பேரிடராக அறிவிக்க கூடாது.. தம்பிதுரையை விட்டு.. டெல்லியில் பேசிய எடப்பாடி? புயலை கிளப்புதே திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஏற்பட்ட புயல் வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க கூடாது என்று எம்பி தம்பிதுரை விட்டு எடப்பாடி பழனிச்சாமி பேச சொன்னதாக திமுக செய்தி தொடர்பு செயலாளர் ராஜிவ் காந்தி விமர்சனம் வைத்துள்ளார்.

எடப்பாடி மீது கடும் கண்டனம்: உங்களின் கால் பிடி,வயிற்று பிழைப்பு அரசியலை தொடருங்கள் மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே வாழ்த்துகள்!! 2015ல் செல்வி ஜெயலலிதா அவர்களின் தனிமனித தவறால் 400க்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள்.. எடப்பாடி அவர்களின் 2018,2021 அலங்கோல ஆட்சியில் வெறும் 10cm மழைக்கே ஒட்டு மொத்த சென்னையும் சின்னாபின்னமாக மாறிப்போனது...

Did Edappadi Palanisamy play against Chennai flood relief in Delhi? What did DMK say?

தற்போது உயிரிழப்பு பெருமளவு தடுக்கப்பட்டு 80% விழுக்காடு சென்னை பகுதி இயல்பு நிலைக்கு வந்துள்ளது.. எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் 5 நாளில் கூட சரி செய்ய முடியாத பொது போக்குவரத்து 1 நாளில் சரி செய்யப்பட்டுள்ளது!!

ஆரணி ஆறு,கொசஸ்தலை ஆறு, கூவம் ஆறு, அடையாறு, பாலாறு ஆற்று படுகை உரியமுறையில் சரி செய்யப்பட்டதால் பெரும் வெள்ள சேதம் தடுக்கப்பட்டுள்ளது! பக்கிங்காம் கால்வாய் பராமரிப்பு பணி இயல்பான நாட்களில் இணைப்பு ஆறுகள் மூலம் கடல் தண்ணீர் உள்வாங்குவதால் சீரமைப்பு பணிகளை கவனமாக காலம் எடுத்து தான் செய்து கொண்டு இருக்கின்றனர்.

என்ன நடந்தது?: 2015,2018,2021 கடந்தகால படிப்பினைகளில் இருந்து தி.மு.கழக அரசு பாடம் கற்று கொண்டு எப்போதும் நீர் தேங்கும் 168 இடங்கள் அடையாளம் காணபெற்று இப்போது மழைநீர் வடிகால் புதிதாக ஏற்படுத்தபட்டதால் இப்போது முழுவதும் அங்கு நீர் தேங்க வில்லை.

நகரின் மழைநீர் வடிகால் கட்டமைப்பு 20cm மழை கொள்ளளவு தாங்கும்தன்மை உள்ளதாக ஏறத்தாழ 4000km அளவுக்கு புதிதாகவும், பழைய வடிகால் இணைப்பு சரிசெய்பட்டதாலும் தான் ஒருநாளில் 50cm-க்கு மேல் மழை பெய்தும் சென்னை தப்பி பிழைத்துள்ளது!

டெல்லியில் பேசிய எடப்பாடி: தேசிய பேரிடராக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கேட்கும் போது அடிமை எடப்பாடி பழனிச்சாமி அதனை எதிர்த்து தன் பாராளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை அவர்களை வைத்து பாராளுமன்றத்தில் எதிர்த்து பேசி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு இப்போது நாடகம் ஆடுகிறார்.

50% விழுக்காடுக்கு மேல் வருமானவரியும் GST போன்ற பிரதான வரிகளை ஒன்றிய அரசுக்கு செழுத்துகிற இந்தியாவின் மூன்றாவது பெரிய சென்னை நகரின் மக்கள் குறித்து இதுவரை ஒன்றிய பாஜக அரசும் அதன் தூதுவர் தமிழ்நாடு ஆளுநர் ஆண்.என்.ரவி அவர்களும் வாய் திறக்கவில்லை இது குறித்து பேச துணிவில்லா எடப்பாடி அவர்கள்..

ஸ்டாலின் மீட்பு; வெள்ளை அறிக்கை கேட்பது வாடிக்கையான வாய்சவடால் அரசியல் தான்! இந்த வாய்சவடால் அரசியல்தான் தங்களின் வயிறு வளர்க்கும், வளர்க்கட்டும். வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணியிலும், வரியினை வாங்கி கொண்டு பேரிடர் காலத்தில் கூட கொடுக்காத ஒன்றிய பாஜக அரசிடமும் எங்களின் முதல்வர் போராடி கொள்வார்.

மக்களை மீட்கும் தூதுவன் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் களத்தில் இருந்து மக்களை காப்பார் அது சென்னை என்னும் இயற்கை தாயின் பெரிய நிலத்திற்கும், அம் மண்ணில் வாழும் மெட்ராஸ் மக்களுக்கும் தெரியும். உங்களின் கால் பிடி,வயிற்று பிழைப்பு அரசியலை தொடருங்கள் மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே வாழ்த்துகள்!!, என்று ராஜிவ் காந்தி விமர்சனம் வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+