சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஓட்டை வாய் அண்ணாமலை.." ஆன்லைன் ரம்மி நிறுவன பிரதிநிதிகளை சந்தித்தாரா ஆளுநர் ரவி? முரசொலி காட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: மகாபாரத்தில் இருப்பதால் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க மத்திய அரசு ஆதரிக்கிறதா என்று திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கேள்வி எழுப்பி இருக்கிறது. ஆளுநர் அனுமதி வழங்காத நிலையில் ஆன்லைன் ரம்மி அவசரச் சட்டம் காலாவதி ஆகிவிட்டதாகவும், இதற்கு யார் காரணம் என்பதற்கு ஓட்ட வாய் அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும் என்றும் முரசொலி குறிப்பிட்டு உள்ளது.

இதுகுறித்து திமுக அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி வெளியிட்டு உள்ள அறிக்கையில், "ஆன்லைன் ரம்மியை மொத்தமாகத் தடை செய்ய தி.மு.க. அரசு திட்டமிட்டு அதற்கான அவசரச் சட்டத்தைத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிய நிலையில் - ஆன்லைன் ரம்மியை விதி முறைப்படி எப்படி நடத்தலாம் என்று அதற்கான விதிகளை வகுக்கத் தொடங்கி இருக்கிறது பா.ஜ.க. அரசு.

ஆன்லைன் ரம்மியைத் தடை செய்ய தமிழ்நாடு அரசு அவசரச் சட்டத்தைத் தயாரித்தது. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் இப்படி ஒரு அவசரச் சட்டம் உருவாக்கப்பட்டது. அது உயர்நீதிமன்றத்தில் நிற்கவில்லை. வலுவான சட்டத்தை மீண்டும் உருவாக்குங்கள் என்று சென்னை உச்சநீதி மன்றம் சொன்னது. தி.மு.க. அரசு உருவானதும் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த பிரச்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அணுகினார்கள்.

நேர்காணல் செய்ய விரும்புகிறேன்.. என்னை எதிர்கொள்ள அண்ணாமலை தயாரா? காயத்ரி ரகுராம் சவால்! நேர்காணல் செய்ய விரும்புகிறேன்.. என்னை எதிர்கொள்ள அண்ணாமலை தயாரா? காயத்ரி ரகுராம் சவால்!

 சந்துரு ஆணையம் பரிந்துரை

சந்துரு ஆணையம் பரிந்துரை

இது தொடர்பாக நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. மக்கள் கருத்து கேட்கப்பட்டது. "ஆன் லைன் ரம்மி விளையாட்டுகளை முறைப்படுத்த இயலாது என்பதால் தடை செய்ய வேண்டும்" என்று அந்த ஆணையம் பரிந்துரை செய்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற ரம்மி கேம்களை தடை செய்வதற்கான சட்டம் உருவாக்கப்பட்டது.

ஆளுநர் கேட்ட சந்தேகம்

ஆளுநர் கேட்ட சந்தேகம்

அதன்பின் சட்டசபையில் அக்டோபர் 19ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் அவர் சில சந்தேகங்களைக் கேட்டார். அதற்குப் பதிலும் தரப்பட்டு விட்டது. ஒரு சட்ட மசோதாவை உருவாக்குவதற்கு இத்தகைய படிநிலைகள் உண்டு. அதனைத் தான் தி.மு.க. அரசு செய்தது.

அண்ணாமலை மீது விமர்சனம்

அண்ணாமலை மீது விமர்சனம்

அதற்குள், 'ஆன்லைன் ரம்மி சரியா. தவறா என்று கருத்துக் கணிப்பு நடத்திய ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சிதான்" என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சொன்னார். எல்லாம் தெரிந்தவரைப் போல உளறுவது' அவரது பாணி. அந்த பாணியை ஒரு அரசாங்கம் கடைப்பிடிக்க முடியாது. அக்டோபர் 19ஆம் தேதி அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆறு வாரங்கள் வரைதான் அது செல்லும்.

ஓட்டை வாய் அண்ணாமலை

ஓட்டை வாய் அண்ணாமலை

ஆளுநர் அனுமதி வழங்காத நிலையில் அந்த அவசரச் சட்டம் காலாவதி ஆகிவிட்டது. ஆன்லைன் ரம்மி தொடர்கிறது. இதற்கு யார் காரணம்? 'ஓட்டை வாய்' அண்ணாமலை தான் பதில் சொல்ல வேண்டும்! ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பின் நீர்வாகிகள் சந்தித்ததாகக் கூறப்பட்டது. இந்தச் சந்திப்பு உண்மையில் நடைபெற்றதா என்று தெரியவில்லை. சந்தித்ததாக செய்தி வெளியானதை ஆளுநர் மாளிகை இதுவரை மறுக்கவில்லை.

ஆன்லைன் ரம்மி நிர்வாகிகள்

ஆன்லைன் ரம்மி நிர்வாகிகள்

இது தொடர்பாக அண்ணாமலையிடம் கேட்கப்பட்டபோது, "இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதுபற்றி பேச முடியாது" என்று சொன்னார். அப்போது அண்ணாமலை. "ஆன்லைன் சூதாட்டம் கொடுமையானது. அதை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் கொள்கை. அதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது" என்று சொன்னார். ஆளுநரைச் சந்தித்து இது தொடர் பாக பா.ஜ.க. வலியுறுத்தியதாகவும் சொன்னார்.

பாஜக விரும்பவில்லை

பாஜக விரும்பவில்லை

தி.மு.க. அரசுதான் கால தாமதம் செய்கிறது என்றும் சொன்னார். தி.மு.க. அரசு தான் அவசரச் சட்டத்துக்கு அரசாணை போடவில்லை என்றும் சொன்னார். ஆனால் இன்றைய நிலைமை என்ன தெரியுமா? ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு விரும்பவில்லை என்பது அம்பலமாகி இருக்கிறது.

200 மில்லியன் டாலர் தொழில்

200 மில்லியன் டாலர் தொழில்

"ஆன்லைன் விளையாட்டு என்பது 200 மில்லியன் அமெரிக்க டாலர் தொழிலாகும். இதனை புத்தாக்க நிறுவனங்கள் எனப்படும் ஸ்டார்ட் அப் தொழிலாகவே பா.ஜ.க. அரசு பார்க்கிறது" என்று ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சொல்லி இருக்கிறார்.

சூதாட்ட அரசியல்

சூதாட்ட அரசியல்

தமிழ்நாடு, ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்வதற்கு சட்டம் கொண்டு வந்துள்ள நிலையில் இதனை வர்த்தகமாகப் பார்ப்பதாகவும், புத்தாக்க நிறுவனமாகப் பார்ப்பதாகவும் பா.ஜ.க. அமைச்சர் சொல்வது சூதாட்ட அரசியல் அல்லவா? இதை சில மாநில அரசுகள் தடை செய்ய அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளார்களே?' என்று அமைச்சரிடம் கேட்கப்பட்டபோது. "உள்ளூர் மாநிலச் சட்டங்கள் மூலமாக சிக்கல்கள், முரண்பாடுகள் இல் லாதவாறு ஆன்லைன் விளையாட்டு வளர்ச்சி அடைய வேண்டும்" என்று அவர் சொல்லி இருக்கிறார்.

அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

ஆன்லைன் விளையாட்டு நிதி நிறுவனங்களுக்கும் அந்த விளையாட்டுகளை விளையாடும் நிறுவனங்களுக்கும் பிப்ரவரி மாதத்துக்குள் விதிமுறைகளை வகுத்துவிடுவோம் என்று சொல்லி இருக்கிறார் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர். அப்படிப் பார்த்தால், ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய பா.ஜ.க. அரசு உடன்படாது என்றே தெரிகிறது.

பணமே நோக்கம்

பணமே நோக்கம்

"ஆன்லைன் விளையாட்டுகளின் முடிவுகளை வைத்து பந்தயம் நடத்த அனுமதி அளிக்கப்படாது" என்று சொல்லி இருக்கிறார் பா.ஜ.க. அமைச்சர். ஆன்லைன் ரம்மி விளையாட்டே பணத்தால்தான் நடக்கிறது. தனித்தனியாக நான்கைந்து பேர் விளையாடி மகிழ்ந்ததை இன்றைய வர்த்தக உலகம் ஆன்லைனிலும் கொண்டு வந்துவிட்டது. பணமே இந்த விளையாட்டின் நோக்கமாக உள்ளது.

தற்கொலை

தற்கொலை

பொழுது போக்கு விளையாட்டாக இருந்தால் யாராவது போட்டி முடிந்ததும் தற்கொலை செய்து கொள்வார்களா? சூதாட்டமாக இருப்பதால்தானே தோல்விக்கும். பண இழப்புக்கும், கடனுக்கும், ஏமாற்றத்துக்கும் உயிர்களைப் பலரும் துறக்கிறார்கள்? நீங்கள் விளையாட வாருங்கள். விளையாடினால் எவ்வளவு சம்பாதிக் கலாம் என்பதுதான் இந்த நிறுவனங்களின் தூண்டில் விளம்பரங்கள் ஆகும். இதுவே அமைச்சர் சொல்வதற்கு எதிரானதுதானே? நடிகர்கள் சொல்கிறார்கள்.

மகாபாரதத்தில் இருந்ததால் ஆதரவா?

மகாபாரதத்தில் இருந்ததால் ஆதரவா?

'நான் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறேன்' என்று சாமானியர்களையும் சொல்ல வைக்கிறார்கள். போனஸ் பணம் முதலில் தரப்படுகிறது. இதனால் வலையில் வீழ்த்தப்படுகிறார்கள். லாயல்டி ரிவார்ட் தரப்படுகிறது. இழந்த பணத்தை மீட்கவே மீண்டும் மீண்டும் விளையாடுகிறார்கள். மொத்தமாக இழந்து, தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால் இதனைத்தான் புத்தாக்கத் தொழில் என்கிறார் பா.ஜ.க. அமைச்சர். இது பழைய தொழில்தான். மகாபாரதத்திலேயே இருக்கிறது என்பதற்காக ஆதரிக்கிறார்களா?" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

English summary
DMK's official daily Murasoli has questioned whether the Union government supports banning online rummy because of Mahabharat. It also questioned Annamalai that, "Did Governor Ravi met Online Rummy companies?"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X