அது சரி.. ஸ்டாலினை அரசியல் ரீதியாக ரஜினி எப்படி எதிர்கொள்வார்? செஸ் ஒலிம்பியாட்ல பார்த்தீங்கல்ல?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நேரடி அரசியலுக்கு வந்தாலும் சரி மறைமுக அரசியலுக்கு வந்தாலும் சரி திமுகவை எதிர்ப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
ரஜினிகாந்த் அரசியலுக்கு முழுக்கு போடுவதாக அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. எனினும் அவர் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு மட்டும் அவரது ரசிகர்கள் மத்தியில் குறையவே இல்லை. இந்த நிலையில் தற்போது 2 ஆண்டுகள் கழித்தும் அரசியல் என்ற வார்த்தை ரஜினியை சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் இன்று அவர் ஆளுநர் ரவியுடன் நடத்திய சந்திப்பு ஆகும்.
ஆளுநருடன் ரவியுடன் 30 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அப்போது அரசியல் பேசியதை ரஜினியே தனது பேட்டியில் ஒப்புக் கொண்டார். ஆயினும் நான் மீண்டும் அரசியலுக்கு வர போவதில்லை என்ற ஒரு விஷயத்தையும் தெளிவுப்படுத்தியுள்ளார். இது ஒரு புறம் இருக்க இரட்டை இலையை முடக்க பாஜக சதி செய்து வருவதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

அதிமுக
அதாவது அதிமுகவில் இப்போது இருப்பதை போல் 2, 3 அல்லாமல் நிறைய குழுக்கள் பிரிய வாய்ப்பிருப்பதாகவும் ஏற்கெனவே தங்களுக்கு எடப்பாடி பழனிசாமி பதவி கொடுக்கவில்லை என்ற அதிருப்தியில் பலர் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே இரட்டை இலை சின்னத்தை முடக்கி ரஜினிகாந்தை முன்னிறுத்தி நாடாளுமன்றத் தேர்தலை பாஜக சந்திக்க திட்டமிடுவதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இரு விஷயங்கள்
இதில் இரு விஷயங்களை பார்க்க வேண்டியுள்ளது. அதாவது முதலில் ரஜினி அரசியலுக்கு வருவாரா? அப்படியே வந்தாலும் அவர் திமுகவை எதிர்த்து அரசியல் செய்வாரா என்ற இரு கேள்விகள் எழுந்துள்ளது. இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் சிலர் கூறுகையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை, இதை அவரே தனது பேட்டியில் சொல்லிவிட்டார்.

விடாத பாஜக
ஒரு வேளை பாஜக அவரை விடாப்பிடியாக இழுத்து பிடிக்க நினைத்தால் அவர் பாலிவுட் பிரபலங்களை போல் பின்புலத்திலிருந்து ஆதரவு தெரிவிப்பார். அதாவது நேரடியாக அரசியலுக்கு வராமல் ஒரு கட்சிக்கு வாய்ஸ் தர வாய்ப்பிருக்கிறது. இதில் இன்னொன்று ரஜினி தனது ரசிகர்களை "இந்த கட்சிக்குத்தான் ஓட்டு போட வேண்டும்" என கட்டாயப்படுத்துவாரா என்பது சந்தேகம்தான் (அவர் கட்டாயப்படுத்தாவிட்டாலும் அவர் கண் அசைத்தால் செயல்படுத்தக் கூடிய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்).

ரஜினிகாந்தும் ஸ்டாலினும்
ஜெயலலிதாவுக்கு எதிராக 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ரஜினி வாய்ஸ் கொடுத்தார். "ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது" என அதிமுகவுக்கு எதிராக ரஜினி பேசியிருந்தார். இதையடுத்து திமுக - தமாகா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதோடு சரி அதன் அதிமுகவை அவர் விமர்சிக்கவே இல்லை. அது போல் திமுகவுக்கு எதிராக அவர் ஒரு முறை கூட பேசியதில்லை. எனவே நேரடி அரசியலானாலும் சரி மறைமுக அரசியல் ஆனாலும் சரி திமுகவை ரஜினி எதிர்ப்பாரா என்ற கேள்வி உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மீது ரஜினிக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம். இதனால்தான் தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்தவுடன் முதலில் கருணாநிதியை ரஜினி சந்தித்து வாழ்த்து பெற்றார். அது போல் கருணாநிதி மறைந்தவுடன் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும் முன்னர் அவர் மீதான பாசத்தின் காரணமாக தான் ஒரு பிரபலம் என்பதையும் மறந்து கூட்டத்தோடு கூட்டமாக போய் அஞ்சலி செலுத்த சென்றார். ரஜினியை இப்படி கூட்டத்தோடு கூட்டமாக அஞ்சலி செலுத்த வைத்துவிட்டார்கள் என்ற விமர்சனமும் ரஜினி ரசிகர்களிடையே அப்போது எழுந்தது. அது போல் ரஜினிகாந்தும் ஸ்டாலினும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் தங்கள் பிறந்த நாளுக்கு மறக்காமல் பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வார்கள். முதல்வர் ஸ்டாலின் ரஜினியை இனிய நண்பர் என்றுதான் அழைப்பார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏற்கெனவே எந்திரன், பேட்ட, அண்ணாத்த ஆகிய படங்களில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். அந்த நிறுவனத்தின் தயாரிப்பான ஜெயிலர் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு வழங்க ரஜினி விரும்புகிறாராம். இப்படி கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஆகிய 3 தலைமுறையினருடன்நெருக்கம் காட்டிய ரஜினி திமுகவை அரசியல் ரீதியாக எப்படி எதிர்கொள்வார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

பால் விலை
இவ்வளவு ஏன் பால், தயிர் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்த கேட்டதற்கு நோ கமெண்ட்ஸ் என ரஜினி சொல்லியதிலிருந்தே அவர் விமர்சனங்களை முன் வைக்க விரும்பிவில்லை என்பது தெரிகிறது. அது போல் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியிலும் ரஜினியும் உதயநிதியும் ஏதோ ஒரு விஷயத்தை சீரியஸாக டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தார்கள். எனவே திமுக விவகாரத்தில் ரஜினியின் நிலைப்பாடு சற்று குழப்பத்தையே தருகிறது என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் வந்தால் நல்லதுதான்
இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நல்லதுதான். ஆனால் ஏதோ ஒரு கட்சிக்கு வாய்ஸ் கொடுப்பதாக இல்லாமல் தனிக்கட்சியை தொடங்கினால் எங்களுக்கு அதைவிட மகிழ்ச்சி வேறு இருக்காது. ஏற்கெனவே ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து தெளிவாக கூறிவிட்டார், இன்று மீண்டும் அதுகுறித்து அழுத்தம் திருத்தமாகவும் கூறிவிட்டார்.

பேசு பொருளான போயஸ் தோட்டம்
அப்படியிருக்கும் போது ஆளுநர் ரவியுடன் சந்தித்து அரசியல் பேசினேன் என கூறுவதை வைத்து அவர் அரசியலுக்கு வருவார் என கூறுவது எல்லாம் அபத்தம். ஆன்மீகம் குறித்து பேசியுள்ளதாக கூறியுள்ளாரே, ஆளுநர் ஆர் என் ரவியுடன் அரசியல் குறித்து பேசாமல் அவர் வேறு எது குறித்து பேச வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். பொதுவாகவே ரஜினிகாந்த் அரசியல்வாதிகளை சந்தித்து பேசினால் அந்த டாப்பிக்கை லைட்டாக டச் செய்வது வழக்கமான ஒன்றுதான் என்கிறார்கள். ரஜினி போயஸ் தோட்டத்தை விட்டு வெளியே வந்து மைக்கை பிடித்தாலே அது பேசும் பொருளாகிவிடுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம் -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே! -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்! -
அண்ணாமலை மிஸ்ஸிங்.. அமித் ஷா பிளான்.. அடுத்து என்ன? அண்ணாமலை எடுக்கும் முடிவு இதுதான்? -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications