அண்ணாமலையை ராஜினாமா செய்ய வைக்க.. ஸ்கெட்ச் போட்ட எடப்பாடி.. இப்படி ஒரு பிளானா.. சொன்னது யாரு பாருங்க
சென்னை: அண்ணாமலையை ராஜினாமா செய்ய வைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் ஸ்கெட்ச் போட்டார். அண்ணாமலையை தூக்க போகிறார்கள். இதற்கு பின் எடப்பாடிதான் ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்துள்ளார்.. அவரின் திட்டபடியே சில விஷயங்கள் நடந்து உள்ளன என்று மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசியல் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. வரும் சில நாட்களில் அரசியலில் பரபரப்பான சம்பவங்கள் நடந்து வருகின்றன, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வர தொடங்கி உள்ளன. பல்வேறு அரசியல் நிபுணர்கள் இது தொடர்பாக இணையத்தில் தகவல்களை வெளியிட தொடங்கி உள்ளன. தலைவர் மாற்றம் உறுதியாகிவிட்டது என்றே நம்மிடம் பேசி பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் இது தொடர்பாக ஆலோசனை நடந்து உள்ளது. ஆனால் நியமிக்கப்பட போவது தற்காலிக தலைவரை.. நிரந்தர தலைவரா என்பது தெரியாது, என்றெல்லாம் செய்திகள் வர தொடங்கி உள்ளன.

ஒரு மூத்த பெண் நிர்வாகியின் பெயர் தலைவர் பதவிக்கு அடிபட்டுக்கொண்டு இருக்கிறது. அவர் மீது டெல்லி பாஜகவிற்கு நல்ல அபிப்ராயம் உள்ளது. ஆனாலும் அண்ணாமலைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் டெல்லி உள்ளது. அண்ணாமலை மாற்றப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகவில் என்ன நடக்கிறது.. அண்ணாமலை மாற்றப்படுவாரா என்று மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
பேட்டி; இது தொடர்பாக ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பாஜகவில் நிலைமை சரியில்லை. சமீபத்தில் கைதான ப்ரித்வி உட்பட பலர் அண்ணாமலைக்கு நெருக்கம். இவர்கள் காரணமாக அண்ணாமலை மீது டெல்லி மீது அப்செட்டில் உள்ளது.
அதிமுக கூட்டணி; அதிமுக கூட்டணியை அண்ணாமலை உடைத்ததை பாஜக விரும்பவில்லை. பாஜக மேலிடம் இதை ரசிக்கவில்லை. கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை பேசி பேசி கூட்டணியை உடைத்ததை பாஜக விரும்பவில்லை. பாஜகதான் பெரிய கட்சி.. தனியாக ஆட்சி அமைக்கும் என்று சொல்லலாம். அதற்காக அதிமுகவை எதிர்க்கலாமா?
சசிகலா பிளான் படி அண்ணாமலை இப்படி செய்துள்ளார. அதிமுக கூட்டணியை உடையுங்கள் என்று சசிகலா கூறினார். எடப்பாடியை பலவீனப்படுத்த வேண்டும் என்று சசிகலா கூறினார். இதை அண்ணாமலை ஏற்றுக்கொண்டார். சசிகலா கேட்டுக்கொண்டதற்காக அண்ணாமலை அதிமுக கூட்டணியை உடைத்துவிட்டார்.
பாஜக சசிகலா இடையே ஒரு ஒப்பந்தம் உள்ளது. அண்ணாமலை டெல்லியை ஏமாற்றிவிட்டார். பொய்யான உளவுத்துறை ரிப்போர்ட்டை கொடுக்க வைத்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி அடைந்ததாக பொய்யான உளவுத்துறை ரிப்போர்ட்டை கொடுக்க வைத்துள்ளார்.
இதை டெல்லி கண்டுபிடித்துவிட்டது. இதுதான் பாஜகவின் மேலிடம் கோபம் அடைய காரணம். கூப்பிட்ட போதெல்லாம் மோடி, அமித் ஷா தமிழ்நாடு வந்த காரணம் இந்த நம்பிக்கதான்.. ஆனால் அதை அண்ணாமலை ஏமாற்றிவிட்டார். நயினாருக்கு டெல்லியில் ஆதரவு உள்ளது.
எடப்பாடிதான் ஸ்கெட்ச் போட்டு அண்ணாமலைக்கு எதிராக பிரஷர் போட்டுள்ளார். தேர்தல் வியூகத்தில் எடப்பாடி சிறப்பாக செயல்பட்டு உள்ளார். அண்ணாமலையை விட எடப்பாடி சிறப்பாக செயல்பட்டு உள்ளார், என்று மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
பாஜக, ஆர்எஸ்எஸ் பெயர்கள் இல்லாத புதிய அரசியல் முகமூடி! அண்ணாமலை பிளான் பி! மாணிக்கம் தாகூர் சூசகம் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications