"அதை ஏன் என்கிட்ட சொல்றீங்க"? ஸ்டாலின் அவரை கண்டுக்கலியாமே.. அப்போ கூட்டணி? நொறுங்கிடுச்சா "பானை"?
சென்னை: அம்பேத்கர் நூல் விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொள்ளாதபோதும், ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து நீக்கியபோதும், விசிக - திமுக இடையேயான உரசலும், விரிசலும் இன்னும் சரியாகவில்லை என்கிறார்கள். இதுகுறித்த பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது.
"எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு, அந்த நூலை வெளியிட்டிருந்தார்.

அந்த விழாவில், திருமாவளவன் முதலில் கலந்து கொள்வதாக இருந்து பிறகு திடீரென விலகினார்.. திமுகவின் அழுத்தம் காரணமாக திருமா கூட்டத்தில் பங்கேற்காமல் விலகியதாக சலசலக்கப்பட்டது.
இதன்பிறகு, திமுகவுக்கு எதிராக விசிக துணைப் பொதுச்செயலாளராக இருந்த உமிக காரசாரமாக பேசியிருந்தார். இது விசிக - திமுக கூட்டணியில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.
திருமாவளவன்: இதையடுத்து, அவரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என எதிர்ப்புக் குரல்கள் நாலாபுறமுமிருந்தும் எழுந்த நிலையில், ஆதவ் அர்ஜூனா விசிகவில் இருந்து 6 மாதத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல, "விடியல் நிச்சயம் உண்டு" என்ற விசிக தலைவர் திருமாவளவனின் எழுத்துக்களையும் சேர்த்து ஆதவ் அர்ஜுனா தன்னுடைய சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்த எழுத்துக்கள், பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.
எனினும், திமுக - விசிகவுக்குள் விரிசல் சரியாகவில்லை என்றே கூறுகிறார்கள்.. இதுகுறித்துதான் நமக்கு கூடுதல் தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது.. அதாவது, திமுக எதிர்பார்த்து போல ஆதவ் அர்ஜுனாவை சஸ்பெண்ட் செய்திருக்கிறார் திருமாவளவன். உயர்நிலை நிர்வாகக் குழுவில் எடுக்கப் பட்ட முடிவுகளின்படி இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
ரியாக்ஷன்: ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அதற்கான அறிவிப்பு கடிதத்தையும் எடுத்துக்கொண்டு தலைமைச் செயலகம் சென்று தனது கட்சி எம்,எல்.ஏ.க்களுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். புயல் நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்தை திருமாவளவன் வழங்கிய போது எந்த ரியாக்ஷனையும் ஸ்டாலின் காட்டவில்லையாம்.. ஆனால், திருமாவளவனை சந்திக்கும்போது இருக்கும் வழக்கமான உற்சாகம் ஸ்டாலினிடம் இந்த முறை இல்லை என்கிறார்கள்..
நிவாரண நிதி கொடுக்க தங்களைச் திருமாவளவன் சந்திக்க விரும்புகிறார் என ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு சென்ற போது, தலைமைச் செயலாளரிடம் கொடுக்கச் சொல்லுங்கள் என ஸ்டாலின் சொல்லிவிட்டாராம். பிறகுதான், சில விஷயங்களுக்காக, திருமாவை சந்திக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். எனினும் இந்த சந்திப்பை அவர் விரும்பவில்லையாம். அதனால் தான் இறுக்கமாக முதல்வர் இருந்தார் என்கிறார்கள் கோட்டை தரப்பினர்.
உட்கட்சி பிரச்சனை: அதுமட்டுமல்ல, இந்த சந்திப்பில், ஆதவ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை முதல்வரிடம் திருமாவளவன் சொல்ல, இதை ஏன் என்கிட்டே சொல்றீங்க? அது உங்கள் உள்கட்சி பிரச்சனை என்று சொல்லி, அதனை கடந்து சென்றுவிட்டாராம் முதல்வர் ஸ்டாலின்.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications