பிரபல நடிகர், நடிகையிடம் ஓடிவந்த ராஜேஸ்வரி பிரியா.. "அந்த" சீன் வேணாமே? சபாஷ் கோரிக்கை.. பலே சச்சின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனைத்து நடிகர்கள், நகைகளுக்கு அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா ஒரு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் விஜய்யின் லியோ பட பாடல் வெளியானபோது, ராஜேஸ்வரி பிரியா கடும் ஆவேசத்துடன் சேனல்களுக்கு அப்போது பேட்டி தந்து கொண்டிருந்தார்.

Rajeshwari Priya Actor Actresses Rajeswari priya Smoking scene

போதைப்பொருள்: குறிப்பாக, "நான் ரெடி' பாடலில், ரவுடியிசத்தை தூண்டுதல், தீய போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு இளைஞர்களை தூண்டி விடுதல் போன்ற குற்றத்திற்காக இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் சிகரெட்டை வாயில் வைத்து நடிக்க மாட்டேன் என்று விஜய் சொன்னார்... ஆனால், "சர்க்கார்" படத்திலும் முதல் காட்சியே சிகரெட்டை வாயில் வைத்திருந்தார்.. அதற்கும் நான் எதிர்ப்பு தந்தேன்..

இத்தனை இளைஞர்கள் விஜய்யை பின்தொடர்கிறார்கள்.. ஒரு தலைவராக பார்க்கும் அளவுக்கு, அவரே தன்னை கிரியேட் செய்தும் கொள்கிறார்.. அப்படி இருக்கும்போது, அதற்கான அடிப்படை பண்பு ஏதாவது இருக்கணும்தானே? சமூகத்தின் மீதும் அக்கறை இருக்கணும் இல்லையா?: என்று ஆதங்கத்துடன் கேள்விகளை எழுப்பியிருந்தார்.

பப்ளிசிட்டி: இளைஞர்களின் வளமான வாழ்வு, ஒருபோதும் பாழாகிவிடக்கூடாது என்பதற்காக ராஜேஸ்வரி பிரியா சொன்ன இந்த அத்தனை வார்த்தைகளையும் சோஷியல் மீடியாவில், சிலர் அப்போது கிண்டலடித்திருந்தனர்.. விஜய்யை எதிர்த்தால், தனக்கு பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதற்காக ராஜேஸ்வரி பிரியா இப்படியெல்லாம் பேட்டிகளை தந்து பரபரப்பை கிளப்புகிறார் என்றெல்லாம்கூட விமர்சித்திருந்தனர்.

ஆனால், தன்னுடைய கொள்கையில் இன்றுவரை உறுதியாக உள்ள ராஜேஸ்வரி பிரியா, இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு, அதே அக்கறையுடன் தற்போது மீண்டும் ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்.. காரணம் இன்று மே 31 உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஆகும். இதையடுத்து, அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா வெளியிட்டிருக்கும் மிக முக்கியமான அறிக்கை இதுதான்:

ஊக்குவிப்பு: "புகையிலை பயன்படுத்துபவர்கள் புகையிலையை உட்கொள்வதை ஊக்குவிப்பதையும், அரசாங்கங்கள், சமூகங்கள், குழுக்கள் மற்றும் தனிநபர்கள் பிரச்சனையை உணர்ந்து தகுந்த நடவடிக்கை எடுப்பதை ஊக்குவிப்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

லட்சக்கணக்கான உயிர்களை பறிக்கும் புகைப் பிடிக்கும் பழக்கத்தினை அடியோடு ஒழிக்க ஒவ்வொருவரும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.புகையிலை எதிர்ப்பு தினமான இன்று இந்தியாவில் தயாரிக்கபடும் திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சி இடம்பெறாமல் இருக்க இந்தியாவில் உள்ள அனைத்து திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களுக்கும் கோரிக்கை வைக்கிறேன்.

புகைப்பிடிக்கும் காட்சி: எப்படி சினிமாவில் சிகரெட் குடிப்பதனை ஊக்குவிக்க கூடாது என தேசிய புகையிலை கட்டுபாட்டுத் திட்டம் மூலம் 2003 ல் விளம்பர தடை மற்றும் ஒழுங்குமுறை சட்டம் உள்ளதோ அதே போன்று புகை பிடிக்கும் காட்சியே இருக்க கூடாது என்றும் சட்டம் வேண்டும்.

கிரிக்கெட் விளையாட்டுத் துறையின் நாயகனாக விளங்கும் திரு சச்சின் டென்டுல்கர் அவர்கள் புகைக்கு எதிரான தனது நிலையை இன்று வெளியிட்டதோடு் மட்டுமில்லாமல் அதனை கொள்கையாக கொண்டு புகையை ஊக்குவிக்கும் வகையில் எந்த இடத்திலும் நடந்த கொள்ளாதது போற்றுதலுக்குறியது.

சந்ததியினர்: உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 53% மேல் திரைப்படங்களே புகைபழக்கம் அதிகரிக்க காரணம் என்று வெளியிட்டுள்ளது. ஆகையினால் எதிர்கால சந்ததியினரின் உயிரை காக்க அனைத்து நடிகர்களும் நடிகைகளும் திரைப்படத் துறையினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+