நிர்மலா சீதாராமனை நான் சந்தித்துப் பேசவே இல்லை.. எனக்கென்ன பயமா? வெளியான தகவலுக்கு சீமான் மறுப்பு!
சென்னை: சென்னை வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. ஆனால் தான் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை என சீமான் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று இரவு இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது. தமிழக அரசியல் நிலவரம் குறித்து சீமான், நிர்மலா சீதாராமனிடம் பேசியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதேபோல், சென்னையில் தங்கியுள்ள நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பேசியுள்ளார்.
கடந்த மார்ச் 25 ஆம் தேதி டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அமித் ஷா தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, அதிமுக எம்.பி. தம்பிதுரை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தித்துப் பேசினார். இதனிடையே டெல்லி சென்ற செங்கோட்டையன் அங்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். மேலும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் சந்தித்துப் பேசியதாகவும் தகவல் வெளியானது.
ஏற்கனவே டெல்லி சென்றபோது நிர்மலா சீதாராமனை, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்த நிலையில், இன்று மீண்டும் சென்னையில் தங்கியுள்ள நிர்மலா சீதாராமனை சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசியுள்ளார். கட்சி தலைமையின் அறிவுறுத்தல் இன்றி செங்கோட்டையன் தனியே சென்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை நடத்துவதால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2026 சட்டசபை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரம் அடைந்துள்ள சூழலில் இந்தச் சந்திப்புகள் நடைபெற்று வருவது பல்வேறு யூகங்களைக் கிளப்பி விட்டுள்ளது.
இந்நிலையில், தான் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை என தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் சீமான். செய்தியாளர்களிடம் பேசுகையில், “சந்தித்தால் நான் சந்தித்தேன் எனச் சொல்லப் போகிறேன். எனக்கென்ன பயமா? தயக்கமா? ரஜினியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவர் என்ன பாஜகவா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications