"அசைவேயில்ல.. எப்புடி இப்படி எடப்பாடி? என்ன சொன்னாலும் ஏறாது".. நொந்துபோன பிரதீப்.. அப்பறம் சீனியர்
சென்னை: ஓபிஎஸ் தரப்பில் தொடர் சறுக்கல்கள், தொடர் அப்செட்கள் நிலவி வருகிறது.. இதையடுத்து, வேதனை பதிவுகளும், நொந்துபோன வார்த்தைகளும் மெல்ல மெல்ல வெடித்து கிளம்பி வருகின்றன..!!
அதிமுக பொதுக்குழுவில் தங்களை நீக்கிய தீர்மானங்கள், பொதுச் செயலாளர் பதவியை உருவாக்கியது, பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை கடந்த 22-ம் தேதி விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு, தீர்ப்பை தள்ளி வைத்திருந்தார்.. இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், வழக்குகள் இன்று பட்டியலிடப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

உத்தரவு
ஓபிஎஸ் தரப்பு எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்துவிட்டு, நீதிபதியிடம் தெரிவிக்கும்போது, எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.... இன்றையதினம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுமா? இல்லையா? என்பது தெரிந்துவிடும் என்று அதிமுகவினர் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், வழக்கில் தீர்ப்பு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நொந்து போன தலைவர்
ஒற்றை தலைமை விவகாரம் வெடித்ததில் இருந்தே, சட்டரீதியான தீர்வை மட்டுமே ஓபிஎஸ் பலமாக நம்பி வருகிறார்.. அதனால்தான் ஒவ்வொருமுறை எடப்பாடி தரப்புக்கு சாதகமாக தீர்ப்புகளும், உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்ட போதும்கூட, நீதிமன்றத்தை மீண்டும் மீண்டும் நாடி வருகிறார்.. ஆனால், சமீபகாலமாகவே, ஓபிஎஸ்ஸுக்கு தொடர் சறுக்கல் ஏற்பட்டுக் கொண்டுள்ளது.. எடப்பாடிக்கு சாதகமாக வரும் நீதிமன்ற உத்தரவுகளை கண்டு, மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனே அதிர்ந்து போய்விட்டாராம்.. "எல்லாம் தலைகீழாக போகுதே" என்று ஓபிஎஸ் டீம் நொந்து கொண்டுள்ளதாகவும் தெரிகிறது..

ஜெயபிரதீப்
இதைத்தான் நேற்றைய தினம் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் பதிவிட்ட அதிருப்தி ட்வீட்டில் அறிய முடிந்தது.. "காலைப் பிடித்து பதவி வாங்கி, பதவி வாங்கி பணத்தை சேர்த்து, சேர்த்த பணத்தால் கூட்டத்தை கூட்டி, கூட்டத்தை வைத்து பதவி பெற நீதியை நிதியால் வளைத்து, பொய் சூழ்ச்சி வஞ்சகத்தோடு, ரத்தத்தின் ரத்தங்களை பகையாக்கி, தொடர் எட்டு தேர்தல் தோல்விகளால் மக்கள் பாடம் புகட்டினாலும், தனது சுயநலமே பெரிதான கருதி இரு பெரும் தலைவர்கள் உயிரைக் கொடுத்து வளர்த்த பேரியக்கத்தை அழித்துக் கொண்டிருக்கும் பதவிவெறி பிடித்த மனிதனே.

வேதனை பதிவு
தற்போது நாங்கள் என்ன சொன்னாலும் தங்களது அறிவுக்கு ஏறாது. உங்களை சூழ்ந்து இருக்கும் பதவியும் பணமும் உங்களை விட்டு நீங்கும்போது உண்மை தன்மை புரியவரும். தான் செய்தது தவறு என்று தெரிய வரும். அத்தகைய காலத்தினால் வழங்கப்படும் இறைவனின் தீர்ப்புக்காக சோதனைகளோடு போராடி பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கிறோம். கடைக்கோடி உண்மை தொண்டன்" என்று வேதனையுடன் பதிவிட்டிருந்தார். அதுபோலவே, ஓபிஎஸ் ஆதரவாளரும் மூத்த தலைவருமான மருது அழகுராஜ் இன்னொரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதாவது, சட்ட போராட்டங்களில் ஆரம்ப கட்டத்தில் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவு அலை அடித்தாலும், கடைசி தீர்ப்பு என்னவோ எடப்பாடி அணியினருக்குத் தான் சாதகமாக அமைகிறது. இதைதான் தன்னுடைய சந்தேகமாக எழுப்பி இருக்கிறார் மருது அழகுராஜ்.

எப்புடி இப்புடி
"எப்புடி இப்புடி எடப்பாடி.. எடப்பாடி விரும்பும் தீர்ப்புகள் ஏறத்தாழ அவர் விரும்பும் நேரத்தில் அவர் விரும்பும் வடிவத்தில் வருகிறது... ஆனால் எடப்பாடியை அச்சுறுத்தும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு முதல் ஊழல் முறைகேடுகள் உள்ளிட்ட அத்தனை வழக்குகளும் கோமா நிலையிலேயே அசைவற்று. கிடக்கிறதே எப்புடி இப்படி.. #ஒரேகுஷ்டமப்பா.. நீதி மன்றங்களில் எடப்பாடி.. எது கேட்டாலும் கிடைக்குதே எப்படி.. அதுவும் விசாரிக்கும் போது அது நொட்டை இது நொட்டைன்னு எடப்பாடி தரப்பை திட்டிப்புட்டு கடைசியில தீர்ப்பை மட்டும் அந்த எடப்பாடி உத்தமனுக்கு சாதகமாவே எழுதுறாங்களே எப்படி... கோர்ட்டுக்கு போறதும் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குபோறதும் ஒரே மாதிரி இருக்குல்ல.. என்ன நாஞ் சொல்றது?" என்று நொந்துபோய் பதிவிட்டுள்ளார்.

அசையும் அச்சாணி
சட்டம் தங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டாலும்கூட, தொண்டர்கள், நிர்வாகிகள் மீதான நம்பிக்கையை இப்போதுவரை ஓபிஎஸ் டீம் இழக்கவில்லையாம். பண்ருட்டி ராமச்சந்திரன் வழிகாட்டுதல்படி, அவரது அட்வைஸ்படி, ஒவ்வொன்றையும் ஓபிஎஸ் டீம் செயலாற்றி வருவது, லேசான தெம்பை தந்து வருகிறதாம்.. அதனால்தான், கடந்த சில நாட்களாகவே, ஆர்ப்பாட்டம், கண்டன போராட்டம், என வேகம் எடுத்து கொண்டிருக்கிறதாம் ஓபிஎஸ் டீம்.. அதுமட்டுமல்ல, வரப்போகும் தீர்ப்பு எப்படி இருந்தாலும் சரி, திருச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டுவது என்ற முடிவிலும் ஓபிஎஸ் தரப்பினர் இருக்கிறார்களாம்.. "மக்கள் மன்றத்தை நாடுவோம்" என்று பண்ருட்டியார் செய்தியாளர்களிடம் தொடர்ந்து சொல்லி வந்த நிலையில், அதற்கான முன்னெடுப்பைதான், ஓபிஎஸ் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.. அடுத்து என்ன நடக்க போகிறது? தெரியவில்லை.. பார்ப்போம்..!!
-
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
ஆண்டிப்பட்டியில் மீண்டும் ‘சகோதர யுத்தம்’.. அண்ணன் திமுக vs தம்பி அதிமுக.. வெல்லப்போவது யார்? -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications