Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எனக்கேநானே பாதிக்கப்பட்டேன், நீதி கிடைக்கவில்லை! நடிகர் சங்கம் என்ன செய்தது? நடிகை விசித்ரா வேதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பல ஆண்டுகள் முன்பாக புகார் அளித்தேன் என்றும் ஆனால், அது குறித்து ஒரு விசாரணை கூட நடத்தப்படவில்லை என்றும் நடிகை விசித்ரா தெரிவித்துள்ளார்.

நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கையானது மலையாள சினிமா உலகையே புரட்டிப் போட்டிருக்கிறது. இதன் எதிரொலியாக மலையாள நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து மூத்த நடிகர் மோகன்லால் பதவி விலகினார். கூடவே சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் 17 பேர் ராஜினாமா செய்தனர். ஒட்டுமொத்த சங்கத்தின் மீதும் நீதிபதி ஹேமா கமிஷன் முன் சக நடிகைகள், திரைத்துறையில் வேலை பார்க்கும் பெண்கள் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். சொல்லப் போனால், இந்த விவகாரத்தில் கேரள நடிகர்கள் சங்கம் பெண்களுக்குப் பாதுகாப்பு தர தவறி இருக்கிறது என்றே கமிஷன் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

vishal vichitra hema committee

இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ஊர்வசி கூட விரிவாக ஒரு பேட்டி அளித்து இருந்தார். கேரளாவைத் தொடர்ந்து இந்த விவகாரம் தமிழ் சினிமா பக்கமும் ஒரு புயலைக் கிளப்பி இருக்கிறது. இது தொடர்பாகப் பேசிய தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், '10 பேர் கொண்ட ஒரு குழுவை அமைப்போம்' என்று கூறியிருக்கிறார். மேலும் இதைப் போன்று நடந்து கொள்பவர்களைத் தைரியமாகச் செருப்பால் அடிக்க வேண்டும் என்றும் பேசி இருந்தார்.

இவர் மீது சில ஆண்டுகள் முன் ஸ்ரீரெட்டி என்பவர் சில பாலியல் குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார். அது குறித்து விஷால், 'நான் அவரை நேரில் இதுவரை சந்தித்ததே இல்லை. அவரை சில ஆண்டுகள் முன்னால் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனார். அதன்மூலம் தான் அவரைப் பற்றி அறிந்தேன். இங்கே ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் யார் மீது உண்மையே இல்லாமல் கூட குற்றஞ்சாட்டை முன்வைக்கிறார்கள். அதில் உண்மை தன்மை என்ன என்று நாம் பார்க்கவேண்டும். நாளை என் மீது கூட மிரட்டுவதற்காகப் பொய்யாக அப்படி ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படலாம்" என்று கூறியிருந்தார்.

விஷால் அமைக்க உள்ள 10 பேர் கொண்ட குழு பற்றி எந்த விதமான அறிவிப்பும் நடிகர், நடிகைகளுக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை. நடிகர் சங்கத்தின் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்துக் கூட சக நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்துவதில்லை என்ற ஒரு கருத்தை முன்வைத்துள்ளார் நடிகை விசித்ரா. அவர் தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்து அளித்த புகாருக்குச் சங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார். இது குறித்துப் பேசிய நடிகை விசித்ரா, "நானே நடிகர் சங்கத்தில் சில ஆண்டுகள் முன்னதாக பாலியல் புகார் ஒன்று கொடுத்திருந்தேன். இந்தப் பிரச்சினை இப்போதுதான் நடப்பதைப் போன்று பேசுகிறார்கள். நடிகர் விஷால் இப்போதுதான் கமிட்டி அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் என்று சொன்னார்கள். ஆனால், சங்க உறுப்பினர்களாக எங்களுக்கு அப்படி எந்த ஒரு அறிக்கையும் வரவில்லை. நான் புகார் கொடுக்கும்போது இருந்த பொறுப்பாளர்கள் அனைவரும் மாறிவிட்டனர். அவர்கள் யாரும் பதவியில் இல்லை.

vishal vichitra hema committee

பாலியல் பிரச்சினை தொடர்பாகப் புகார் அளித்தால், சங்கத்திற்கு உள்ளாகவே உள்ள நிர்வாகிகள் பேசி முடித்துவிடுகிறார்கள். அது பற்றி செய்திகள் வெளியே தெரிவதில்லை. நான் கேள்விப்பட்டவரை இதுதான் நடக்கிறது. நான் புகார் கொடுத்த போது ஸ்டெண்ட் மாஸ்டர் யூனியன் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்கள். எனக்குத் தமிழ்த் திரைப்பட உலகில் பாலியல் சீண்டல் நடக்கவில்லை. தெலுங்கு பட உலகில்தான் எனக்குப் பிரச்சினை வந்தது. அப்படிப் பார்த்தால் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு சங்கங்களும் சேர்ந்து பேசிதான் தீர்வு காண வேண்டும். எனக்குத் தொல்லை கொடுத்தவர் யார்? அது எந்தப் படப்பிடிப்பில் நடந்தது? என்பன போன்ற எல்லா விவரங்களையும் புகாரில் கூறி இருந்தேன்.

எனது புகார் தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் சில முயற்சிகளை எடுத்தார்கள். ஆனால், தெலுங்கு படச் சங்கத்திடம் இருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. இரண்டு சங்க நிர்வாகிகள் பேசினார்கள். நான் எந்த நபர் மீது புகார் கொடுத்தேனோ, அவரை அழைத்து விசாரிக்கவே இல்லை. புகார் தொடர்பாக தமிழ்நாடு ஸ்டெண்ட் யூனியனும் தெலுங்கு யூனியனும் பேசியதுடன் பிரச்சினை அப்படியே கிடப்பில் போடப்பட்டது. உரிய நபர் ஒரு வருத்தம் கூட தெரியவிக்கவில்லை. அதை நான் கேட்டபோது, 'விவகாரத்தை இதற்கு மேல் பெரிதுபடுத்தாமல் விட்டுவிடுங்கள்' என்று எனக்கு அறிவுரை தந்தார்கள்.

அப்போது சரத்குமார் சங்க நிர்வாகத்திலிருந்தார். அவர்,'சட்டரீதியாக இதை நீ அணுகி இருக்கவேண்டும். நடிகர் சங்கத்திற்கு வந்திருக்கக் கூடாது' என்றார். அதன்பின்னர் நடிகர் சங்கத்தால் பிரச்சினைக்கு ஒரு தீர்வையும் ஏற்படுத்தித் தர முடியாது என்றுதான் சட்டரீதியாக நான் பின்னால் நடவடிக்கை எடுத்தேன்" என்று கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+