ஆஹா.. என்ன நடக்கிறது.. சசிகலா வீட்டில் விவேக் திடீர் விசிட்.. டெல்லிக்கு குறி.. "க்ரீன் சிக்னல்?"

சசிகலாவுக்கு டெல்லியில் இருந்து சிக்னல் கிடைத்துவிட்டதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லியில் இருந்து சசிகலாவுக்கு க்ரீன் சிக்னல் கிடைத்துவிட்டதாம்.. இதன்மூலம் இனி தன்னுடைய அரசியல் விளையாட்டை அடித்து ஆட ரெடியாகி உள்ளார் சசிகலா.. அதற்காக ஒரு விஐபியை டெல்லிக்கு அனுப்பவும் முடிவு செய்துள்ளார்.. ஆனால், இந்த திடீர் திருப்பத்திற்கெல்லாம், சசிகலாவுக்கு உதவியதே ஒரு முக்கிய புள்ளிதான் என்று தகவல்கள் கசிந்து வருகின்றன.

உண்மையை சொல்ல போனால், மறைந்த ஜெயலலிதாவைவிட அதிரடியை கிளப்ப கூடியவர் சசிகலாதான்.. 30 வருடமாக ஜெ.விடம் லாபி செய்து கொண்டிருந்த சசிகலாவின் ஆளுமை பற்றி பொதுமக்களுக்கு தெரியாமல் போனால், அதிமுக நிர்வாகிகளுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

வேகம், துடிப்பு, சமயோஜிதம் இத்தனையும் கலந்த சசிகலாவின் அரசியல் இப்போது தலைகீழாக மாறிவிட்டது.. ஜெயிலில் இருந்து வெளிவரும்போதே பக்குவம் நிறைந்தவராகவும், பொறுமை, அரவணைப்பு மிக்க நபராகவும் தன்னை வெளிப்படுத்தி கொண்டு வருகிறார்..

பதவிகள்

பதவிகள்

ஆனால் அளவுக்கு மீறி பொறுமையை கடைப்பிடித்து விட்டாரோ என்னவோ, திடீரென ஒருங்கிணைப்பாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அவசர அவசரமாக அது நடத்தி முடிக்கப்பட்டு, முடிவுகளும் அறிவித்துவிட்டனர்.. அதே இரட்டை தலைமை தங்கள் பதவியை தக்க வைத்து கொண்டுள்ளனர்.. இதை சசிகலாவே எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஆகும்.. பாஜக மேலிடத்தின் ஆதரவு அதிமுகவுக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் கிடைத்து கொண்டிருப்பதும், தன்மீதான நம்பிக்கை பாஜக மேலிடத்துக்கு குறைவாக இருப்பதும்தான் இதற்கெல்லாம் காரணம் என்பதை சசிகலா லேட்டாகவே உணர்ந்துள்ளதாகவே தெரிகிறது.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

இப்படிப்பட்ட சமயத்தில்தான் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து பேசினார் சசிகலா.. இந்த சந்திப்புக்கான காரணம் எதுவாக இருந்தாலும், அரசியல் காரணம் இல்லாமல் இருக்காது என்பது வலுவாக நம்பப்பட்டது.. இந்த சந்திப்பு பற்றி ஒருசில உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் கசிந்தன.. அதாவது, ரஜினியை சந்திக்க வேண்டும் என்று, லதா ரஜினிகாந்துக்கு போன் போட்டு அபாய்ன்ட்மென்ட் வாங்கி சென்றுள்ளார் சசிகலா.. அன்றைய தினம், மாடியில் இருந்து இறங்கி வந்த ரஜினி, சசிகலாவிடம் சில நிமிடங்கள் மட்டும் பேசியிருக்கிறார்... ஆனால், அந்த சில நிமிட சந்திப்பிலேயே கண்கலங்கியபடி பேசினாராம் சசிகலா.

அதிமுக

அதிமுக

"அதிமுகவுக்கு இப்போதைக்கு ஆதரவு இருந்தாலும், தேர்தலில் எப்படியும் ஜெயிக்க முடியாது, அதனால், இந்த நிலைமையை பாஜக தலைமையிடம் எடுத்து சொல்லுங்கள், எனக்கு ஆதரவு தரச்சொல்லுங்கள், வரும் எம்பி தேர்தலில் அதிக எம்பிக்களை வெற்றி பெற வைத்து காட்டுகிறேன், எனக்காக மேலே பேச வேண்டும்" என்று சசிகலா கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு ரஜினி மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டன..

 லதா ரஜினிகாந்த்

லதா ரஜினிகாந்த்

அதுமட்டுமல்ல, ரஜினி முடிவால் சசிகலா அப்செட்டாகவும், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று சசிகலாவை இருக்கச் சொல்லிவிட்டு, ரஜினியிடம் பேசிவிட்டு பிறகு மீண்டும் கீழே வந்த லதா, "கவலைப்படாதீங்க.. தைரியமாக அரசியல் வேலையை பாருங்க. அவரை சமாதானப்படுத்தி அமித்ஷாவிடமும், மோடியிடமும் பேசச்சொல்கிறேன்" என்று உறுதி தந்தாராம் லதா ரஜினிகாந்த்.. இந்த செய்திகள் எல்லாம் கடந்த ஒரு வார காலமாகவே இணையத்தில் கசிந்து கொண்டிருந்தன.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த யூகமான செய்திகள்தான் ஓரளவு உண்மை என்றே தெரியவந்துள்ளது.. இது தொடர்பான மேலும் சில செய்திகள் வட்டமடிக்க ஆரம்பித்துள்ளன.. சசிகலாவுக்கு உதவி செய்ய லதா ரஜினிகாந்த் முன்முயற்சி எடுத்துள்ளாராம்.. அதன்படி லதா ரஜினியிடம் பேச, ரஜினி மேலிடத்திலும் பேசியுள்ளதாக தெரிகிறது.,. அதற்கு ஆரம்பத்தில் டெல்லியில் இருந்து நெகட்டிவ் தகவல்கள் வந்தாலும், பாஜக உதவியுடன் ரஜினி அரசியலுக்கு வருவதாக இருந்தால் யோசிக்கலாம் என லதா ரஜினிகாந்துக்கு பாசிட்டிவ் சிக்னல் டெல்லியிலிருந்து வந்துள்ளதாம்.. இதை உடனடியாக சசிகலாவிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் லதா.

விஐபி

விஐபி

இந்த நிலையில், டெல்லியில் சில முக்கியமானவர்களை சந்திக்க வேண்டியிருப்பதால் நம்பிக்கைக்குரிய ஒருவரை டெல்லிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார் சசிகலா.. அவர் வேறு யாருமில்லை, இளவரசியின் மகன் விவேக்தான்.. இவர்தான் இப்போது ஜெயாடிவியை கவனித்து கொண்டிருக்கிறார்.. நேற்று திடீரென விவேக்கை அழைத்து, மிடாஸ், நமது எம்ஜிஆர் பத்திரிகை, ஜெயா டிவி நிர்வாகம் குறித்தெல்லாம் பல விபரங்களை பேசிவிட்டு, பிறகு விஷயத்தக்கு வந்துள்ளார் சசிகலா.

 தேதி

தேதி

"நீ டெல்லி போக வேண்டியதிருக்கும்.. தேதியும் நேரமும் முடிவானதும் சொல்கிறேன்.. இன்னும் 2 வாரத்துக்கு எந்த ப்ரோகிராமையும் போட்டு வைத்துக் கொள்ளாதே... குறிப்பாக, வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது" என்று அறிவுறுத்தியிருக்கிறார் சசிகலா... ஆக, ரஜினியை வைத்து மறுபடியும் ஒரு அரசியல் மாயைகள் தமிழகத்தை சூழ உள்ளன.. இந்த ட்விஸ்ட் எப்படியும் அதிமுகவுக்கு மட்டுமல்ல, திமுகவுக்கும் ஷாக் ஆகத்தான் இருக்க போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+