30+ சீட்.. அன்வர் ராஜா ஜமாத்துக்கு ஓடினாரே.. வைகோ ஆபீசுக்கு "அம்மா" போனாங்களே.. எகிறிய தலைவர்
எடப்பாடி பழனிசாமிக்கு நெளிவு சுழிவு தெரியவில்லை என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்
சென்னை: அரசியலில் நெளிவு சுழிவு முக்கியம், அந்த பண்பு எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை என்று மூத்த தலைவர் அழகு மருதுராஜ் காட்டமாக விமர்சித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாமக்கல் கூட்டத்தில், எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, அதிமுக தலைமையில் மெகா கூட்டணி என்று பேசியிருந்தார்.
இதையடுத்து, அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியில் அதிமுக தனித்து போட்டியிடும் என்று கூறியிருந்தார்.

குஷி
ஒருவேளை எடப்பாடி பழனிசாமி பாஜகவை எதிர்க்க துணிந்துவிட்டாரா? அப்படியானால் தனித்து போட்டியிடவும் முடிவு செய்துவிடுவார்களா? என்ற எதிர்பார்ப்பும் தொண்டர்களிடம் எழுந்துள்ளது.. அதேசமயம், அமித்ஷாவையே இவ்வாறு பேசிவிட்டது, பாஜகவை ஏற்காத எடப்பாடி டீமுக்கு பெரும் குஷியை தந்துள்ளதாகவும் தெரிகிறது.. இந்நிலையில், எடப்பாடி பேச்சு குறித்து, பிரபல சேனல் ஒன்றுக்கு, ஓபிஎஸ் ஆதரவாளரும், மூத்த தலைவருமான அழகு மருதுராஜ் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் எடப்பாடியை சரமாரியாக விமர்சித்துள்ளார். அதன் சுருக்கம்தான் இது:

இடிஅமீன்
"ஒரு இடிஅமீன் கிட்ட இன்றைக்கு அதிமுக என்ற கட்சி சிக்கிக்கொண்டு, படுகுழியில் விழுந்துள்ளது.. அம்மாவைவிட இவர் பெரிய ஆளா? 1998-ல் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்பதற்காக மெகா கூட்டணியை அம்மா உருவாக்கினார்.. கம்யூனிஸ்ட் + மதிமுக + காங்கிரஸ் எல்லாரையும் அம்மா ஒன்று சேர்த்தாங்க.. 30 சீட் ஜெயிச்சாங்க.. இதுதானே அரசியல் தலைமை பண்பு.. இதெல்லாம் நடக்க வேண்டும் என்று சொன்னால், அம்மாவிடம் அரசியல் பாடம் பயின்ற ஓபிஎஸ்ஸால் மட்டுமே முடியும்.. பதறாத குணம் படைத்தவர்.. இயக்க நலத்தை விட்டுக்கொடுக்காத பலம் படைத்தவர்.. தன்மானம் குன்றாமல் தலைநிமிர வைக்கக்கூடியவர் ஓபிஎஸ்.

ஜமாத் மசூதி
ஆனால், எடப்பாடிக்கு யாராவது அறிவுரை சொன்னால், அவர்களை கட்சியில் இருந்து நீக்கிவிடுவார்.. தவறு செய்கிறீர் என்று சொன்னால் அவர்களையும் நீக்கிவிடுவார்.. அதிமுகவுக்குள் சிறுபான்மை மக்கள் வரலாமா என்று யோசித்த காலத்தில், ஒவ்வொரு ஜமாத்துக்கும் போய், ஒவ்வொரு மசூதிக்கும் போய், சிறுபான்மை மக்களை எல்லாம் அதிமுகவுக்கு கூட்டிவந்ததில் அன்வர் ராஜாவுக்கு பெரும்பங்கு உள்ளது.. "நம் தலைவன் எம்ஜிஆர், தொப்பி போட்ட தலைவன், எல்லாரும் அதிமுகவுக்கு வாங்க" என்று சொல்லி அவர்களை அழைத்து வந்ததுடன், தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்தவர்.. அவரையும் நீக்கிட்டாரே எடப்பாடி..

பத்தினித்தனம்
இதை பற்றி எடப்பாடியிடம் கேட்டால், பாஜகவை விமர்சனம் செய்ததால், அன்வர் ராஜாவை கட்சியை விட்டு நீக்கியதாக சொல்கிறார்.. தன்னை பற்றி பேசியதால், கட்சியை விட்டு நீக்கியதாக சொல்கிறார்.. அப்படியானால், இன்னைக்கு எடப்பாடி மட்டும் பாஜகவை விமர்சிக்கவில்லையா? அன்று சிவி சண்முகத்தை விட்டு பாஜகவை விமர்சிக்க சொன்னதும் எடப்பாடிதானே? எத்தனை கோலத்தில் இருந்து நான் பார்த்தாலும், எடப்பாடியிடம் எந்த பத்தினித்தனத்தையும் பார்க்கவில்லை.. எந்த ஒரு உத்தம குணத்தையும் நான் பார்க்கவில்லை..

வாழப்பாடி ராமமூர்த்தி
நன்றிகெட்டத்தனம், நயவஞ்சகத்தனம், நம்பவைத்து ஏமாற்றுபவர்.. 1998 பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை உறுதி செய்தே ஆக வேண்டும் என்ற நிலைமை இருந்தது.. இதனால் அம்மா, அப்போது ஒவ்வொரு கட்சி அலுவலகத்துக்கும் போனார்.. கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், எக்மோரில் மதிமுக அலுவலகம், ஒரு தொகுதி பெற்ற வாழப்பாடி ராமமூர்த்தியின் அடையாறு வீட்டுக்கு சென்றார்.. புரட்சித்தலைவியே, வெற்றியை உறுதி செய்வதற்காக, மாற்று கருத்துக் கொண்ட இயக்கங்களை எல்லாம் போனார்..

நெளிவு சுழிவு
மதிமுகவுக்கும், அதிமுகவுக்கும் எப்போதாவது ஒத்து போகுமா? எவ்வளவு கொள்கை முரண்பாடுகள் உடைய கட்சிகள் இவை? வைகோ செய்யாத விமர்சனமா அம்மாவை.. அந்த வைகோவின் அலுவலகத்துக்கும் அம்மா போனார்.. ஆட்சியை தன்வசப்படுத்த வேண்டும் என்று சொன்னால், நெளிவு சுழிவு அரசியலில் அவசியம்.. ஆனால் அது எடப்பாடியிடம் இல்லை.. எந்த இயக்கமும் இவருடன் கூட்டணி வைக்க ரெடியாக இல்லை" என்று எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார் மருது அழகுராஜ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications