"ஒரு பாதிப்பும் இல்லை"..தமிழக அரசு தந்த நம்பிக்கை..கொடைக்கானலில் குறைந்ததா சுற்றுலா பயணிகள் கூட்டம்?
சென்னை: இ - பாஸ் அறிவிப்பு குழப்பம் காரணமாக, கொடைக்கானலில் ஒரே நாளில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துவிட்டதாம்.. என்ன காரணம்?
சுற்றுலா தலங்களான ஊட்டி, கொடைக்கானல் சாலைகளில் கடந்த சில நாட்களாகவே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது... கோடை வெயில் தாங்காமல், இந்த முறை வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர்.

கொரோனா : அதிகப்படியான மக்கள் வருகையால் கொரோனா காலத்தை போல் இ-பாஸ் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.. இதனை விசாரித்த ஹைகோர்ட், மே 7ம் தேதி முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து இ-பாஸ் முறையை கொண்டு வருவதற்கான பணிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளன.. ஊட்டி செல்ல இ-பாஸ் பெறுவதற்கான, epass.tnega.org என்ற இணையதள முகவரியும் அறிவிக்கப்பட்டுள்னளது. அறிவித்தார் நீலகிரி கலெக்டர் அருணா அறிவித்துள்ளார். நாளை முதல் இந்த இணையதள முகவரி மூலம் இ-பாஸ் முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைமுறை: எனினும், இந்த இ-பாஸ் நடைமுறைக்கு ஊட்டி, கொடைக்கானல்வாசிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. இதனை வாபஸ் பெற வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.. இந்த நிலையில், இ-பாஸ் குழப்பத்தால் விடுமுறை தினமான இன்று கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டதாம்.
இதையடுத்து தமிழக அரசு, விளக்கம் ஒன்றை தந்துள்ளது.. இ-பாஸ் வழங்கும் இந்த நடவடிக்கையின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித தொந்தரவும், அச்சமும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும், இந்த இ-பாஸ் அனுமதி காரணமாக பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, இ-பாஸ் நடவடிக்கை வாகனங்களை முறைப்படுத்தவே நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளதால், பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நிம்மதி: வெளி மாநில, வெளி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதே தவிர, அரசு பேருந்துகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும், இ-பாஸ் அனுமதி காரணமாக பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது எனவும் தமிழக அரசு மீண்டும் விளக்கம் தந்துள்ளது.
தமிழக அரசு தந்துள்ள இந்த விளக்கமானது, பொதுமக்களுக்கு குழப்பத்தை நீக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகையும் வழக்கம்போல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications