அதிமுக- தவெக கூட்டணிக்கு பிரசாந்த் கிஷோர் முயற்சியா? சென்னையில் நடந்ததா ரகசிய சந்திப்பு? பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய தேர்தல் வியூக வல்லுநரான பிரசாந்த் கிஷோர் சென்னையில் சில ரகசிய சந்திப்புகளை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டது. மேலும் அதிமுக- தவெக கூட்டணிக்கு பிரசாந்த் கிஷோர் தீவிரமாக முயற்சித்து வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் சென்னையில் பிரசாந்த் எந்த ஒரு ரகசிய சந்திப்பையும் நடத்தவே இல்லை என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

நடிகர் விஜய் நடத்தி வரும் தமிழக வெற்றிக் கழகத்தில் ஜான் மற்றும் ஆதவ் அர்ஜூனா ஆகிய தேர்தல் வியூக நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல் வியூக வல்லுநரான பிரசாந்த் கிஷோர் சென்னை வந்து பனையூரில் நடிகர் விஜய்யை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக நடந்தது. பிரசாந்த் கிஷோர்- விஜய்யை சந்தித்தார் என்பது வரை உண்மை.

aiadmk tvk vijay

ஆனால் இந்த சந்திப்புக்குப் பின்னர் கிளப்பிவிடப்பட்டிருக்கும் பல்வேறு யூகச் செய்திகள் அனைத்தும் நிஜம் அல்ல என்கின்றன அரசியல் வட்டாரங்கள். உதாரணமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ரகசியமாக பிரசாந்த் கிஷோர் சந்தித்ததாக ஒரு தரப்பு தகவல்கள் தெரிவித்திருந்தன. உண்மையில் அப்படியான ஒரு சந்திப்பே நடக்கவில்லையாம்; ஏனெனில் அதிமுகவுக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் முந்தைய கொடுக்கல் வாங்கலில் ஒரு சிக்கல் இன்னமும் தீர்க்கப்படவில்லையாம்; இருந்த போதும் தங்களது தரப்புக்கு ஒரு பூஸ்டப்பாக இருக்கட்டுமே என்றே அப்படி ஒரு தகவலே பரப்பிவிடப்பட்டதாம்.

அதேபோல நடிகர் விஜய் கட்சிக்கு 15% முதல் 20% வாக்குகள் கிடைக்கப் போகிறது என்பதை மையமாக வைத்து ஒரு அறிக்கையையும் பிரசாந்த் கிஷோர் கொடுத்தனுப்பினார் என்பது இன்னொரு தகவல். அப்படி எல்லாம் ஒரு அறிக்கையையும் பிரசாந்த் கிஷோர் யாரிடமுமே தரவில்லை என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

மேலும் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்கு பிரசாந்த் கிஷோர்தான் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார் எனவும் ஒரு தரப்பில் தகவல்கள் பரப்பிவிடப்பட்டன. ஆனால் அதிமுகவும் சரி, தவெகவும் சரி தங்களது தலைமையில்தான் கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கின்றன; சசிகலா, தினகரன், ஓபிஎஸ்ஸையே செரித்த அதிமுக தலைமை, விஜய் தலைமையின் கீழ் ஒரு கூட்டணிக்கு செல்வது என்பதெல்லாம் வாய்ப்பு சிறிதும் இல்லாதது; அதேபோல அதிமுகவுக்கு இணையாக விஜய்க்கு சீட்டுகளை அக்கட்சி ஒதுக்கும் என்பதும் நடக்காத ஒன்று; ஆகையால் அதிமுக -தவெக கூட்டணிக்கே வாய்ப்பில்லை என்கிற போது பிரசாந்த் கிஷோர் எப்படி பேச்சுவார்த்தை நடத்தக் கூடும் ? என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+