தீர்ப்பு வந்துடுச்சு! வெளியே போ! கதவை தட்டிய எடப்பாடி டீம்.. முக்கிய "பைல்ஸ்களை" அள்ளிய ஓபிஎஸ்? பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடங்கி உள்ள நிலையில் சரியாக நேரம் பார்த்து ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்திற்கு இன்று வந்தார். அதிமுக அலுவலகத்திற்கு வெளியே இதனால் கடுமையான மோதல் ஏற்பட்டது.

Recommended Video

    ADMK தலைமை அலுவலகத்தில் OPS - EPS ஆதரவாளர்கள் இடையே மோதல்... ராயப்பேட்டையில் பரபரப்பு

    அதிமுக பொதுக்குழு, செயற்குழு சென்னை வானகரத்தில் தொடங்கி நடந்து வருகிறது. அதிமுக பொதுக்குழுவை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

    இதையடுத்து இன்று பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

    பொதுக்குழு

    பொதுக்குழு

    அதிமுக பொதுக்குழு தொடங்கி உள்ள நிலையில் சரியாக நேரம் பார்த்து ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்திற்கு இன்று வந்தார். மிகப்பெரிய மோதலுக்கும், கலவரத்திற்கு இடையில்தான் ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலக்திற்கு வந்தார். அதிமுக அலுவலகம் முன்பு அதிரடி படை போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆனாலும் எடப்பாடி - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். சண்டை கொஞ்சம் பெரிதான பின்பே... ஓபிஎஸ் அதிமுக அலுவலகம் சென்ற பின்பே.. போலீசார் சண்டை போட்டவர்களை தடுத்து நிறுத்தினர்.

    போலீஸ்

    போலீஸ்

    இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு பூட்டை உடைத்து அதிமுக அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்தது. இவரை போலீசார் தடுக்கவில்லை. ஓ பன்னீர்செல்வம் சட்டப்படி அதிமுக பொருளாளர். அதோடு இப்போதும் அவர் ஒருங்கிணைப்பாளர். இதனால் அவரை போலீசார் தடுக்க முடியாது. எனவே போலீசார் அவரை அனுமதித்தனர். ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் அதிமுக அலுவலக பூட்டை உடைத்தனர்.

    பூட்டை உடைத்தார்

    பூட்டை உடைத்தார்

    இதன்பின் ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகம் உள்ளே சென்றார். உள்ளே சென்ற அவர் மேலே ஏறி பால்கனியில் இருந்து தொண்டர்களை நோக்கி கையசைத்தார். அவர் தொண்டர்கள் மத்தியில் பேசவில்லை. மாறாக உள்ளே சென்று அவர் ஆலோசனை செய்ய தொடங்கினார். அப்போதுதான் சரியாக அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பு வந்தது.

    என்ன நடந்தது?

    என்ன நடந்தது?

    ஓபிஎஸ் உள்ளே இருக்கும் போதுதான் அதிமுக பொதுக்குழுவை நடத்தலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதோடு பொதுக்குழுவிற்கு எந்த விதமான கட்டுப்பாடுகளையும் விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து அதிமுக அலுவலகத்திற்குள் எடப்பாடி ஆதரவு நிர்வாகிகள் நுழைய முயன்றனர். ஹே தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்துடுச்சு.. நீ வெளியே போ என்று கூறி ஓபிஎஸ்ஸை பார்த்து எடப்பாடி ஆதரவு நிர்வாகிகள் கோஷம் எழுப்பினார்கள்.

    கோப்புகள்

    கோப்புகள்

    அதிமுக அலுவகம் உள்ளே எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிர்வாகிகள் நுழைய முயன்றனர். ஆனால் ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் இதை அனுமதிக்கவில்லை. இதனால் இரண்டு தரப்பிற்கும் இடையில் அங்கு கடுமையான மோதல் ஏற்பட்டது. உள்ளே ஓ பன்னீர்செல்வம் தரப்பு முக்கியமான கோப்புகளை கைப்பற்றி உள்ளது. முக்கியமாக அதிமுக கோப்புகள், சில சீக்ரெட் கோப்புகளை ஓபிஎஸ் தரப்பு கைப்பற்றி உள்ளது. அதோடு அலுவலக கணினிகளை ஓபிஎஸ் தரப்பு பார்வையிட்டுள்ளது. ஓபிஎஸ் வெளியேறும் பட்சத்தில் இந்த கோப்புகளோடு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+