சொன்ன மாதிரியே செஞ்சிட்டாரே ஓபிஎஸ்.. மோடியிடம் தரப்பட்ட ரகசிய பைல்.. எடப்பாடி தலைக்கு மேல் கத்தி
சென்னை: பிரதமரை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் ஒரு கடிதம் மற்றும் ஒரு பைல் கொடுத்திருக்கிறார். அதில் எடப்பாடி தொடர்பான ரகசியங்கள் இருந்ததாக டெல்லி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்தார். திருச்சி வந்த மோடியை எடப்பாடி சந்திக்கவில்லை. மாறாக ஓ பன்னீர்செல்வம் சென்று சந்தித்தார். இவர்கள் சுமார் 5 நிமிடம் பேசிக்கொண்டனர்.

இந்த சந்திப்பில் சில முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டு உள்ளதாம். அதன்படி பிரதமரை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் ஒரு கடிதம் மற்றும் ஒரு பைல் கொடுத்திருக்கிறார். அதில் எடப்பாடி தொடர்பான ரகசியங்கள் இருந்ததாக டெல்லி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
என்ன சொன்னார் ஓ பன்னீர்செல்வம்: சமீபத்தில், நான் வாய் திறந்தால் எடப்பாடி திகார் ஜெயிலுக்கு போவார் என ஓபிஎஸ் சொன்னது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு ரகசியத்தைதான் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மோடியிடம் கொடுத்து உள்ளாராம். எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய செக் வைக்கும் விதமாக அவர் இந்த பைலை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
எடப்பாடி ஆலோசனை: இந்த ரகசியம் பற்றி புத்தாண்டு அன்றே எடப்பாடி பழனிசாமியிடம் மா.செ.க்கள் கேட்டு உள்ளனர். அதற்கு, ரகசியம் இருந்தால் வெளியே சொல்ல வேண்டும் என நாம் பதிலடி கொடுத்து விட்டோமே. இன்னும் என்ன சந்தேகம் ? நாம் சில ரகசியங்களைச் சொன்னால் அவர் தான் ( ஓபிஎஸ் ) ஜெயிலுக்கு போவார்.
நம் வழக்கறிஞர்கள் கூட, ஹவுஸிங் டிபார்ட்மெண்ட்டில் ஓபிஎஸ் எதிராக நாமளே ஊழல் வழக்கு போடலாமே என கேட்டார்கள். நான் தான், இப்படி மலிவான அரசியல் வேண்டாம்னு தடுத்து விட்டேன். ஓபிஎஸ் பேசியதை அவரது வாய்சாக நினைக்கவில்லை. தினகரன் சொல்லி அவர் பேசுகிறார். ஏன்னா, நமக்கு எதிரா அவர் பேசினா, அவருக்கு எதிரான ஊழல்களை நாம் சொல்லமாட்டோமோ ! இது அவருக்கும் தெரியும். அதனால, அவர் பேசியது தினகரனின் வாய்ஸ் தான். அதப்பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க என சொன்னார் எடப்பாடி.
ஆமாண்ணா... அவராக பேசியிருக்க மாட்டார்னு மா.செ.க்களும் சொன்னார்கள். அதற்கு பிறகு, கவர்னர்-முதல்வர் சந்திப்பில் நடந்ததை பற்றி தங்கமணி சில விசயங்களைச் சொல்ல, திமுக அரசு வலியுறுத்தலை ஏற்றுக்கொண்டு வீரமணிக்கும் விஜயபாஸ்கருக்கும் எதிரான கோப்புகளுக்கு கவர்னர் ஒப்புதல் தந்தால்... அது, சிக்கல் தான். நமக்கும் நெருக்கடியைத் தரும். டெல்லி சப்போர்ட் இருந்த வரை கவர்னரும் நமக்கு சப்போர்ட்டாக இருந்தார்.
இனி என்ன செய்வார்னு தெரியலை. என்ன நடக்குதுன்னு பார்க்கணும். நிச்சயம் டெல்லியிடம் கலந்து பேசாமல் இதற்கு அனுமதி தரமாட்டார்னு நினைக்கிறேன். வெயிட் பண்ணித்தான் பார்க்கணும். அனுமதி தராமல் இருக்க வழி ஏதேனும் இருக்கான்னு யோசிக்கணும் என சொன்னார் எடப்பாடி. அவரே அப்படி சொன்னதால், கவர்னர் அனுமதித்தால் வீரமணியும் விஜயபாஸ்கரும் தப்பிப்பது கஷ்டம் தான் என எல்லோருமே பேசிக்கொண்டனர் " என்றார் நம்மிடம் அந்த மாஜி அமைச்சர்.
டெல்லி வரை போன மேட்டர்: இப்படிப்பட்ட நிலையில்தான் பிரதமரை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் ஒரு கடிதம் மற்றும் ஒரு பைல் கொடுத்திருக்கிறார். அதில் எடப்பாடி தொடர்பான ரகசியங்கள் இருந்ததாக டெல்லி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பைல்கள் காரணமாக டெல்லி வரை அதிமுக மேட்டர் பெரிய விவாதப்பொருளாகி இருக்கிறதாம்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications