விஜய் சும்மா அடிச்சு விடலாமா? ரூ.29 லட்சம் வாங்கினாரா கலைஞர்? சர்க்காரிய கமிஷன் சொல்வது இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் விஜய் இன்று சட்டமன்றத்தில் பேசும்போது, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தவணை முறையில் ரூ.29 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கான ஆதரமாக சர்க்காரியா கமிஷன் அறிக்கையை கூறியிருந்தார். ஆனால், உண்மையில் இந்த அறிக்கையில் கலைஞர் லஞ்சம் பெற்றதற்கான உரிய ஆதாரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாக திமுகவினர் கூறியிருக்கின்றனர்.

சட்டமன்றத்தில் விஜய் இன்று பேசியதாவது, "கலைஞர் மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது. நான் அமலாக்கத்துறை அறிக்கைத்தான் பேசுகிறேன். முதலமைச்சர் பதவியை கலைஞர் கருணாநிதி தவறாக பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை அறிக்கை அளித்துள்ளது. 1970களில் திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட வீராணம் திட்டத்திற்கு சத்யநாராயண பிரதர்ஸ் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்குவதற்காக கமிஷன் கேட்கப்பட்டது.

Karunanidhi

இந்த டெண்டரை வழங்குவதற்காக கலைஞரின் மருமகன் 2.5% கமிஷன்.. அதாவது ரூ.29 லட்சம் தவணை முறையில் லஞ்சமாக பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியிருக்கிறது. இந்த ரூ.29 லட்சம் முறைகேடு மட்டுமின்றி, முரசொலி அலுவலக கட்டடத்தை கட்டுவதற்கு பணமாகவும், பல்வேறு பொருட்களாகவும் இந்த லஞ்ச தொகை கைமாறியிருப்பதாக கோப்புகளில் ஆதாரங்கள் உள்ளன. இது எதுவும் எனது சொந்த கருத்துக்கள், குற்றச்சாட்டுகள் கிடையாது. சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் இருப்பதைதான் நான் பேசுகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், விஜய் சொன்னதை போல சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் கருணாநிதி லஞ்சம் பெற்றார் என்று குற்றம் மட்டுமே சாட்டப்பட்டிருக்கிறது என்றும், அதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் திமுகவினர் கூறுகின்றனர். இதற்கான ஆதாரமாக சர்க்காரியா கமிஷன் அறிக்கையை குறிப்பிட்டிருக்கின்றனர்.

அதில், "கருணாநிதிக்கு ஏழு தவணைகளில் ரூ. 29 லட்சம் சட்டவிரோதப் லஞ்சம் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டைப் பொறுத்தவரை, இதை எளிதாக நிராகரித்துவிட முடியாது.

ஆனால், சான்றுகள் மூலம் முக்கிய விவரங்கள் உறுதிப்படுத்தப்படாமல் குற்றச்சாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியாது. இதற்குக் கிடைத்துள்ள உறுதிப்படுத்தல் சான்றுகள் போதுமான அளவுக்கோ அல்லது துல்லியத்தன்மையுக்கோ இல்லை.

பதிவில் உள்ள இந்தச் சான்றுகள், இந்தக் குற்றச்சாட்டுக்குச் சாதகமான ஒரு வலுவான சாத்தியக்கூறை (preponderance of possibility) - அதாவது நிகழ்தகவுக்கு (probability) மிக நெருக்கமான நிலையை - நிறுவுவதைத் தாண்டிச் செல்லவில்லை. எனவே, சட்டவிரோதப் பணத்தைப் பெற்றுக் கொண்டார் என்ற குற்றச்சாட்டு கருணாநிதிக்கு எதிராக ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதைத்தான் ஆதாரமாக திமுகவினர் கூறுகின்றனர். ஆதாரத்திற்கான URL லிங்கையும் (https://ghostarchive.org/archive/fapNq) பதிவிட்டிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+