அண்ணன் சீமான் சூப்பர்.. "அவங்களை" தனியா நிக்க சொல்லுங்க.. பாஜகவை இப்படி போட்டு தாக்கிட்டாரே "வாரிசு"

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ அளித்த பேட்டிதான் இணையத்தில் இப்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

லோக்சபா தேர்தல் ரிசல்ட் வெளிவந்தபோதே, மதிமுகவின் துரை வைகோவிடம் செய்தியார்கள் கருத்து கேட்டார்கள்.. அப்போது துரை வைகோ, பாஜகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

durai vaiko mdmk seeman durai vaiyapuri bjp dmk alliance politics

"பாஜக அணி 18 விழுக்காடு வாக்குகள் வாங்கி இருக்கிறார்கள். பாஜக தனியாக நின்றிருந்தால் 3 விழுக்காடு வாக்குகள் தான் வாங்கி இருப்பார்கள். பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருக்கிறது. அந்த கூட்டணி கட்சிகளின் வாக்கு எல்லாம் சேர்ந்துதான் இந்த 18 சதவிகிதம்.

பாஜக: இதுவே அவங்க பாஜக நின்றிருந்தால், போன முறை வாங்கிய 3 சதவீதத்தை தாண்டி இருக்க முடியாது... அதனால், பாஜகவினர் அவர்களே அவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 40 இடங்கள் ஜெயித்தும் பிரயோஜனம் இல்லை என்று சொல்கிறார்கள் இன்னும் 20 இடங்கள் பிஜேபி குறைந்திருந்தால் அவர்கள் அறிவாலயம் வாசலில் காத்திருப்பார்கள்

நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை அரசியல் சித்தாந்தங்களில் வேறுபடலாம்... ஆனால் சகோதரர் சீமானை பொறுத்த வரைக்கும் வேறுபட்ட கொள்கைகள் இருந்தாலும் தனியாக நின்று இவ்வளவு வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அதை நாம் பாராட்ட செய்யதான் வேண்டும்.. சீமானைபோல பாஜகவை கட்சியை தனியாக நிற்க சொல்லுங்கள்.. அவர்கள் வாக்கு சதவீதம் உயர்ந்துவிட்டதை அப்போது நான் ஒத்துக்கொள்கிறேன்'' என்று பெருமைபட பேசியிருந்தார்.

கோவை: இந்நிலையில், கோவையில் மீண்டும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி.. அப்போது அவர் சொன்னதாவது:

தமிழகத்தை பொறுத்தவரை பாஜக வாஷ் அவுட் ஆகிவிட்டது.. கிட்டத்தட்ட 11 இடங்களில் பாஜக டெபாசிட் இழந்துவிட்டது.. உத்தர பிரதேசத்தில் அயோத்தி கோவிலை வைத்தே இந்த தேர்தலை அவர்கள் சந்தித்தார்கள்... கடைசியில் அயோத்தி கோவில் அமைந்துள்ள இடத்திலேயே தேர்தலில் தோற்றிருக்கிறார்கள்.. மதவாத அரசியலுக்கு தமிழ்நாடு மட்டுமல்ல உத்தரபிரதேசத்திலேயே அவர்களுக்கு இடமில்லை என்று மக்கள் காண்பித்துவிட்டார்கள்.

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அடுத்து வரும் தேர்தலிலும் திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும். எங்களை பொறுத்தவரை நாங்கள் தனி இயக்கமாக உள்ளோம்.. எங்களுக்கென ஒரு சின்னம் உள்ளது. அந்த சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம்...

நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை அவர்கள் கூட்டணி இல்லாமல் தனித்து நின்று 8 விழுக்காடு வாக்குகளை பெற்றிருக்கிறார்கள்.. 8 விழுக்காடு என்பது அண்ணன் சீமானின் விடாமுயற்சி.. பல வருட உழைப்பு.. இயக்க தோழர்களின் உழைப்பால் கிடைத்துள்ளது.

பாராட்டு: கொள்கை தொடர்பாக அண்ணன் சீமானுக்கும், எங்களுக்கும் பல வேறுபாடு இருக்கலாம்.. ஆனால், கொள்கைகள், சித்தாந்தங்கள்படி நாங்கள் வேறுபடுகிறோம். தனிப்பட்ட முறையில் பார்க்கும்போது, அவர்கள் பெற்ற வாக்குகள் பாராட்டப்பட வேண்டிய விஷயமே" என்று மீண்டும் பாராட்டு தெரிவித்துள்ளார் துரை வைகோ.

எதிரெதிர் துருவமாக இருந்தாலும், சீமான் குறித்த துரை வைகோவின் இந்த பாராட்டும், மதிப்பீடும் பலரையும் கவனிக்க செய்து வருகிறது... துரைவைகோவின் இந்த நாகரீக அரசியலையும், நயமான பேச்சையும் கண்டு மதிமுக கூடாரமே பூரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+