சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சோடா".. திருமாவளவனே சொல்லிட்டாரே.. நயினாரை விடுங்க.. திமுக அரசை பாருங்க.. லிஸ்ட் போட்ட எச். ராஜா

வேங்கைவாசல் விவகாரம் குறித்து பாஜக எச்.ராஜா தன் கருத்தை கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: நயினார் நாகேந்திரன் சேது சமுத்திர திட்டத்தை ஆதரிப்பதாக சட்டமன்றத்தில் கூறியது குறித்தும், புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரம் தொடர்பாகவும், பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தன் கருத்தை கூறியுள்ளார்.

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலைத் தொட்டி குடிநீரில், மனித மலம் கொட்டிய சாதி வெறியர்களை கைது செய்ய வலியுறுத்தி விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொது மயானம் வேண்டும் என்றும் ஆவண கொலைகளை தடுக்க அரசு சட்டம் இயற்ற வேண்டும், தமிழகத்தில் தலைவிரித்து ஆடும் சாதிய கொடுமையை தவிர்க்க உளவுப்பிரிவு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கண்டன முழக்கங்களையும் திருமாவளவன் எழுப்பியிருந்தார்..

14 பேர் கொண்ட பணிக்குழு எதுக்கு? ஈரோடு கிழக்கில் பாஜக போட்டியா? நயினார் நாகேந்திரன் சொன்ன பதில்! 14 பேர் கொண்ட பணிக்குழு எதுக்கு? ஈரோடு கிழக்கில் பாஜக போட்டியா? நயினார் நாகேந்திரன் சொன்ன பதில்!

திருமாவளவன்

திருமாவளவன்

இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், புதுக்கோட்டை வேங்கைவயலில் நடைபெற்ற சம்பவமானது, இந்த நாட்டுக்கே அவமானமான செயல்... சிறப்பு புலனாய்வு குழுவிற்கு பதிலாக இந்த வழக்கை சிபிசிஐடி மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுவதை வரவேற்கிறோம்.... ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லையே.. அதுதான் என்பது வருத்தம் அளிக்கிறது.. மத்திய மாநில பட்டியலின ஆணையம் உள்ளது. இவை இதுவரை புதுகோட்டை பகுதிக்கு செல்லவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

திருமா

திருமா

முதல்வரோ, காவல்துறையோ சொன்னால் தான் அந்த பகுதிக்கு போக வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. களத்தில் மக்களுக்காக உடனடியாக பணியாற்றி இருக்க வேண்டும்.. யார் பாதிக்கப்பட்டார்கள் என்பது பிரச்சனை அல்ல, மனித குலத்திற்கே அவமானமான பிரச்சனை இது.,இதில் மற்ற அரசியல் கட்சிகள் கண்டனத்தை வெளிப்படுத்தாது வருத்தத்தை அளிக்கிறது" என்று தன் ஆதங்கத்தை திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.. அப்போது எச்.ராஜா, "திருமாவளவனே மாநில அரசை அந்த விஷயத்தில் குற்றம்சாட்டுகிறார்" என்றார்..

 ஆவடி நாசர்

ஆவடி நாசர்

தொடர்ந்து பேசிய எச்.ராஜா, "தமிழ்நாட்டில் அமலில் இருப்பது ஸ்டாலின் ஆட்சியா? மாலிக்கபூர் ஆட்சியா? என்கிற சந்தேகம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.. இந்துக்களின் சொத்துக்களை பறித்து அவர்களை வீதியில் நிறுத்தும் வகையில் வக்பு வாரியத்தின் நடவடிக்கைகள் இருக்கின்றன. திருச்சியில் தமிழ் மன்னர்கள் கட்டிய கோவில்கள் இடம் பெற்று இருக்கும் பல ஊர்களை வக்பு வாரிய சொத்து என்றார்கள் 3 மாதங்களுக்கு முன்பு. ராணிப்பேட்டை மாவட்டத்தில் வகாப்பு என்பவர் வசம் இருந்த சொத்துக்களை வக்பு வாரிய சொத்துக்கள் என்று மாவட்ட நிர்வாகம் மூலமாக கூறுகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் வக்பு சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்துக்கள் வலைதளம் மூலமாக எங்களிடம் புகார் பதிவு செய்யலாம்.

 வெறும்

வெறும் "சோடா"

என் பெயரிலும் என் மனைவி பெயரிலும் இருக்கும் மின் இணைப்புகளுக்கு கூடுதலாக கட்டணம் வந்திருக்கிறது. மின்சார துறை அமைச்சர் எந்த பணியும் செய்வதில்லை. யாரோ செய்த தவறுக்கு நான் எப்படி கூடுதலாக பணம் கட்ட முடியும்? குஜராத்தில் பட்டியலின தொகுதி 40-ல் 34 தொகுதிகளிலும், 27 பழங்குடி தொகுதியில் 23 இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் பாஜக குறித்த பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பவில்லை. இமாச்சல பிரதேசத்தில் 500க்கும் குறைவான வாக்குகளால் 10க்கும் மேற்பட்ட தொகுதியில் வெற்றியை தவறவிட்டோம். வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்தது.

 35 ரூபாய்

35 ரூபாய்

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை முடியும்போது வெறும் 'சோடோ'வாகத்தான் இருக்கும். பயணம் என்ற பெயரில் பாட்டி வீட்டுக்கு சென்று அவ்வப்போது ராகுல் காந்தி ஓய்வு எடுப்பது வழக்கமான ஒன்றுதான். சிறைக்கு செல்ல உள்ள மூவரில் செந்தில்பாலாஜிக்கு அடுத்த இடத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் இருக்கிறார். ஆவடி நாசர் 6 மாதம் மாடு மேய்த்து பால் கறந்து, ஒரு லிட்டர் பால் 36 ரூபாயில் லாபம் கிடைக்குமா என கூற வேண்டும். அதிமுக சின்னம் குறித்து நான் கருத்து கூற முடியாது. ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் செல்வாக்கு கொண்ட தலைவர்கள்தான். இடைத்தேர்தலில் திமுகவை தோற்கடிக்க பொன்னான வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது.

 நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

திமுக இடைத்தேர்தலில் தோற்றல் ஸ்டாலினும், உதயநிதியும் பேசுவதற்கு எதுவுமே இருக்காது. காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டி உள்ளதால் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்பது அவசியம் இல்லாத கேள்வி. திமுகவில் பெரிய கருப்பன் செய்தது குறித்து யாரும் கேள்வி கேட்க மாட்டீர்கள். நயினார் நாகேந்திரன் சேது சமுத்திர திட்டத்தை ஆதரிப்பதாக சட்டமன்றத்தில் கூறினாரா? ராமர் பாலத்தை தகர்க்காமல் கட்டினால் ஆதரிப்பதாகத்தானே சொன்னார்.. சுனாமியால் ராமேஸ்வரம் பகுதி பாதிக்கப்படாமல் இருக்க காரணம் ராமர் பாலம்தான்.

ராமர்பாலம்

ராமர்பாலம்

அதை நீங்கள் "மணல் திட்டு" என்று சொன்னாலும் அதுதான் ராமேஸ்வரத்தை காப்பாற்றியது... சேது சமுத்திர திட்டத்தால் அரசுக்கு பொருளாதார ரீதியாக என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிவிக்க வேண்டும். புதுக்கோட்டை வேங்கைவயல் பிரச்சினை குறித்து திருமாவளவனே மாநில அரசை குற்றம்சாட்டுகிறார். இது தொடர்பாக நான் மேலும் என்ன சொல்வது? அதை பற்றி கருத்து கூற நான் விரும்பவில்லை" என்றார். கடந்த வாரம் பாஜகவின் வேலுர் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் பேசியபோது, "தமிழகத்தில் எல்லா சினிமாக்களையும் ஒரு நிறுவனமே வெளியிட்டு கார்ப்பரேட் போன்று கையகப்படுத்துகின்றனர் என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார்.. விரைவில் பாஜக கூட்டணிக்கு அவர் வர வேண்டும்" என்று அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Did Naianar Nagendran support Sethu Samudra and what did H Raja say about Vengaivasal issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X