காதலிச்சு கல்யாணம் பண்ணுனோம்.. இப்போ என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை! நடிகர் சரவணன் மீது மனைவி புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் காதல் நாயகனாகவும், பின்னர் குணச்சித்திர நடிகராகவும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் சரவணன், தற்போது குடும்ப பிரச்சனை காரணமாக மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். அவரது முதல் மனைவி சூர்யஸ்ரீ, "எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை" என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

90-களில் தமிழ் சினிமா ரசிகர்களின் பிரபல ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்த சரவணன், 'வைதேகி வந்தாச்சு', 'சூரியன் சந்திரன்' போன்ற படங்கள் மூலம் கவனம் பெற்றார். பின்னர் கதாநாயகனாக மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிகராகவும் மாறி, 'பருத்திவீரன்', 'மருது', 'கோலாமாவு கோகிலா', 'அரண்மனை', 'ஜெயிலர்' உள்ளிட்ட பல படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

குறிப்பாக கிராமத்து கதாபாத்திரங்களில் அவர் காட்டிய இயல்பான நடிப்பு இன்றும் ரசிகர்களால் பாராட்டப்படுகிறது. சினிமாவில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்த சரவணன், கடந்த சில ஆண்டுகளாக தனது குடும்ப பிரச்சனைகளால் அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.

Saravanan Surya sree Tamil Cinema Actor Saravanan Celebrity Controversy

காதல் திருமணம்

கடந்த 2003-ஆம் ஆண்டு சூர்யஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சரவணன். பல ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இந்த தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையில் 2019-ஆம் ஆண்டு ஸ்ரீதேவி என்பவரை சரவணன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பின்னர் முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவியுடன் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் காலப்போக்கில் முதல் மனைவி சூர்யஸ்ரீக்கும் சரவணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தற்போது ஒரே குடியிருப்பில் எதிரெதிர் வீடுகளில் இருவரும் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

ஜீவனாம்சம் வழங்க நீதிமன்ற உத்தரவு

சமீபத்தில் சரவணன் தன்னை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துவதாக சூர்யஸ்ரீ புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், அவருக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கடந்த ஜூன் 2-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த வழக்கு இன்னும் பேசப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், தற்போது புதிய புகார் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் சரவணன் மனைவி புகார்

மவுலிவாக்கம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புதிய புகாரில், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை நடிகர் சரவணன் ஆள் வைத்து அகற்றியதாக சூர்யஸ்ரீ குற்றம் சாட்டியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், "எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனக்கும், என்னுடைய உடைமைகளுக்கும் ஏதாவது நடந்தால் அதற்கு நடிகர் சரவணன்தான் முழுப் பொறுப்பு" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புகார் தற்போது சமூக வலைதளங்களிலும் சினிமா வட்டாரங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விவாகரத்து இல்லாமல் இரண்டாவது திருமணமா?

சூர்யஸ்ரீ முன்வைத்துள்ள மற்றொரு குற்றச்சாட்டு மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது. தன்னிடம் சட்டப்படி விவாகரத்து பெறாமலேயே சரவணன் மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாகவும், அது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்த விவகாரம் வெறும் குடும்ப பிரச்சனை என்பதை தாண்டி சட்ட ரீதியான விவகாரமாகவும் மாறியிருக்கிறது.

நிஜ வாழ்க்கையில் சர்ச்சை

ஒரு காலத்தில் காதல் கதைகளின் நாயகனாக ரசிகர்களின் மனதை கவர்ந்த சரவணன், பின்னர் குணச்சித்திர நடிகராக மறுபிறவி எடுத்தார். குறிப்பாக சமீபத்திய படங்களில் அவர் நடித்த பல கதாபாத்திரங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவரது சினிமா பயணத்தை விட குடும்ப வாழ்க்கையை சுற்றியுள்ள சர்ச்சைகள்தான் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன.

இந்த விவகாரத்தில் காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது, நடிகர் சரவணன் தரப்பில் என்ன விளக்கம் வருகிறது என்பது தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+