பஸ்ஸூக்குள்ளேயே.. புளியந்தோப்பு அனிதாவை தெரியுமா.. அவர் கன்னத்திலே "கை" வைச்சிட்டாங்களே.. அடேங்கப்பா
புளியந்தோப்பு பகுதியில் கண்டக்டர் - பெண் பயணியின் மோதல் வீடியோவாக வந்துள்ளது
சென்னை: ஓடும் பஸ்ஸுக்குள் நடந்த விவகாரம் வீடியோவாக வெளிவந்து அதிர்ச்சியை கிளப்பி விட்டு வருகிறது.. இதுகுறித்த போலீஸ் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
நாளுக்கு நாள் அரசு பஸ் கண்டக்டர்கள், டிரைவர்களின் பாதுகாப்புகள் அதிகமாகிவிட்டது.. பஸ் படிக்கட்டிலேயே தொங்கி கொண்டு போகும் மாணவர்களால், ஏராளமான இன்னல்களுக்கு ஆளாவது இந்த அரசு கண்டக்டர்களும், டிரைவர்களும்தான்.
சில நாட்களுக்கு முன்புகூட, ஸ்ரீபெரும்புதுாரில் பஸ் டிரைவர், கண்டக்டர் மீது அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. அதேபோல, சில அரசு பஸ் கண்டக்டர், டிரைவர்களின் அட்டகாசமும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.

பஸ் பாஸ்
இதனால் பள்ளி மாணவ மாணவிகள் அவதிக்கு உள்ளாகிவிடுகிறார்கள்.. பஸ்ஸில் பயணிக்கும் மாணவர்களிடம் ஓசியில் பஸ்ஸில் வரக்கூடாது.. காசு கொடுத்து வர்றவங்க மட்டும்தான் சீட்டில் உட்கார வேண்டும், பஸ் பாஸ் வைத்து இருக்கும் ஸ்கூல் பிள்ளைகள் நின்று கொண்டு வரவேண்டும்' என்று சில இடங்களில் கண்டக்டர் திட்டிய வீடியோக்களும் வெளியாகி உள்ளன. இந்நிலையில், சென்னையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த சம்பவம் வீடியோவாகவும் வெளிவந்துள்ளது.

மயிலாப்பூருக்குள்ளே
புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் அனிதா.. 30 வயதாகிறது.. இவர், மயிலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்... இவர் வியாசர்பாடி கணேசபுரம் பஸ் ஸ்டாப்புக்கு, பஸ் ஏறுவதற்காக நடந்து வந்து கொண்டிருந்தார்.. பெரம்பூர் செல்வதற்காக, பாரிமுனையில் இருந்து பெரியார் நகர் நோக்கி வந்த மாநகர பேருந்து (த.எண் 42 ஏ) பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தது.. அந்த பஸ்ஸை பார்த்ததும், அனிதா ஓடிச்சென்று ஏறிவிட்டார்.

ஓவர் தகராறு
ஓடும் பஸ்ஸில் ஏறியதால், கண்டக்டர் செல்வகுமாருக்கு ஆத்திரம் வந்துவிட்டது. செல்வகுமாருக்கு 42 வயதாகிறது.. இப்படித்தான் பஸ்சில் ஏறுவதா என்று கேட்டுள்ளார்.. வெறும் கண்டிப்புடன் நிறுத்தாமல், தகாத வார்த்தையிலும் திட்டி உள்ளார். இதை கேட்டு அனிதாவுக்கு கோபம் வந்துவிட்டது.. எனவே பதிலுக்கு கண்டக்டரை திட்டினார்.. இருவருக்கும் தகராறு பஸ்ஸிலேயே ஏற்பட்டுள்ளது. இவர்கள் சண்டை போட்டுக் கொண்டே வந்ததில், பெரம்பூர் பஸ் ஸ்டாண்ட் வந்துவிட்டது.. அப்போதும் இருவரின் வாக்குவாதமும் குறையவில்லை..

கன்னம் பழுத்தது
அளவுக்கு மீறி கண்டக்டர் பேசிவிட்டதால், ஆவேசம் அடைந்த அனிதா, கண்டக்டரை பளார் என கன்னத்தில் அறைந்துவிட்டார்..இதை எதிர்பார்க்காத கண்டக்டர் செல்வக்குமார், பதிலுக்கு அவரும் அனிதாவை அறைந்தார். மறுபடியும் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர்.. இதனால், பயணிகள் செய்வதறியாது தவித்தனர்.. இவர்களின் சண்டையையும் நிறுத்த முடியவில்லை.. அதனால், செம்பியம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பழுத்துடுச்சு கன்னம்
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 தரப்பினரிடம் விசாரணை நடத்தினர்.. மறுபடியும் இருவரும் மாறி மாறி புகார் அளித்தனர். இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.. இதுகுறித்து, செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.. வழக்கமாக அடிதடி, சண்டைகள் என்றால், நம் மக்கள் முதல் வேலையாக, அதை செல்போனில் வீடியோ எடுத்துவிடுவார்கள்.. கத்திக்குத்து கொலை என்றாலும் இப்படித்தான் சிலர் வீடியோ எடுத்து கொண்டிருப்பார்கள்.. அதுபோல, இந்த தகராறும் வீடியோவாக வைரலாக பரவி வருகிறது.. இணையவாசிகளும் வழக்கம்போல் தங்கள் கருத்துக்களுடன் கோதாவில் குதித்துள்ளனர்...!!!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications