சிஏஏ எதிர்ப்பு.. அவர் உண்மையில் அப்படி பேசினாரா? மாஸ்டர் இசை விழாவில் விஜய் பேசியது நிஜமா?

நேற்று மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் உண்மையில் சிஏஏவிற்கு எதிராக பேசினாரா என்று சர்ச்சை எழுந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் உண்மையில் சிஏஏவிற்கு எதிராக பேசினாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

Recommended Video

    Britto Mama Speech |Lokesh Kanagaraj | Thalapathy Vijay Speech

    மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் 8 பாடல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

    எப்போதும் நடிகர் விஜய் இசை வெளியீட்டு விழாக்களில் குட்டி கதை சொல்வது வழக்கம். ஆனால் நேற்று குட்டி கதை சொல்லாத விஜய் மாறாக, முக்கியமான சில விஷயங்களை பேசினார். அதுதான் இணையம் முழுக்க டிரெண்டாகி உள்ளது.

    என்ன பேசினார்

    என்ன பேசினார்

    தன்னுடைய வீட்டில் நடந்த ரெய்டு குறித்து பேசிய நடிகர் விஜய், நான் என் அப்பா போல வாழ ஆசைப்படுகிறேன். அவருக்கு அப்போது ரெய்டு தொல்லை எல்லாம் இல்லை. அவரைப் போல நிம்மதியான ரெய்டு தொல்லை இல்லாத வாழ்க்கையையே வாழ ஆசைப்படுகிறேன். அதுதான் எனக்கு வேண்டும் என்று, தன்னுடைய வீட்டில் இரண்டு நாட்கள் நடந்த ரெய்டு குறித்து விஜய் பேசினார்.

    சிஏஏ

    சிஏஏ

    அதேசமயம் சிஏஏ குறித்து அவர் பேசியதில், வாழ்க்கை நதி மாதிரிநம்மள வணங்குவாங்க, வரவேற்பாங்க , கல்லு எரிவாங்க. ஆனா கடமையை செஞ்சுட்டு போயிட்டே இருக்கனும். நம்மை எதிர்ப்பவர்களை சிரிப்போடு எதிர்கொள்ள வேண்டும். அவர்களை நம் சிரிப்பால் சாகடிக்க வேண்டும். மக்களுக்கு எது தேவையோ அதை தான் சட்டமாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குள் மக்களை அடைக்கக் கூடாது, என்றார்.

    செம பாஸ்

    செம பாஸ்

    நடிகர் விஜயின் பேச்சு இணையம் முழுக்க வைரலானது. சிஏஏவிற்கு எதிராக விஜய் செம தில்லாக பேசி இருக்கிறார். இப்படித்தான் பேச வேண்டும். அவர் தன்னுடைய கருத்தை தெளிவாக சொல்லி இருக்கிறார். அவரை பாராட்ட வேண்டும். தன்னுடைய வீட்டில் நடந்த ரெய்டு குறித்து அவர் எந்த விதமான கவலையும் கொள்ளவில்லை, என்று அவரின் ரசிகர்கள் உட்பட பலர் பேசி உள்ளனர்.

    உண்மை

    உண்மை

    அதே சமயம் விஜய் இப்படி சிஏஏவிற்கு எதிராக எதுவும் பேசவில்லை. அது முழுக்க முழுக்க பொய். விஜய் வெறுமனே ரெய்டு குறித்து மட்டும்தான் பேசினார் . அவர் சிஏஏவிற்கு எதிராக பேசியதாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. அதை நம்ப வேண்டாம் என்று சில விஜய் ரசிகர்கள் தெரிவிக்க தொடங்கி உள்ளனர் . நேற்று இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான போதும் கூட விஜய் சிஏஏவிற்கு எதிராக கருத்து சொல்லி கேட்கவில்லை என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இன்னொரு பக்கம்

    இன்னொரு பக்கம்

    அதே சமயம் வேறு சில விஜய் ரசிகர்கள், விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள், விஜய் இப்படி பேசியது உண்மைதான். நாங்கள் அந்த விழாவிற்கு வாலண்டியராக சென்று இருந்தோம். விஜய் சிஏஏவிற்கு எதிராக பேசியதை நாங்கள் நேரில் பார்த்தோம் என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால் விஜய் உண்மையில் சிஏஏவிற்கு எதிராக பேசினாரா, அல்லது அது வெறும் வதந்தியா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. விஜய் இதற்கு விரைவில் விளக்கம் கொடுக்க வாய்ப்புள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+