ஜெயலலிதாவிற்கு கால் இருந்ததா? ஐயப்பனின் அதிர்ச்சி வாக்குமூலம்.. ஆறுமுகசாமி ரிப்போர்ட்டில் பரபர தகவல்
சென்னை: ஜெயலலிதாவிற்கு கால்கள் இருந்ததா என்று இத்தனை நாட்களாக நிலவி வந்த சந்தேகத்திற்கு தற்போது ஆறுமுகசாமி ஆணைய விசாரணை மூலம் முடிவு கிடைத்துள்ளது.
ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போதும், அவர் மரணம் அடைந்த பின்பும் ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியான மிக முக்கியமான செய்தி.. "ஜெயலலிதாவிற்கு கால்களை அகற்றிவிட்டனர்" என்பதுதான்!
அதாவது ஜெயலலிதாவிற்கு கால்களே இல்லை. அவரின் இரண்டு கால்களையும் அகற்றிவிட்டனர் என்று செய்திகள் வந்தன.

கால்கள்
அவரின் கால்களை நீக்கிவிட்டனர் என்று பல்வேறு ஊடகங்கள் கூட போட்டோ ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டு இருந்தன. முக்கியமாக அவர் சவப்பெட்டி சிறிதாக இருந்ததும், அவர் உடல் சிறியதாக இருந்ததாகவும் கூட குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இந்த நிலையில்தான் ஜெயலலிதாவிற்கு கால்கள் இருந்ததா என்று இத்தனை நாட்களாக நிலவி வந்த சந்தேகத்திற்கு தற்போது ஆறுமுகசாமி ஆணைய விசாரணை மூலம் முடிவு கிடைத்துள்ளது. மறைந்த முதல்வரின் விரல்களோ அல்லது கால்களோ துண்டிக்கப்பட்டனவா என்று அப்போதைய தலைமை செயலாளர் ராம் மோகன் ராவிடம் கேட்கப்பட்டபோது, அவர் அதற்காக உணர்ச்சிவசப்பட்டு பதில்களாய் அளித்தார்.

உண்மை என்ன?
அவர் உணர்ச்சிவசப்பட்டு, 27.09.2016 - அன்று மறைந்த முதல்வர் காவிரி நதிநீர்ப் பிரச்சினை தொடர்பான அறிக்கையைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது, மருத்துவமனையில் தனது இருக்கையிலிருந்தபடியே அறிக்கையைக் கூற, தான் மறைந்த முதல்வரின் கால்களுக்கு முன்னர் அமர்ந்திருந்ததாகவும், இக்கிசுகிசுக்கள் கண்டிக்கத்தக்கவை என்றும் கூறினார். மேலும், டாக்டர் சுதா சேஷையன், எம்பாமிங் செய்யும் போது, கால்கள் துண்டிக்கப்பட்டதா என்பதை தான் கவனிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

கட்டை விரல்
சம்பிரதாய முறைப்படி அவரது இரு கால்கட்டை விரல்களையும் துணியால் கட்டியதாக C.W-26 எம். ஐயப்பன் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். ராம் மோகன் ராவின் சாட்சியங்களை ஆராய்ந்த பிறகு, C.W.14 - டாக்டர் கிருஷ்ணப்ரியா C.W.17 - டாக்டர். சிவக்குமார், C.W.26 - ஐயப்பன், C.W.94 - டாக்டர். மீரா கிருஷ்ணப்ரியா, C.W.104 - டாக்டர். ரேமண்ட் டோமினிக் சேவியோ மற்றும் C.W.106 - டாக்டர் பாபு குருவில்லா ஆபிரகாம் ஆகியோரின் கூற்றுப்படியும் மற்றும் இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் படியும், மறைந்த முதல்வரின் கால்கள் மற்றும் கால்விரல்கள் அவரது இறுதி மூச்சு வரை சரியாகவும், உள்ளவாறே இருந்தன என்றும் இந்த ஆணையம் கருதுகிறது.

எல்லாமே பொய்
மேற்சொன்ன ஆதாரங்களிலிருந்து, முழங்காலுக்குக் கீழே மறைந்த முதல்வரின் கால்கள் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படும் வதந்தியில் எந்த உண்மையும் இல்லையென்று என்று அவை உடனடியாக நிராகரிக்கப்படுகின்றன, என்று ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அதாவது கால்கள் இல்லை என்று கூறியது எல்லாம் முழுக்க முழுக்க பொய் என்று ஆணையம் மறுத்து உள்ளது. பல நாட்களாக நிலவி வந்த இந்த வதந்திக்கு இன்று ஒருவழியாக விடை கிடைத்து உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications