போகிற இடமெல்லாம் பேசினாரே! அதிமுகவில் இந்த முறையும் முக்கிய புள்ளிக்கு கல்தா? எடப்பாடி திட்டம் என்ன?
சென்னை: வந்தார்.. போனார்.. ரிப்பீட்டு என்று சொல்வது போல ஆகியுள்ளது அதிமுக முக்கிய புள்ளியின் நிலை.. கட்சிக்காக பல இடங்களில்.. பல மேடைகளில் பேசியும் கூட "இடைக்கால பொதுச்செயலாளர்" எடப்பாடி பழனிசாமி முக்கிய புள்ளி ஒருவரை மீண்டும் ஓரம்கட்டி உள்ளார். என்ன நடந்தது?
அதிமுகவில் கடந்த 10 நாட்களில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்துவிட்டன. ஜூலை 11ம் தேதி தொடங்கிய மாற்றங்கள்.. இன்று வரை தொடர்கின்றன.
கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். அதோடு நிரந்தர பொதுச்செயலாளருக்கான தேர்தலும் அறிவிக்கப்பட்டது.

பதவி
இது போக கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் நீக்கப்பட்டது. அதோடு கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்தும் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். மேலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். இந்த நிலையில்தான் கட்சியில் புதிய பொறுப்புகள் பல அறிவிக்கப்பட்டு வருகின்றன. கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மற்ற பொறுப்புகள்
அதன்பின் எடப்பாடி பழனிசாமி பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதிமுக துணைப்பொதுச்செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருக்கும் பதவி கொடுக்கப்படலாம் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே இவர்களுக்கு துணை பொதுச்செயலாளர் பதவிகள் அளிக்கப்பட்டு உள்ளன. அதிமுகவின் தலைமை கழக செயலாளராக வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று அறிவிப்பு
இது போக இன்று அதிமுக சார்பாக எதிர்க்கட்சி துணை தலைவர் தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கொறடா வேலுமணி சார்பாக சபாநாயகருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. முக்குலத்தோர் பிரிவினர், தென்னக அதிமுகவினரை கவரும் வகையில் ஆர்பி உதயகுமாருக்கு இந்த முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜெயக்குமார்
அதிமுகவில் இதன் மூலம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜெயக்குமார் இந்த முறையும் ஓரங்கட்டப்பட்டு உள்ளார்.
முன்னதாக ராஜ்ய சபா எம்பி தேர்தலில் ஜெயக்குமார் பெயர் அடிபட்டது - ஆனால் சிவி சண்முகம், தர்மர் தேர்வானார்கள்
தலைமை கழக செயலாளர் ஜெயக்குமாருக்கு வழங்கப்படாமல் கொறடாவான வேலுமணிக்கு வழங்கப்பட்டது
பொருளாளர் பதவியும் ஜெயக்குமாருக்கு வழங்கப்படாமல் திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது
அதற்கு முன் அவைத் தலைவர் பதவியும் நிரந்தரமாக ஜெயக்குமாருக்கு வழங்கப்படாமல் தமிழ் மகன் உசேனுக்கு வழங்கப்பட்டது.

ஓரம்கட்டப்பட்டார்
வரிசையாக பல்வேறு பதவிகள் வழங்கப்படாமல் ஓரங்கட்டப்பட்ட ஜெயக்குமாருக்கு தலைமை கழகத்தில் கூட இடம் கொடுக்கப்படவில்லை. ஆனால் ஜெயக்குமாரும் சளைக்காமல் தொடர்ந்து எடப்பாடிக்கு ஆதரவாக பேசி வருகிறார். கட்சிக்காக தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பிலும், தனி பேட்டிகளிலும் பேசி வருகிறார். ஓ பன்னீர்செல்வம் தொடுக்கும் வழக்குகள், பேட்டிகளுக்கு முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவிப்பது என்னவோ ஜெயக்குமாராகவே இருக்கிறார்.
Recommended Video

எடப்பாடி
எடப்பாடியும் பொதுவாக தனக்கு நெருக்கமாக இருப்பவர்களை விட்டுக்கொடுக்கவில்லை. வேலுமணி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, தமிழ் மகன் உசேன், சிவி சண்முகம், தற்போது ஆர் பி உதயகுமார் என்று தனக்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கு முக்கிய பதவி கொடுத்து வருகிறார். அப்படி இருக்கும் போது ஜெயக்குமாருக்கு என்று எடப்பாடி என்ன திட்டம் வைத்துள்ளார். அவருக்கு என்ன பதவியை எடப்பாடி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications