புயலோடு மோதும் "புயல்".. திமுக 4 இடத்துல காலி.. செம சான்ஸ்.. எடப்பாடியிடம் சொன்னதுமே.. அந்த வார்த்தை
சென்னை: "கதம் கதம்" என்று பாஜகவுடனான கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.. ஆனால், நிஜமாகவே கூட்டணி முறிந்துவிடுமா? அல்லது மீண்டும் மலருமா? என்று தெரியவில்லை. இதுகுறித்த ஒரு பிரத்யேக செய்தி நமக்கு கிடைத்துள்ளது.
தமிழக பாஜகவை பொறுத்தவரை, இதுவரை அதிமுகவுடன் சமரசம் என்ற பேச்சை எடுக்கவில்லை.. எடப்பாடி பழனிசாமியை சமாதானம் செய்யும் முயற்சியிலும் இறங்கவில்லை.. ஆனால், மேலிட பாஜகவை, அதிமுக தரப்பு இதுவரை பகைத்து கொள்ளாமல் இருப்பதையும் இங்கு கவனிக்க வேண்டி உள்ளது.

இதற்கு நடுவில், அதிமுகவின் தோழமை கட்சிகள், எடப்பாடியுடன் பேசி சமரசம் ஏற்படுத்த முனைவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.. ஆனால், அது என்னவாயிற்று என்றே தெரியவில்லை.
வாசன்: சில நாட்களுக்கு முன்பு நமக்கு ஒரு பிரத்யேக செய்தி கிடைத்தது.. அதாவது, எடப்பாடி பழனிசாமியும், தமாகா தலைவர் ஜிகே வாசனும் கோவை விமான நிலையத்தில், எதிர்பாராமல் சந்தித்து கொண்டார்களாம். அப்போது, கிட்டத்தட்ட ஒரு மணிநேரம், இவர்கள் 2 பேரும் பேசியதாக தெரிகிறது.
இதில் பெருமளவு ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தது வாசன் தானாம்.. "கூட்டணி பிரிவு நமக்கு நல்லதல்ல, திமுக எதிர்ப்பு அணிகள் நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும்... அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் இப்படி எல்லாருமே ஒரே அணியாக நின்றால் எளிதில் வெற்றி பெற முடியும். இந்த வெற்றிதான், வரப்போகும் சட்டமன்ற தேர்தலுக்கு அடித்தளமாக இருக்கும்" என்றெல்லாம் வாசன் சொன்னாராம்.
ரியாக்ஷன்: ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் பெரிய அளவில் எந்த ரியாக்ஷனும் காட்டப்படவில்லையாம்.. அதிமுக பற்றி அண்ணாமலை உதிர்த்த கருத்துக்களும், மேலிடத்தின் பாராமுகமும் அளவுக்கு அதிகமாகவே மனவருத்தத்தையும் அதிருப்தியையும் தந்துவிட்டதாக எடப்பாடியின் பேச்சுக்கள் வாசனிடம் இருந்ததாம். அந்தவகையில், பாஜகவுடன் கூட்டணி வைக்க போவதில்லை என்ற முடிவில் எடப்பாடி பழனிசாமி இப்போதுவரை உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது. இதுகுறித்து ஒரு ஸ்பெஷல் தகவல் நமக்கு கிடைத்துள்ளது.
அதாவது, "5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு எதிராக இருக்கும் என்று மூத்த அமைச்சர்களிடம் சொல்லி வந்திருந்தாராம் எடப்பாடி பழனிசாமி.. இதற்காக, 5 லட்சம் ரூபாய் பந்தயமும் அவர்களிடம் கட்டினாராம்.
2 விஐபி: ஆனால், 3 மாநிலங்களில் பாஜகவுக்கு வெற்றி கிடைத்துவிட்டது. இந்நிலையில், எடப்பாடிக்கு நெருக்கமான 2 விஐபி அதிமுக முக்கிய பிரமுகர்கள், எடப்பாடி பழனிச்சாமியிடம், "அண்ணே நீங்க தோத்துப் போய்ட்டீங்க.. நாங்க ஜெயிச்சிட்டோம்.. அதனால, தலா 5 லட்ச ரூபாய் எங்களுக்கு நீங்க கொடுங்க" என்று கேட்டார்களாம்.
அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, "பந்தயம் நான்தானே கட்டினேன்.. நீங்க எதிர்த்து பந்தயம் கட்டலையே? என் சவாலை ஏத்துக்கிட்டிருந்தீங்கன்னா பேசியபடி கொடுத்திருப்பேன்" என்றாராம்.
சுவாரஸ்யம்: இப்படி சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்த நிலையில், இவர்களது பேச்சு, சீரியஸான அரசியலை நோக்கியும் திரும்பியிருக்கிறது. அப்போது நிர்வாகிகள் எடப்பாடியிடம், "2024-ல் மீண்டும் மோடி ஆட்சி தான். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியெல்லாம் வராது. தமிழ்நாட்டிலும் பாஜகவின் க்ராஃப் உயர்ந்துதான் இருக்கு. திமுக அரசு மீது எல்லா தரப்பு மக்களும் அதிருப்தியில் தான் இருக்காங்க.
இந்த மழை வெள்ள பாதிப்பில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில், ஒரு தொகுதியில்கூட திமுக ஜெயிக்க முடியாது. அதனால், அதிமுக-பாஜக கூட்டணி உறவு புதுப்பித்தால் திமுகவை வீழ்த்திவிடலாம்" என்று வலியுறுத்தியுள்ளனர்.
விஐபி பிரமுகர்கள்: விஐபி பிரமுகர்கள் 2 பேரின் இந்த யோசனையை ஏற்க மறுத்துவிட்டாராம் எடப்பாடி பழனிசாமி.. "உறவு முறிந்தது முறிந்ததாகவே இருக்கட்டும்... இப்போதைக்கு பாஜக பத்தின சிந்தனை எதுவுமே வேண்டாம்" என்று மட்டும் பட்டும்படாமல் சொல்லியிருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி..
ஆக, இப்போதுவரை, பாஜகவுடனான கூட்டணி முறிந்தது முறிந்ததுதான் என்பதில், எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது. எனினும், பாஜக மேலிடம் பற்றியோ, பாஜக செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தோ, மேலிட தலைவர்களை பற்றியோ, சித்தாந்த ரீதியாக விமர்சிக்கும் ஆளுநரின் பேச்சு குறித்தோ, எடப்பாடி தரப்பு இதுவரை எந்த கருத்துமே சொல்லவில்லையே ஏன்?? என்று திமுக கேள்வி எழுப்பி வருவதையும் இங்கு நாம் நினைவுகூர வேண்டியிருக்கிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications