மேட்டரே இதுதானாம்.. திமுகவின் அடுத்தடுத்த அஸ்திரங்கள்.. பதவியை ராஜினாமா செய்கிறாரா பிடிஆர்.. ஏன்?
பிடிஆர் பழனிவேல்ராஜன் ஐடி விங் பொறுப்பை ராஜினாமா செய்கிறாரா?
சென்னை: அறிவாலயத்தில் ஒரு முக்கியமான விஷயம் ஓடிக் கொண்டிருக்கிறது.. அமைச்சர் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டதாகவும், ஆனால் அது குறித்து எந்த முடிவையும் தலைமை இன்னும் எடுக்கவில்லை என்றும் பரபரப்பான செய்திகளும் கசிந்து வருகின்றன.. என்ன நடக்கிறது திமுகவில்?
திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி செயலராக இருப்பவர் நிதியமைச்சர் தியாகராஜன்.. நிறைய படித்தவர்.. அதுவும் வெளிநாட்டில் படித்தவர்...
நிதித்துறை அமைச்சராக உள்ளார்.. அத்துடன் தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பும் இவரிடமே ஒப்படைக்கப்பட்டது...

மத்திய அரசு
திமுக அரசு பொறுப்பேற்றதுமே நியமிக்கப்பட்ட அமைச்சரவையில், அதிக அளவு பேசப்பட்டவர் அநேகமாக பிடிஆராகத்தான் இருக்கும்.. மத்திய அரசையும், முந்தைய அதிமுக அரசையும் ஏராளமான கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டவரும் பிடிஆராகத்தான் இருக்க முடியும்.. அந்த அளவுக்கு இவரது செயல்பாடுகள் மக்களை கவனிக்க வைத்தன... இப்போது கடந்த சில தினங்களாகவே உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்று கசிந்து கொண்டிருக்கிறது.

பணிச்சுமை
நிதித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி என இரண்டிலும் பொறுப்பில் உள்ளார் பிடிஆர்.. இந்த இரண்டிலுமே பணிகள் அதிகம்.. ஆனால் அமைச்சகப் பணி அதிகம் இருப்பதால், பிடிஆர் கட்சி பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ளும்படி, கட்சி தலைமை கேட்டுக் கொண்டதாகவும், அவரும் விலக சம்மதித்துள்ளதாகவும் தகவல் பரவி உள்ளது.. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஆனால், இது தொடர்பாக வேறு சில தகவல்களும் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

பிகே டீம்
பிடிஆர் பதவியை ராஜினாமா செய்தது உண்மைதான் என்றும் ஆனால் அதற்கு காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.. முதலாவதாக, கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரசாந்த் கிஷோரின் ஐடி விங் இங்கு பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியது.. திமுகவின் வெற்றியை நோக்கியே, பிரச்சாரங்களில் பிகே டீம் பயணித்தாலும், அவ்வப்போது பிடிஆர் டீமுடன் சில அதிருப்திகளையும் சந்திக்க நேர்ந்துள்ளது.. இரு தரப்புமே சோஷியல் மீடியாவில் திமுகவின் சம்பந்தப்பட்ட செய்திகளை புரமோட் செய்வதில் மிகுந்த அக்கறை எடுத்து கொள்வர் என்பதால், இந்த உரசல்கள் இருந்திருக்கிறது.. இது அப்போதே பிடிஆருக்கு லேசான எரிச்சலை தந்ததாக கூறப்படுகிறது.

மகேந்திரன்
அடுத்ததாக, மநீமய்யத்தில் இருந்து வந்த கோவை மகேந்திரனை, பிடிஆரின் ஐடி டீமிலேயே நியமித்தது திமுக மேலிடம்.. மகேந்திரனுக்கு திமுக ஐடி விங்க் அணியின் மாநில இணைச்செயலாளர் பதவி வழங்கியது.. திமுகவின் ஐடி விங்க் செயலாளராக பிடிஆர் இருந்தபோதிலும், அவரது பணி சுமையை குறைக்கும் பொருட்டு மகேந்திரனை நியமித்தது.. இதுவும் பிடிஆருக்கு அதிருப்தியை தந்ததாக சொல்கிறார்கள்.

மனுஷ்யபுத்திரன்
இதற்கு அடுத்தபடியாக, திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில ஆலோசகராக கவிஞர் மனுஷ்யபுத்திரன் நியமிக்கப்பட்டார்.. மற்ற துறைகளுக்கு ஆலோசகர்களை நியமிக்காதபோது, ஐடி விங்குக்கு எதற்காக ஆலோசகர் நியமிக்க வேண்டும் என்ற வருத்தமும் பிடிஆருக்கு இருந்துள்ளதாக தெரிகிறது.. இதுபோன்ற காரணங்களுக்காகவே தன் பதவியை ராஜினாமா செய்ய பிடிஆர் தயாரானாகவும், ஆனால் அந்த ராஜினாமா பற்றி திமுக மேலிடம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

கேள்விகள்
ஆனால் திமுக நிர்வாகிகள் தரப்பில் வேறொரு காரணத்தை சொல்கிறார்கள்.. எதிர்க்கட்சிகள் இப்போதெல்லாம் நிறைய கேள்விகளை எழுப்புகிறார்கள்.. வாக்குறுதிகள் பலவற்றை ஏன் நிறைவேற்றவில்லை என்றெல்லாம் துளைத்தெடுத்திருக்கிறார்கள்.. ஆனல் இதற்கெல்லாம் ஐடி விங் சரியான பதிலடியை தருவதில்லை.. இதெல்லாம்கூட திமுக மேலிடத்துக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள்.. ஆக மொத்தம் நிதியமைச்சர் பிடிஆர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறாரா? இல்லையா? வெறும் புரளியா? என்றெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்..!
இது தொடர்பாக ஒன்இந்தியா தமிழ் சார்பில் பிடிஆர் குழுவினரை தொடர்பு கொண்டபோது, இப்போதைக்கு இது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறி முடித்துக் கொண்டனர். நேரடி பதில் இன்னும் கிடைக்கவி்ல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications