடி, தான் மட்டும் பாஜகவை விமர்சிக்காமல் இருக்கிறாரே ஏன்? என்றும் கேள்விகள் எழுந்துள்ளனவாம்.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் சொல்லும்போது, "சிறுபான்மையினர் ஆதரவை பெறவேண்டியே, இதுபோன்ற மாநாடுகளில் எடப்பாடி பழனிசாமி பங்கெடுத்து கொள்ள முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அதனால்தான், பாஜகவுக்கான எதிராக என்ன பேசப்போகிறார் எடப்பாடி பழனிசாமி? என்ற ஆர்வம் அனைத்து தரப்பினரிடமும் எழுந்தது.

அதிமுக மாநாடு: காரணம், பாஜகவிலிருந்து பிரிந்த பிறகு, கிறிஸ்தவ அமைப்பு மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.. இந்த மாநாடு கிறிஸ்தவர்களின் ஆதரவை அதிமுக பெறும் மாநாடாக அமையும் என்றும் நம்பப்படுகிறது. அப்படியிருக்கும்போது, பாஜகவை எதுவுமே விமர்சிக்காமல், திமுகவை மட்டுமே தாக்கி பேசியிருக்கிறார்.

திமுகவிடமிருக்கும் சிறுபான்மையினர் வாக்கு வங்கியை, உடைப்பதற்காக மெனக்கெடும் அதிமுக, பாஜகவை டேமேஜ் செய்யும் விஷயத்தில் அவ்வளவாக ரிஸ்க் எடுப்பதில்லை போல உள்ளது.

டைம் இருக்கு: இன்னும் சில நாட்களில், இஸ்லாமிய அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து மிக பிரமாண்டமான மாநாடு நடத்த போவதாகவும், இந்த மாநாட்டிலும் எடப்பாடி பழனிசாமியை பங்கேற்க போவதாகவும், இஸ்லாமியர்களுக்கு சாதகமான பல்வேறு அறிவிப்புகளை இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என்றெல்லாம் தகவல்கள் வருகின்றன. இந்த மாநாட்டிலாவது, பாஜகவை அட்டாக் செய்து பேசுவாரா? என தெரியவில்லை" என்றனர்.

ஆனால், அதிமுக நிர்வாகிகள் இதை பற்றி சொல்லும்போது, 'பாஜகவை விமர்சித்தால்தான், கூட்டணி முறிவை ஏற்க வேண்டும் என்பதல்ல.. அதற்காக எந்த கட்சியையும் விமர்சிக்காமலும் இருக்க போவதில்லை.. தேர்தலுக்கு இன்னும் நிறைய டைம் உள்ளது. அதனால், அதிமுக மேற்கொள்ள பிரச்சாரங்களில் பாஜகவை நிச்சயம், கடுமையாக விமர்சிப்பார் எடப்பாடி பழனிசாமி. பொறுத்திருந்து பாருங்கள்" என்கிறார்கள்... ஆக, பொறுத்திருந்தே பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+