தங்கலான் படம் வரலாற்றுத் திரிபு.. பாய்ந்து வந்த அட்டாக்.. பா. ரஞ்சித் அதை மிஸ் பண்ணிட்டாரே.. சர்ச்சை
சென்னை: தங்கலான் படம் வரலாற்றுத் திரிபு படம் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு மக்கள் போராட்டங்களை எல்லாம் பௌத்தம் என உருட்டியதுதான் தங்கலான் படம். படத்தில் எங்கும் சமணம் பற்றிய ஒரு சிறு குறிப்புகூட இல்லை, என்று எழுத்தாளர் நிவேதா லூயிஸ் விமர்சனம் வைத்துள்ளார்.
கோலார் தங்க வயலில் தங்கம் எடுக்க சென்ற கொத்தடிமைகளாக மக்கள் குழுவிற்கும், அந்த பகுதியை காக்கும் நாகர்கள் மக்கள் குழுவிற்கும் இடையே நடக்கும் போராட்டத்தையும் இதில் சாதிய அமைப்புகள், இந்து மத பிரிவினைகள் எப்படி செயல்படுகின்றன, புத்த விகாரங்கள் எப்படி அழிக்கப்பட்டன என்பதை எல்லாம் மையப்படுத்தி இந்த தங்கலான் படம் எடுக்கப்பட்டு உள்ளது.

இயக்குனர் பா.ரஞ்சித் பல பேட்டிகளில் தனக்கு மேஜிக்கல் ரியலிசம் பிடிக்கும் என்று குறிப்பிட்டு உள்ளார். அதை மையப்படுத்தியே இந்த கதையையும் அமைத்து உள்ளார். ஆரத்தி கதாபாத்திரம் நிலத்தை காக்க செய்யும் போராட்டங்கள், நாகர்கள் பக்கம் இருக்கும் நியாயங்கள் என்று பல அரசியலை இந்த படம் பேசி இருக்கிறது. முக்கியமாக புத்த விகாரங்கள் எப்படி அழிக்கப்பட்டன, அங்கே மற்ற இந்து தெய்வங்கள் எப்படி கொண்டு வரப்பட்டன என்பது போன்ற காட்சிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
அதோடு இல்லாமல் ஜாதி கொடூரம், பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு, சிற்றரஸ்கள், ஊர் பண்ணையார்கள் எப்படி நிலங்களை ஆக்கிரமித்தனர் என்பது எல்லாம் காட்சிகளாக, அரசியலாக படத்தில் காட்டப்பட்டு உள்ளது.
அதே சமயம் இந்த படத்தில் அரசியல் ரீதியாக சில தவறுகள் இருப்பதாகவும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. மன்னர்கள் குறித்த தவறான சித்தரிப்புகள் இருப்பதாகவும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தங்கலான் படம் வரலாற்றுத் திரிபு படம் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு மக்கள் போராட்டங்களை எல்லாம் பௌத்தம் என உருட்டியதுதான் தங்கலான் படம். படத்தில் எங்கும் சமணம் பற்றிய ஒரு சிறு குறிப்புகூட இல்லை, என்று எழுத்தாளர் நிவேதா லூயிஸ் விமர்சனம் வைத்துள்ளார்.
விமர்சனம்: இதேபோல் ராஜசங்கீதன் என்பவர் எக்ஸ் பக்கத்தில் வைத்துள்ள விமர்சனத்தில், இதை புதிய கோணத்தில் அணுகி உள்ளார். அதில், Unleash என ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் உண்டு. 'கட்டவிழ்த்து விடுதல்' என மொழிபெயர்க்கலாம். பல நேரங்களில் இந்த வார்த்தையை ஒருவரின் கோபத்தை குறிக்க பயன்படுத்துவார்கள். எந்தவித கட்டுப்பாடுக்கும் தாழ்படிய விரும்பாத தன் கோபத்தை பா.ரஞ்சித் 'தங்கலான்' படத்தில் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.
தங்கலான் செய்திருக்கும் வரலாற்றுத் திரிபு இவற்றை எல்லாம் பௌத்தம் என உருட்டியதுதான். படத்தில் எங்கும் சமணம் பற்றிய ஒரு சிறு குறிப்புகூட இல்லை!, என்று குறிப்பிட்டு உள்ளார்.
விமர்சனம்; இதேபோல் ராஜசங்கீதன் என்பவர் எக்ஸ் பக்கத்தில் வைத்துள்ள விமர்சனத்தில், இதை புதிய கோணத்தில் அணுகி உள்ளார். அதில், Unleash என ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் உண்டு. 'கட்டவிழ்த்து விடுதல்' என மொழிபெயர்க்கலாம். பல நேரங்களில் இந்த வார்த்தையை ஒருவரின் கோபத்தை குறிக்க பயன்படுத்துவார்கள். எந்தவித கட்டுப்பாடுக்கும் தாழ்படிய விரும்பாத தன் கோபத்தை பா.ரஞ்சித் 'தங்கலான்' படத்தில் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.
'பூதம் காக்கும் புதையலை அடைவது' என்கிற தொன்மக் கதைக்குள் இந்திய வரலாற்றையும் தலித்களின் விடுதலைக்கான அரசியலையும் தன்னுடைய திரை ஆக்க செறிவில் படைத்து அளித்திருக்கிறார் பா.ரஞ்சித்.
இந்திய வரலாற்றைப் பதிவு செய்தததில் இரு சிந்தனைப் போக்குகள் பிரதான பங்களிப்பை வழங்கியிருக்கின்றன. மார்க்சிய போக்கு, இந்தியப் பரப்பின் மக்கள், உற்பத்தி, சாதி, சமூகம், உழைப்பு, அரசு உருவாக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்தியது. அம்பேத்கரிய, பெரியாரியப் போக்குகள் பிரதானமாக மானுடவியல், கருத்தியல், மதம், பண்பாடு முதலியவற்றில் கவனம் செலுத்தியது. இரு போக்குகளுமே ஒப்புக் கொண்ட முக்கியமான இடம், பார்ப்பன ஆதிக்கம்!
பா.ரஞ்சித், அம்பேத்கரின் சிந்தனைப் போக்கை எடுத்திருக்கிறார். பார்ப்பனியத்துக்கும் பெளத்தத்துக்கும் இடையிலான போர்தான் இந்திய வரலாறு என்றவர் அம்பேத்கர். நாகர்கள்தான் பூர்வக்குடிகள் என்பார். பெளத்தம், பார்ப்பனியத்துக்கு முக்கியமான மாற்றுநெறி என அறிவித்தவர்.
தங்கலான் படத்தில் அம்பேத்கரின் சிந்தனைப் போக்கை கையாண்டிருக்கிறார் பா.ரஞ்சித். அம்பேத்கரின் யார் சூத்திரர்கள், புத்தரா காரல் மார்க்ஸா போன்ற புத்தகங்களை எடுத்து படத்தில் கையாண்டிருக்கிறார். மறுபக்கத்தில் தங்கம் குறித்த மார்க்சின் 'மஞ்சள் பிசாசு' என்கிற சொல்லாடலை 'மஞ்சள் பேய்' என எடுத்தாளுகிறார். மார்க்சியம் முன் வைக்கும் உற்பத்தி முறை மாற்றம் என்கிற உத்தியைக் கொண்டும் இந்திய அரசியல் மாற்றங்களை தலித் விடுதலை நோக்கி அவதானிக்கிறார்.
இயக்குநர் பா.ரஞ்சித்தை பொறுத்தவரை தன்னுடைய திரை ஆக்கங்களுக்கென நம்மை ஒரு வகையில் அவர் பழக்கப்படுத்தி விட்டார். அவரின் பெரும்பாலான படங்கள் வெளியானதும் அது சார்ந்த விவாதங்கள் முகநூலில் நடக்கும். அந்த விவாதங்கள் அரசியல் உரையாடலாக பரிணமிக்கும். போலவே அவருடைய படங்களில் குறியீடுகளாக என்னவெல்லாம் இடம்பெறும் என்பதையும் அவரின் அரசியல் அடிப்படையில் என்னவாக இருக்கும் என்பதையும் ஓரளவுக்கு நம்மை ஏற்க வைத்து விட்டாரென சொல்லலாம்.
இன்னொரு அற்புதமாக மணிரத்தின பாணி கிசுகிசுப்பு பேச்சுகளை தாண்டி, உழைக்கும் வர்க்க மக்களின் சத்தமான பேச்சு பாணியையும் தமிழ்ச் சமூகம் ஏற்க வைத்திருக்கிறார். இவை யாவுமே பா.ரஞ்சித் என்கிற ஆளுமையின் வீச்சு என்றுதான் சொல்ல வேண்டும்.
தங்கலான் படத்தில் இவை எல்லாமுமே நேர்ந்திருக்கிறது. கூடுதலாக திரை ஆக்கத்தில் பா.ரஞ்சித்தின் பெரும் பாய்ச்சல் நேர்ந்திருக்கிறது. நானும் தோழரும் முக்கியமாக ஒரு விஷயத்தை படம் முழுக்க வியந்து கொண்டே இருந்தோம். ஒரு செட் போட்டு அதற்குள் Mystic உணர்வை கொண்டு வருவது எளிது. திறந்தவெளியில் பெரும் வெளிச்சத்தில் அதை இயக்குநர் நிகழ்த்திக் காட்டியிருந்ததை வியந்து கொண்டிருந்தோம். குறிப்பாக Indiana Jones, Mummy போன்ற expedition கதைக்குள் அரசியல், வரலாறை குறியீடாக்குவது சிக்கலாக மாறும் தன்மை இருக்கிறது எனத் தெரிந்தும் அதை செய்து, வென்று காட்டியிருக்கிறார். கூடுதலாக தமிழர் வாழ்வுக்குரிய தொன்மத்தை அதற்குள் உள்ளடக்கி Magical Realism பாணியை தமிழ்ப்படுத்தியிருப்பது ரசனைக்குரியது.
இருவேறு காலவெளிகளாக துண்டுகளாக காட்டப்பட்டு தொடங்கும் இறுதிக்காட்சி, படபடவென விரிந்து புத்தரை காண்பித்து பிறகு காலப்பெருவெளியினூடாக இந்திய வரலாற்றில் நேர்ந்த அரசியல் சூழ்ச்சிகளில் தலித்களும் உழைக்கும் மக்களும் அடிமையாகி உரிமை இழந்து தொடர்ந்து வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டிய விதம் புல்லரிக்க வைத்தது. கிட்டத்தட்ட Lucy பட இறுதிக்காட்சி போல, வரலாற்றினூடாக ஒரு wormhole போல் அக்காட்சி அமைந்திருந்தது.
மார்க்சிஸ்டுகளாக நிச்சயம் பா.ரஞ்சித் முன் வைக்கும் அரசியலில் நமக்கு முரண் உண்டு. அது பகை முரண் அல்ல, நேச முரண்தான். இப்படத்திலும் பா.ரஞ்சித் உருவாக்க முயலும் 'க்டந்தகால பெளத்த பொற்காலத்தில்' நமக்கு விமர்சனம் இருந்தாலும் அவர் முன் வைக்கும் அரசியலுக்கான நியாயம் என்றாலும் அதைத் தாண்டி ஒரு நெருடல் படத்தின் முடிவில் இருந்தது. தங்கத்தை சுரண்ட முனையும் ஏகாதிபத்தியம் மற்றும் அரசுகளுக்கு எதிராக அதைக் காவல் காத்து நிற்கும் ஆரத்தியிடம் தங்கலான், 'தொடர்ந்து வீழ்த்தப்படும் எங்களின் மேம்பாட்டுக்காக மட்டும் கொஞ்சம் பயன்படுத்திக் கொள்கிறோம்' எனக் கேட்பது சரியாக இருக்குமா என்பதுதான். அந்தக் 'கொஞ்சம்' என்பது எப்போதும் முடிவுறாது என்பதை குறிக்க புத்தர் சொன்னதுதானே 'பற்றறு' என்பதும் மார்க்ஸ் சொன்ன தனியுடமை என்பதும்?
இது அரசியல் உரையாடல். இது இப்படிதான் நடக்கும். நடக்கட்டும். அதுவே ஆரோக்கியம்!
மற்றபடி தங்கலான் படத்தில் பெரும் பாய்ச்சலை ஆக்கமாவும் உள்ளடக்கமாகவும் பா.ரஞ்சித் நிகழ்த்தியிருக்கிறார். விக்ரம் உள்ளிட்ட பல நடிகர்கள் நின்றாடியிருந்தாலும் என்னுடய pick ஆதித்தாய், ஆரத்திதான், என்று குறிப்பிட்டுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications