பாலியல் கேஸில் சிக்கி மன்னிப்பு கடிதமா? மதுமிதாவின் அண்ணன் முறை காதல்.. கிளம்பிய கேள்விகள்
சென்னை: பணத்தை அள்ளி வீசி ரீல்ஸ் வெளியிட்டு வந்த பிரபல பெண் யூடியூபர் மதுமிதா வீட்டில் நடந்த நகை கொள்ளை விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஏற்கனவே கொள்ளை போனது 118 பவுனா, 119 பவுனா என்ற குழப்பம் இருக்கும் நிலையில், கைது செய்யப்பட்ட கொள்ளையன் 98 பவுன் நகைகளை மட்டுமே எடுத்ததாக சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது. கொள்ளை போன நகைகள் தொடர்பான இந்த குழப்பமே இன்னும் அடங்காத நிலையில், மதுமிதா தொடர்பாக அடுத்தடுத்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
குமரி மாவட்டத்தில் வசித்து வரும் மதுமிதா, கட்டுக்கட்டாக பணத்தையும் கிலோ கணக்கில் நகைகளையும் காட்டியபடி வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார்..

கன்னியாகுமரி மதுமிதா
பணமழை பொழிவது போல பணத்தை அள்ளி வீசும் காட்சிகளையும், ஏகப்பட்ட நகைகளை அணிந்தபடி இருக்கும் காட்சிகளையும் அவர் சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வந்தார். இந்த நிலையில்தான் அவரது வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்தது.
இந்த கொள்ளை சம்பவத்துக்கு பிறகு மதுமிதாவின் வீடியோக்கள் மீது சோஷியல் மீடியா யூசர்களின் கவனம் இன்னும் அதிகமாகியுள்ளது... அவரது பழைய வீடியோக்களையும் லட்சக்கணக்கானோர் பார்க்க தொடங்கி விட்டார்கள். அவரது பாலோயர்ஸ் எண்ணிக்கையும் 5 லட்சத்தை நெருங்கியுள்ளது. கொள்ளை நடந்த பிறகும் கூட, எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல், கவலையும் இல்லாமல், வழக்கம்போல பணத்தை அள்ளி வீசியபடி வீடியோக்களை வெளியிட்டது அதற்கு மேல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்து விட்டனர்.. புகார் அளிக்கப்பட்ட நகைகளில் ஒரு பகுதியையும் போலீசார் மீட்டு விட்டனர்..
கொள்ளை போன நகை எவ்வளவு
ஆனால் முதலில் 118 பவுன் நகைகள் கொள்ளை போனதாக தகவல் வெளியான நிலையில், சில தகவல்களில் 119 சவரன் என்றும் கூறப்பட்டது... கைது செய்யப்பட்ட கொள்ளையனோ, 98 சவரன் நகைகளை மட்டுமே எடுத்ததாக சொல்கிறாராம்.. அதனால் புகாரில் சொல்லப்பட்ட நகைகளின் அளவுக்கும், கொள்ளையன் எடுத்ததாக சொல்லப்படும் அளவுக்கும் இடையே வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீட்கப்பட்ட நகைகள் தொடர்பாகவும் இன்னும் முழுமையான விசாரணையும் நடந்து வருகிறது.
இந்த நகை கொள்ளை விவகாரத்தின் பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில், மதுமிதாவின் கடந்த காலம் தொடர்பாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே நாகர்கோவில் வடசேரி பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்ததாக கூறப்படும் ஒரு ஸ்பாவில் மதுமிதா பிடிபட்டதாகவும், அப்போது பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு காப்பகத்தில் அடைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காப்பகத்தில் அடைக்கப்பட்டிருந்த இவரை, பிறகு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து தான் மீட்டுள்ளனர். அதாவது பெண்கள் காப்பகத்தில் நன்னடத்தைக்காக அடைக்கப்பட்டு, பிறகு கோர்ட் மூலமாக நிபந்தையுடன் வெளியே விடப்பட்டாராம் மதுமிதா.
சொந்த அப்பா, அம்மா
இதுமட்டுமல்லாமல், மதுமிதா ஏற்கனவே கோயில்களில் வீடியோக்கள் எடுத்த விவகாரத்திலும் சர்ச்சையில் சிக்கியதாக கூறப்படுகிறது... இப்போது 118 அல்லது 119 அல்லது 98 சவரனா? என்ற அடுத்தடுத்து கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அவரது பழைய விவகாரங்களும் மீண்டும் பேசுபொருளாகி உள்ளன.
மதுமிதா தனது சொந்த ஊர் கோவை என்று பலரிடமும் சொல்லி வந்தாலும், அவர் உண்மையில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. குமரி மாவட்டம் குமாரபுரம் அருகே கிருஷ்ணாபுரம் ஆகும்.. அவரது அம்மா தங்கம் வில்லிசை கலைஞர், அப்பா செங்கல்சூளை தொழில் செய்தவர்.. ஆரல்வாய்மொழி அருகே அவரது சொந்தக்காரர்களம் இருக்கிறார்களாம்..
காதல் - திருமணம்
அதேபோல மதுமிதாவின் திருமணம், காதல் விவகாரங்களும் இணையத்தில் இறக்கை கட்டி பறக்கின்றன.. 15 வருடங்களுக்கு முன்பு தனது அப்பாவின் சகோதரர் மகன் அதாவது பெரியப்பா மகன் ராஜேஷ் என்பவரை காதலித்திருக்கிறார்.. அண்ணன் உறவுமுறை என்று தெரிந்தும் அவரை காதலித்து, வீட்டிற்கு தெரியாமல் பல்லடத்தில் சென்று குடும்பம் நடத்தி வந்ததாகவும், பிறகு அவரை பிரிந்து பல திருமணங்கள் செய்த நிலையில் இப்போது தென்காசியை சேர்ந்த நபரை திருமணம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
உண்மை என்ன - போலீஸ் விசாரணை
தன்னுடைய பெற்றோர், சொந்த ஊர் குறித்த தகவல்களை மதுமிதா ஏன் மறைத்தால்? கோவையில் என்ன செய்து கொண்டிருந்தார்? இவருக்கு இவ்வளவு நகைகள் பணம் எப்படி வந்தது? இவைகளுக்கு முறையான கணக்கு இருக்கிறதா? அப்பாவி பெண்களை ஆசை வார்த்தை கூறி ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தினாரா? என்றெல்லாம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்களாம்.
எனவே, மதுமிதா பற்றி இப்படி உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் எத்தனையோ வெளிவந்து கொண்டிருந்தாலும், போலீஸ் விசாரணை மற்றும் வருமான வரித்துறை விசாரணை மூலமாகத்தான் முழுமையான மற்றும் உண்மையான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. மதுமிதா பக்கத்து நியாயமும் அப்போது வெளிப்படலாம் என தெரிகிறது.
ஆகமொத்தம், கொள்ளையன் பிடிபட்டாலும், கொள்ளை போன நகைகள் மீட்கப்பட்டாலும்கூட, மதுமிதாவின் கடந்த காலம் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று வருகின்றன..!!!


Click it and Unblock the Notifications
