Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛வாழை’ பட கதையை திருடிய மாரி செல்வராஜ்? எழுத்தாளர் சோ தர்மன் சொன்ன விஷயம்.. அப்படியே இருக்காமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜின் ‛வாழை' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடி வருகிறது. இந்த படத்துக்காக மாரி செல்வராஜூக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தான் மாரி செல்வராஜ் ‛வாழை' திரைப்படத்தின் கதையை திருடினாரா? என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ‛சாகித்ய அகாடமி’ விருது பெற்ற எழுத்தாளர் சோ தர்மன் சொன்ன விஷயமாகும். அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ‛வாழையடி' எனும் சிறுகதையில் இடம்பெற்ற காட்சிகள் அப்படியே திரைப்படத்தில் உள்ளதாக கூறி பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர். முதல் படத்திலையே தனது முத்திரையை பதித்தார். அதன்பிறகு தற்போது மாரி செல்வராஜ் ‛வாழை' எனும் படத்தை இயக்கி உள்ளார்.

mari selvaraj

இதில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் உள்பட பலர் நடித்துள்ளனர். கடந்த வாரம் இந்த திரைப்படம் திரைக்கு வந்தது. தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தை கதைக்களமாக இந்த திரைப்படம் கொண்டுள்ளது. வாழை தார் சுமக்கும் சிறுவர்களின் உழைப்பை மையப்படுத்தியும், அவர்கரின் வறுமை, துன்பம், போராட்டம் உள்ளிட்டவற்றை காட்டும் திரைப்படமாக ‛வாழை' உள்ளது.

இந்த திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விமர்சனம் ரீதியாகவும் இந்த திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது. முன்னணி இயக்குநர்களான பாலா, சங்கர், மிஷ்கின் உள்பட பல நடிகர், நடிகைகள் ‛வாழை' திரைப்படத்தையும், மாரி செல்வராஜையும பாராட்டி உள்ளது. இந்நிலையில் தான் ‛வாழை' திரைப்படத்தின் கதையை மாரி செல்வராஜ் திருடி பயன்படுத்தினாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு தூத்துக்கு மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த எழுத்தாளர் சோ தர்மன் சொன்ன விஷயம் தான் முக்கிய காரணமாகும்.

கரிசல் இலக்கிய எழுத்தாளராக அறியப்படும் சோ தர்மன் சாகித்ய அகாடமி விருது பெற்றவர். இவர் எழுதிய விவசாயிகளின் வாழ்வாரத்தை முன்வைத்து இவர் எழுதிய ‛சூல்’ எனும் நாவல் 2019ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது. இந்நிலையில் தான் ‛வாழை’ திரைப்படம் குறித்து சோ தர்மன் கூறியதாவது:

‛‛வாழை படத்தை நான் நேற்று தான் பார்த்தேன். நிறைய நண்பர்கள் எனக்கு போன் செய்து படம் பாருங்க.. பாருங்க.. என்று சொன்னார்கள். என்ன என்று கேட்டபோது நீங்கள் எழுதிய சிறுகதை அப்படியே உள்ளது. நீங்கள் பாருங்கள் என்று சொன்னார்கள். அதன்பிறகு நேற்று தான் படத்தை போய் பார்த்தேன். இப்போது வந்துள்ள சினிமா கதையை நான் நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு ‛வாழையடி..'' என்ற பெயரில் எழுதியுள்ளேன். இந்த கதை 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய சிறுகதை.

வாழை சுமக்கும் சிறுவர்கள் வாழையடி வாழையடி படும் கஷ்டத்தை சொல்லும் வகையில் இந்த கதை இருக்கும். என்னுடைய ‛நீர்ப்பழி' எனும் தொகுப்பில் 2வது கதையாக இது இருக்கிறது. கதையில் காட்சிப்படுத்தப்பட்ட அத்தனை விஷயங்களும் சினிமாவிலும் உள்ளது. சினிமாவுக்காக சில விஷயங்களை சேர்த்து வைத்துள்ளாரே தவிர, சிறுவனின் உழைப்பு, தரகனார், கூலி உயர்வு, லாரி, டிரைவர், வரப்பில் நடந்து செல்லும் கஷ்டம், தண்ணீருக்குள் தவறி விழுவது, ரஜினி - கமல் பனியன் போட்டு இருப்பது என எல்லாமே என் கதையில் இருக்கிறது.

என்னுடைய கதையும், திரைப்படமும் ஒன்றை தான் சொல்கிறது. வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் கடினமான உழைப்பு எப்படி சுரண்டப்படுகிறது? என்பதை தான் காட்டுகிறது. நானும் அதை தான் பதிவு செய்துள்ளேன். அவரும் அதை தான் பதிவு செய்துள்ளார். ஆனால் ஊடகங்கள் வெவ்வேறானது. நான் அச்சு ஊடகத்தில் எழுதியதை அவர் திரைப்படமாக எடுத்துள்ளார். ஒரே பிரச்சனையை ஒன்றாக எடுத்து கொண்டுள்ளதால் ஒன்றாக வந்துள்ளது.

ஒருவேளை அவர் (மாரி செல்வராஜ்) என் கதையை படிக்காமல் கூட இருந்திருக்கலாம். அவரே வாழையும் கூட சுமந்து இருக்கலாம். அதெல்லாம் ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம். ஆனால் அந்த ஒரு காட்சியை, சம்பவத்தை, சிறுவர்கள் படக்கூடிய வலிகளை முதல் முதலாக உருவமாக மாற்றினவன் என்ற வகையில் அதற்கு நான் தான் முழு உரிமையானவன். முதல் முறையாக இந்த கதைக்கு வடிவம் கொடுத்தது நான் தான். அதனை 10 ஆண்டுக்கு முன்பே நான் கொடுத்துவிட்டேன்'' என்றார்.

அதேபோல் இந்த விவகாரம் குறித்து சோ தர்மன் தனது பேஸ் புக் பக்கத்திலும் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், ‛‛ஏராளமான நண்பர்களிடமிருந்து போன் கால்கள்.வாழை படம் பாருங்கள்.உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது என்று.இன்று படம் பார்த்தேன். என் உடன் பிறந்த தம்பியும் என் தாய் மாமாவும் பெண் எடுத்திருக்கிற ஊர் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சி.வாழைதான் பிரதான விவசாயம்.நான் அங்கு போகும் போதெல்லாம் வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் கஷ்டத்தை பார்த்து எழுதியதுதான் என்னுடைய"வாழையடி......"என்கிற சிறுகதை.

என் கதையில் லாரி,டிரைவர்,கிளீனர்,இடைத்தரகர்,முதலாளி,சிறுவர்கள்,சிறுமிகள்,அவர்கள் படுகின்ற கஷ்டம்,கூலி உயர்வு எல்லாம் உண்டு.ஆனால் டீச்சர்,கர்ச்சீப்,காலாவதியாகிப் போன பொருட்கள், கம்னியூஸ்ட் கட்சி சின்னம், துன்பவியல் விபத்து கிடையாது. வெகுஜன ஊடகமான சினிமாவுக்கு வந்ததால் வாழை கொண்டாடப்படுகிறது.ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதிய என்கதை இலக்கியமாகவே நின்று விட்டது.இன்று கொண்டாடப்படுகின்ற ஒரு கதையை பத்தாண்டுகளுக்கு முன்பே நான் எழுதியிருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன் .ஒருபடைப்பாளி என்கிற வகையில் கர்வமும் கொள்கிறேன்.இச் சிறுகதை என்னுடைய "நீர்ப் பழி"என்கிற சிறுகதைத் தொகுப்பில் இரண்டாம் கதையாக இடம் பெற்றிருக்கிறது. கிராமங்களில் வாழையைப் பற்றி ஒரு சொலவடை உண்டு.

"வாழை வாழவும் வைக்கும்.தாழவும் வைக்கும்."
என்னை வாழை வாழ வைக்கவில்லை.
என்னுடைய சிறுகதையை வாசிக்க லிங்க் கொடுத்திருக்கிறேன்.வாசியுங்கள்'' என அவர் எழுதிய ‛வாழையடி... 'எனும் சிறுகதையின் லிங்க்கையும் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+