வைகோ உடம்பில் உப்பு.. ஈவிகேஎஸ்ஸூக்கு வாய்தான் பிரச்சனை.. விஜயதாரணிகிட்ட போய் கேளுங்க.. சீறிய அண்ணாமலை
வைகோ, விஜயதாரணி குறித்து அண்ணாமலை பேசிய பிரச்சார வீடியோ இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது
சென்னை: நடக்க போகும் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் உச்சக்கட்ட பரபரப்பில் உள்ள நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலையின் பிரச்சாரத்தை அக்கட்சியினர் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சார களமானது, பரபரப்பாகி கொண்டே வருகிறது.. கட்சி தலைவர்கள் தங்கள் ஆதரவு வேட்பாளருக்காக வீதிவீதியாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அந்தவகையில், அதிமுகவுக்கு ஆதரவாக கூட்டணியில் இருக்கும் பாஜகவினரும் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்... தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஈரோடு இடையன்காட்டு பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

1000 ரூபாய்
வழக்கம்போல், திமுக அரசின் குற்றச்சாட்டுகளை லிஸ்ட் போட்டு விமர்சித்தார்.. குறிப்பாக, திமுக ஆட்சிக்கு வரும் முன்னர் 517 வாக்குறுதிகள் தந்தார்கள்.. ஆனால் அதில் 49 தான் நிறைவேற்றி உள்ளனர். அவர்கள் ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகிவிட்டன. இப்போது இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு ஜெயித்து சட்டசபைக்குள் சென்றால் தான் திமுகவினர் மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள்.. தாய்மார்களுக்கு மாதம் 1000 ரூபாய் தருவோம் என்றார்கள்... சிலிண்டருக்கு 100 ரூபாய் தருவோம் என்றார்கள்.. இதில் எதையுமே நிறைவேற்றவில்லை.. ஒரே ஒரு அதிமுக வேட்பாளாரை எதிர்த்து 30 அமைச்சர்கள் ஈரோட்டில் இருக்கிறார்கள் என்றெல்லாம் காரசாரமாக பேசியிருந்தார்.

ஹைலைட்
எனினும், நேற்றைய தினம் அண்ணாமலையின் பேச்சு, திமுகவையும் தாண்டி அதன் கூட்டணி கட்சிகளையும் சேர்த்து விமர்சித்திருந்தது, தமிழக அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.. அத்துடன், சம்பந்தப்பட்ட கூட்டணி கட்சிகளுக்குள்ளேயே ஒருவித தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக அண்ணாமலையின் பேச்சு அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.. குறிப்பாக, காங்கிரஸ் + மதிமுக என 2 கட்சிகளையும் இழுத்து கொண்டுவந்து விமர்சித்திருந்ததுதான், பிரச்சாரத்தின் ஹைலைட்டாக அமைந்ததாக பாஜகவினர் கூறுகிறார்கள்..

வாய்தான் பிரச்சனை
எதிர்தரப்பு வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பற்றி அண்ணாமலை பேசியபோது, "ஈவிகேஎஸ்கிட்ட திட்டு வாங்காதவங்களே இருக்க முடியாது.. அவர்கிட்ட ஆபாச பேச்சுக்களில் சிக்காதவர்களே யாரும் கிடையாது.. வாய் தான் அவருக்கு பிரச்சனை.. அரசியலில் வாய்தான் மூலதனம் என்பது அனைவருக்கும் தெரியும்.. இசைஞானி இளையராஜாவுக்கு பாரத பிரதமர் மோடி, ராஜ்யசபா எம்பி பதவி தந்தபிறகு, இளையராஜாவை மிகவும் கீழ்த்தரமாக பேசினார் இளங்கோவன்.. இது ஒரு உதாரணம்தான்.. ஆனால், மக்களை சமநிலைப்படுத்துகிறாரா? பெரியாரை பற்றி பேசுகிறாரே, சமூக நீதி என்பது அவர் குடும்பத்தில் இருக்கிறதா? என்றால் அதுவும் கிடையாது.

விஜயதாரணி
ஆளுமைக்கு பெயர்போனவர்கள் புரட்சித்தலைவி ஜெயலலிதா.. ஒரு ஆளுமை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் அவர்தான்.. சில பேருக்கு மட்டும்தான் அந்த ஆளுமை இருக்கும்.. எல்லாருக்குமே, சாதாரணமாக அந்த ஆளுமை வந்துவிடாது. அப்படிப்பட்டவரையே மிகவும் தரக்குறைவான வார்த்தைகளில் இழிவாக பேசியவர் ஈவிகேஎஸ்... அவ்வளவுஏன், அவரது சொந்த கட்சியிலேயே இதற்கு உதாரணம் இருக்கிறது.. பெண்களை எவ்வளவு தரக்குறைவாக நடத்துவார் என்று அந்த கட்சியின் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணிகிட்ட கேட்டால் அவர் சொல்லுவார் ஈவிகேஎஸ் பற்றி.. சொந்த கட்சிக்குள்ளேயே பெண்களை தரக்குறைவாக நடத்துவார் என்பதை விஜயதாரணியே சொல்லுவார்.. போய் கேளுங்க..

உப்பு வைகோ
வைகோ இப்படி ஓடி ஓடி ஓட்டு கேட்டுட்டு இருக்காரே... வைகோவை பற்றி இளங்கோவன் அன்று எவ்வளவு கீழ்த்தரமாக பேசினார்? இவரை பற்றி வைகோ எவ்வளவு கீழ்த்தரமாக பேசினார் என்பதை மக்கள் அறிவார்கள்.. அந்த கூட்டணி என்பதே ஒரு முரண்பாடான கூட்டணி.. உண்மையாலுமே, வைகோ உடம்பில் ஓடும் ரத்தத்தில் உப்பு கொஞ்சம் அதிகமாக ஓடுதுன்னா, பிரச்சாரத்துக்கே அவர் வரக்கூடாது.. வைகோவால் கிடைக்கக்கூடிய 2, 3 ஓட்டுக்களும் கிடைக்காமல் போய்விடும்" என்றார் அண்ணாமலை. இந்த பேச்சுக்கள்தான் இணையத்தில் வீடியோவாக வெளியாகி உள்ளது..

வைகோ எங்கே
அத்துடன், ஈவிகேஎஸ் - விஜயதாரணி இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உட்கட்சி பிரச்சனையை நினைவூட்டியும் கருத்துக்களை பதிவிட்டும் வருகிறார்கள். மற்றொருபக்கம், திமுகவில் வைகோ அன்று எழுப்பிய வாரிசு அரசியல் விமர்சனங்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.. திமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தை பாஜக நேற்றைய தினம் மேற்கொண்டாலும், காங்கிரஸ், மதிமுக, மநீம என கூட்டணி கட்சிகளின் பிளாஷ்பேக்குகளையும் சேர்த்தே விமர்சித்திருந்தது, இந்த நேரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சாரமாக பார்க்கப்பட்டு வருகிறது.

விஜயதாரணி
மற்றொருபக்கம், சொந்த கட்சிக்குள் எவ்வளோ பிரச்சனைகள் இருக்கலாம்.. அதெல்லாம் உட்கட்சி பிரச்சனை.. அதுவும் நடந்து முடிந்துபோன பிரச்சனை. இதையெல்லாம் பிரச்சாரத்தில் பேசலாமா? அப்படி பார்த்தால், பாஜகவுக்குள்ளும் உட்கட்சி மோதல்கள் நடந்தது இல்லையா? இதை திமுக கூட்டணி பிரச்சாரத்தில் சொல்லி கொண்டா இருக்கிறது? ஆக்கப்பூர்வமான, இனி நடக்க போகிற விஷயத்தை பிரச்சாரத்தில் பேச வேண்டியதுதானே? என்று மற்றொரு சாரார் இந்த பிரச்சாரம் குறித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

டேமேஜ்
முன்னதாக, அண்ணாமலை பேசியபோது, உதயநிதியை சீண்டியிருந்தார்.. வழக்கமாக எடப்பாடி பழனிசாமிதான் பிரச்சாரங்களில் உதயநிதியை டேமேஜ் செய்து பேசிவரும் நிலையில், அண்ணாமலையும் உதயநிதி விவகாரத்தை இந்த முறை கையில் எடுத்தார்.. "திமுகவினர் மக்களை பட்டி, பட்டியாக அடைத்து வைத்து திமுக கொடியை அவர்களிடம் கொடுக்கிறார்கள்... அடைத்து வைத்த மக்களுக்கு 1000, 1500 ரூபாய் கொடுக்கிறார்கள். கொடி பிடித்து நடந்து சென்றால் 500 ரூபாய் கொடுக்கிறார்கள். எங்கும் இல்லாத அநியாயமாய் தென்னரசுக்கு எதிராக 30 அமைச்சர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்.

இமேஜ் டேமேஜ்
திமுகவின் பட்டிக்கு சென்று வந்த ஒருவர் என்னிடம் சொன்னார், பட்டிக்கு சென்று வந்தது கூட பிரச்சனை இல்லை. 3 மணி நேரம் உதயநிதி படத்தைப் போட்டுவிட்டார்கள். இதைவிடக் கொடுமை இல்லை.. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதியை நிறைவேற்றியதைக் காட்டிலும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் ரிலீஸ் செய்த படங்களின் எண்ணிக்கை தான் அதிகம். மொத்தமாக திமுக 49 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. ஆனால் ரெட் ஜெயண்ட் கடந்த 22 மாதத்தில் 60 படங்களுக்கு மேல் ரிலீஸ் செய்திருக்கிறது" என்று கடுமையாக விமர்சித்த அண்ணாமலையின் பேச்சுக்களை திமுகவும் உற்றுநோக்கி வருகிறது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications