டோண்ட் வொரி.. உங்களுடன் இருப்பேன்.. விஜய்க்கு போனை போட்ட ராகுல்? உண்மையில் அப்படி என்ன நடந்தது?
சென்னை: நெல்லையில் தேர்தல் பிரச்சாரம் செய்த தவெக தலைவர் நடிகர் விஜய், "உண்மையான காங்கிரஸ் நம்மோடுதான் இருக்கிறது" என்று கொளுத்திப் போட்ட குண்டு, காங்கிரசில் பிரளயத்தையோ உருவாக்கியிருக்கிறது.
விஜய் திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்கையில், திமுக கையில் முழு பவரும் இருந்திருந்தால் இந்த நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடந்திருக்காது. ஸ்டாலின் சார் அதிகாரம் இல்லாத முதல்வராக இருப்பதால் இந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இப்போது அவரிடம் முழு அதிகாரம் இருந்தால் எனக்கு அனுமதி கொடுத்திருக்க மாட்டார்கள்.

என் நெஞ்சில் குடியிருக்கும் திருநெல்வேலி மக்களுக்கு வணக்கம் எனக்கூறி தவெக தலைவர் விஜய் பேச்சை தொடங்கினார்; உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் நண்பன் உங்களைத்தேடி வந்திருக்கிறேன்; அதிகாரமில்லாத முதல்வராக ஸ்டாலின் இருப்பதால் நெல்லையில் நிகழ்ச்சி நடத்த முடிந்திருக்கிறது.
உங்களுக்காக நான் வந்துவிடக் கூடாது என்பதே திமுக, பாஜகவின் நோக்கம். மீண்டும் திமுக ஆட்சிக்கு வர முடியாத சூழலை மக்கள் ஏற்படுத்திவிட்டார்கள். திமுகவின் தேர்தல் கணக்குகளை மக்கள் புதைத்துவிட்டார்கள். உண்மையான காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் நிற்கிறது.
கரூர் விவகாரம் தொடர்பாக என் மீதி பழியை போட்டார்கள். என்னை முடக்க பார்த்தார்கள். நான் முடங்கவில்லை. நான் வீட்டில் உட்காரவில்லை. மக்கள் இப்போதும் என்னுடன் இருக்கிறார்கள். இதை பார்த்து அவர்களுக்கு ஷாக். என்னடா மக்கள் இப்போதும் இவருடன் இருக்கிறார் என்று அவர்களுக்கு கோபம்.
சரி இவரை எப்படியாவது முடக்க வேண்டும் என்று ஜனநாயகன் படத்தை முடக்கினார்கள், அது யார் என்று சொல்ல மாட்டேன். என் படத்தை முடக்கினால் நான் முடங்கிவிடுவேன் என்று நினைத்தார்கள். ஆனால் நான் முடங்கவில்லை. வலிமையாக இருக்கிறேன். இதை பார்த்து ஷாக் ஆனவர்கள் என்னை முடக்க வேண்டும் என்று எஸ்ஓபி கொண்டு வந்தனர்.
என்னை மட்டும் முடக்க வேண்டும் என்று எஸ்ஓபி கொண்டு வந்தனர். நான் செயல்படக்கூடாது என்று எஸ்ஓபி கொண்டு வந்தனர். அதை எல்லாம் மீறி நான் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறேன். இந்த எஸ்ஓபி எண்ணி முடக்காது, என்று கூறினார்.
காங்கிரஸ் கூட்டணி
நெல்லையில் தேர்தல் பிரச்சாரம் செய்த தவெக தலைவர் நடிகர் விஜய், " உண்மையான காங்கிரஸ் நம்மோடுதான் இருக்கிறது " என்று கொளுத்திப் போட்ட குண்டு, காங்கிரசில் பிரளயத்தையோ உருவாக்கியிருக்கிறது. திமுக தலைமையும், ' என்ன இது?' என்று கேள்வி எழுப்பும் வகையில், விஜய்யின் அந்த பேச்சு இருந்திருக்கிறது.
விஜய்யின் பேச்சை மறுத்தும், அவரை கண்டித்தும் பேட்டியளித்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. இவரது கண்டணம் காங்கிரசில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, "விஜய் உண்மையைத்தானே சொல்லியிருக்கிறார். அதில் கண்டிக்க என்ன இருக்கிறது? " என்கிற அளவுக்கு விவாதங்கள் சத்தியமூர்த்திபவனில் களை கட்டியபடி இருக்கிறது.
அதேசமயம், 'உண்மையான காங்கிரஸ்' என்று அக்கட்சியின் தொண்டர்களைத் தான் விஜய் சொல்கிறார் என காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்துகின்றனர். ஆனால், அதையும் தாண்டி விஜய் சொன்னதன் பொருள் வேறு என்கிறார்கள் சீனியர் காங்கிரசார்.
இது குறித்து விசாரித்தபோது, "உண்மையான காங்கிரஸ் என விஜய் குறிப்பிடுவது தமிழக காங்கிரசை அல்ல! ராகுல் காந்தி, கே சி. வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரசின் தேசிய லீடர்களைத்தான் அவர் சொல்கிறார். தேசிய தலைமையும், காங்கிரசில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் தவெக வுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தனர். அதை மிகவும் எதிர்பார்த்திருந்தார் விஜய். ஆனால், திமுகவின் அழுத்தம் காரணமாக, ப. சிதாம்பரம், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் தான் தவெக கூட்டணியை எதிர்த்தது.
அத்துடன், திமுக கூட்டணியை நிலை நிறுத்தியும் கொண்டனர். இதில் ராகுல் உள்ளிட்ட பலருக்கும் மன கசப்புகள் தான். திமுகவுடன் கூட்டணியை காங்கிரஸ் உறுதிப்படுத்தியதில் ராகுலுக்கு உடன்பாடில்லை. உறுதி படுத்தப்பட்ட அன்றைய தினமே விஜய்யை தொடர்புகொண்டு பேசிய ராகுல், "டோண்ட் வொரி. நான் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன் " என்று சொல்லியிருக்கிறார். அதை நேரடியாக சொல்லாமல் தனது பாணியில் சொல்லியிருக்கிறார் விஜய். அவரை பொறுத்தவரை உண்மையான காங்கிரஸ்னா அது ராகுல்தான் " என்று ஒரு புதிய தகவலை பகிர்ந்து கொள்கிறார்கள்.
- சிறப்பு நிருபர் எழில்
-
ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருவாரா? நேரடியாக கேட்ட திமுக.. பதில் சொல்ல தயங்கும் காங்கிரஸ்! -
2021 vs 2026 தேர்தல்! எவ்வளவு வித்தியாசம்..? ராகுல் காந்தி பழைய ஃபார்மில் இருக்கிறாரா இல்லையா? -
திமுக கொடுத்த சின்ன தோசை.. அப்செட்டில் ராகுல் காந்தி? பிரவீன் சக்கரவர்த்தி இப்படியெல்லாம் பேசறாரே -
தேமுதிக அதிர்ச்சி வைத்தியம்! பார்த்தசாரதிக்கு 'சீட்' மறுப்பு! கட்சி தாவுகிறாரா மாஜி எம்எல்ஏ? -
விந்தியா பேசும்போதே குறுக்கே நபர்.. மைக் ரிப்பேர்.. திமுகவையும் திட்டணும்.. கடலூரில் செம டென்ஷன் -
"எனக்கும் மரணம் வரும்.. என்னைப் புதைத்தாலும் எனது திட்டங்களைப் புதைக்க முடியாது” - முதல்வர் ஸ்டாலின் -
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2000.. டியூஷன் அக்கா திட்டம்.. மேஜர் வாக்குறுதிகளை வெளியிட்ட காங்கிரஸ்! -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
புதுச்சேரியில் புது ரெக்கார்டு! வரலாறு படைத்த வாக்காளர்கள்.. வாக்கு சதவிகித்தை பாருங்க! -
போட்டியின்றி எம்எல்ஏவாகும் அஜித் பவார் மனைவி.. காங்கிரஸ் முடிவால் மகாராஷ்டிரா துணை முதல்வர் ஹேப்பி -
காங்கிரஸ் வென்றால் இவர் தான் முதல்வர்.. கேரளாவில் "கை"க்கு எழுச்சியை கொடுத்த சதீசன்.. யார் இவர்? -
பாஜக இல்லாத சட்டமன்றம்.. 5வது சக்தியாக பரகல பிரபாகர் முன்னெடுக்கும் புதிய அரசியல் அலை.. பின்னணி என்ன












Click it and Unblock the Notifications