ச்சே.. "மிஸ் பண்ணிட்டாரா" எடப்பாடி.. கிட்ட வந்தும் போயிடுச்சே.. புதுசா "முளைத்த" குழப்பம்.. இது வேறயா
எடப்பாடி பழனிசாமி, இரட்டை இலை எளிதாக கிடைப்பதை தவறவிட்டுவிட்டார்களா
சென்னை: வரப்போகும் இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னம் பிரச்சனை ஓரளவுக்கு தீர்ந்தாலும், எடப்பாடி பழனிசாமி டீமில் ஒருவித நெருடலும், அப்செட்டும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. என்னவாம் அது?
முன்னதாக, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு, கட்சி சார்பில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் நேரில் சமர்பித்தார் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசைன்.
அந்த ஆவணத்தில் முக்கியமான தகவல்களும் தரவுகளும் இடம் பெற்றிருந்தன.. முக்கியமாக, எடப்பாடி பழனிசாமி அறிவித்த தென்னரசுக்கு 2501 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்மகன் உசேன்
இதையடுத்து, அதிமுக வேட்பாளர் தென்னரசு தான் என்பது உறுதி செய்யப்பட்டது.. அதாவது, மொத்தமுள்ள உறுப்பினர்களில் 2665 பேரில் தென்னரசுக்கு எதிராக ஒரு படிவம் கூட அவைத்தலைவரிடம் சமர்பிக்கப்படவில்லை என்பதே தமிழ்மகன் உசேன் தாக்கல் செய்த ஆவணத்தின் முக்கிய சாராம்சமாகும். இதையடுத்து, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் களம் இறக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டது.

கிரீன் சிக்னல்
இரு தரப்பும் இடைத்தேர்தலில் போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளதால், ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளார்.. இதனால் எடப்பாடிக்கு சிக்கல் தீர்ந்துள்ளது என்பதுடன், இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் குழப்பம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. இரட்டை இலை சின்னத்தில் அதிமுக வேட்பாளர் களம் காண்பதும் கிட்டத்தட்ட உறுதியாகி வருகிறது. ஆனால், அதிமுகவின் வெற்றிக்காக பாடுபடுவோம் என தெரிவித்தவர்கள், தென்னரசுக்கு வாக்கு கேட்க மாட்டோம் இரட்டை இலை சின்னத்திற்கு தான் வாக்கு கேட்போம் என்பதையும் ஓபிஎஸ் தரப்பினர் தெளிவுபடுத்தி உள்ளனர்.

பின்வாங்கல்
ஓபிஎஸ் பின்வாங்கிவிட்டதாக எடப்பாடி தரப்பும், கட்சிக்காக விட்டுக்கொடுத்து விட்டதாக ஓபிஎஸ் தரப்பும் சொல்லிவரும் நிலையில், இன்னொரு குழப்பம் எடப்பாடி டீமில் ஏற்பட்டுள்ளதாம்.. காரணம், அவைத்தலைவர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக ஓபிஎஸ் அணி முன்பே குற்றம்சாட்டியிருந்தது.. மேலும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிட இருப்பதாகவும் கூறப்பட்டது.. இதைதான், அதிமுகவின் சீனியர்களுடனும், வழக்கறிஞர்களுடனும் இரண்டு நாளாக விவாதித்தபடி இருந்தாராம் எடப்பாடி பழனிசாமி.

2 பாயிண்ட்ஸ்
ஓபிஎஸ் தரப்பின் எதிர்ப்பு விசயங்கள்தான் இதில் விவாதிக்கப்பட்டது... அப்போது, "பொதுக்குழுவில் 99 சதவீத பெரும்பான்மை நமக்குத்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில், சுப்ரீம்கோர்ட் சுட்டிக்காட்டியதன் அடிப்படையில் ஓபிஎஸ்சின் வேட்பாளர் பெயரையும் படிவத்தில் நாம் இணைத்திருக்க வேண்டும்... ஓபிஎஸ் தரப்புக்கும் வாய்ப்பு தந்தது போல ஆகியிருக்கும்.. தமிழ்மகன் உசேனும் நடுநிலை தவறாமல் நடந்து கொண்டார் என்ற கருத்தும் உருவாகியிருக்கும். அதுமட்டுமல்ல, ஓபிஎஸ்சின் வேட்பாளர் பெயரை படிவத்தில் இணைத்து பொதுக்குழுவின் ஆதரவை கேட்டிருந்தாலும் நம் வேட்பாளருக்குத்தான் பெரும்பான்மை ஆதரவு கிடைத்திருக்கும்.

மிஸ் பண்ணிட்டோமே
அப்படிச் செய்யாமல், ஓபிஎஸ் தரப்பின் வேட்பாளரை தவிர்த்தது மாபெரும் தவறு... இரட்டை இலையை கைப்பற்ற நமக்கு நல்ல சான்ஸை உச்சநீதிமன்றமே உருவாக்கி தந்த நிலையில், அதனை மிஸ் பண்ணிட்டோம்னுதான் தோணுகிறது" என்று எடப்பாடியிடம் ஆதங்கப்பட்டுள்ளனர். அவர்கள் சொன்ன பாயிண்டையும், எடப்பாடி பழனிசாமி சிந்தித்து வருகிறாராம்.. இதில் இன்னொன்றையும் சொல்கிறார்கள், ஒவ்வொருமுறையும் கட்சியின் நலனுக்காக ஓபிஎஸ் விட்டுக் கொடுத்து வந்த நிலையில், இந்த முறையும் கட்சிக்காக இலையை விட்டுக்கொடுத்து விட்டதை, தொண்டர்களிடம் கொண்டு செல்ல ஓபிஎஸ் டீம் தயாராகி வருகிறதாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications