சொத்து பத்திரம்.. அதைவிடுங்க, கொடநாடு பங்களாவில் "வெள்ளை கொடி"யோடு நுழைஞ்ச விஐபி யாருங்க? பலே சசிகலா
சென்னை: விரைவில் எம்பி தேர்தல் வரவுள்ள நிலையில், அதிமுக களம் சூடுபிடிக்கிறது. அத்துடன், சசிகலாவின் நடவடிக்கைகளும் வேகம் எடுத்துள்ளன.. இதுகுறித்த ஸ்பெஷல் செய்தி ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது.
ஒருங்கிணைந்த அதிமுக என்பதில் சசிகலா அன்று முதல் இன்றுவரை உறுதியாக இருந்து வருகிறார். இதற்கு காரணம், திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே லட்சியம்தான். அதனால்தான், இப்போதுவரை, அதிமுக தலைவர்களை பற்றி ஒருவார்த்தைகூட கடுமையாக விமர்சிக்காமல் உள்ளார்.. யாரையும் கடிந்துகூட பேசாமல் இருக்கிறார்.

பழைய சசிகலா: இதுவே பழைய சசிகலாவென்றால், அவரது அணுகுமுறையே அதிரடியாக இருந்திருக்கும். 30 வருடம் அதிமுகவில் லாபி செய்தவர், இந்த 3 வருடங்களாகவே மென்மையான அரசியலை கையில் எடுத்து வருவது பலரையும் கவனிக்க வைத்தது.. தன்னை சந்திக்க வேண்டும் என்று பலவழிகளில் முயற்சித்து கொண்டிருக்கும் ஓபிஎஸ்ஸை இதுவரை சந்திக்காமல் உள்ளதே இதற்கு சாட்சி.
அதனால்தான், எடப்பாடி பழனிசாமி நடத்திய மதுரை மாநாட்டுக்கும் போகவில்லை, ஓபிஎஸ் நடத்திய திருச்சி மாநாட்டுக்கும் போகவில்லை. இதற்கு காரணம், அனைவருமே ஒன்று சேர்ந்து அதிமுகவை வழிநடத்த வேண்டும் என்பதுதான்.. அதுமட்டுமல்லாமல், சாதி முத்திரை தன்மீது எந்தரூபத்திலும் விழுந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்து வருகிறார்.
டிடிவி தினகரன்: தினகரனுடன் இந்த நிமிடம்வரை இணையாமல் இருப்பதற்கும் இதுவே காரணமாக உள்ளதாக தெரிகிறது. அத்துடன், எடப்பாடி பழனிசாமியுடன் திவாகரனும் நெருக்கமாக இருந்து வரும்நிலையில், ஒருங்கிணைந்த அதிமுக என்ற விஷயத்தில் கறாராக இருந்து வருகிறார் சசிகலா. அன்று மூத்த தலைவர் வைத்திலிங்கம் வீட்டு விசேஷத்தில், சசிகலா கலந்து கொள்ளவில்லை என்றபோதே, இது எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவாகவும் பார்க்கப்பட்டது.
இதற்கு பிறகு பாஜகவுடனான கூட்டணியை முறித்ததாக அதிமுக அறிவித்ததுமே, அதிமுக மூத்த தலைவர் முனுசாமிக்கு போனை போட்டு பேசினாராம் சசிகலா..
முனுசாமி: "என்,.டி.ஏ. கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறிய முடிவு பாராட்டுதலுக்குரியது. பழனிச்சாமியிடம் ஃபோனை கொடுக்க முடியுமா?" என்று சசிகலா கேட்டதுமே, எடப்பாடியிடம் ஃபோனை கொடுத்துள்ளார் முனுசாமி.
ஃபோனை எடப்பாடி வாங்கியதும், அவரிடமும், தற்போது எடுக்கப்பட்ட முடிவுக்கு வாழ்த்துக்களை சொல்லியிருக்கிறார் சசிகலா. வாழ்த்து சொல்லி விட்டு, உடனே ஃபோனை துண்டித்துக்கொண்டாராம். ஆனாலும், சசிகலா ஃபோன் செய்ததை எடப்பாடி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம்.. எனினும், சசிகலாவுடன் போனில் பேசியதாக சொல்லப்பட்டது, எடப்பாடியின் பிடிவாதம் ஓரளவு தளர்ந்ததாகவே பார்க்கப்பட்டது.
அதிருப்தி: இப்படியெல்லாம் செய்திகள் கசிந்து வந்தநிலையில், நிஜமாகவே இவர்கள் இருவருக்குள்ளும் அதிருப்தி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.. அதுகுறித்துதான் தற்போது பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
அண்மைக்காலமாகவே எடப்பாடியிடம் நட்பாக இருந்து வருகிறாராம் சசிகலா. எடப்பாடியும் சசியை எதிர்த்துகொள்ள வேண்டாம் என்ற மனநிலையில் சில டீலிங்குகள் நடத்தியிருக்கிறார். கொங்கு பக்கம் உள்ள மாஜி அமைச்சர் ஏற்பாட்டிலேயே இந்த நட்பு உருவானதாக சொல்கிறார்கள்..
மாஜி தூது: அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் மாஜி அமைச்சரின் தூதுவர் ஒருவரை கொடநாட்டில் சசிகலா சந்திக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.. அரசியல் ரீதியாக ஃபைனல் டீலிங் இந்த சந்திப்பில் பேசப்படலாம் என்கிறார்கள்.. இந்த சந்திப்புக்காகவே சசிகலா கொடநாட்டிற்கு விசிட் அடித்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
ஆனால், கொடநாட்டுக்கு சசிகலா சென்றதில் இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது, 480 கோடி ரூபாயை கட்டிவிட்டதால், முடக்கப்பட்ட சசிகலாவின் சொத்துக்கள் சமீபத்தில் விடுவிக்கப்பட்டன. அதில் கொடநாடு சொத்தும் ஒன்று.
எது உண்மை: அதனால்தான் கொடநாடு சென்று முக்கியமானவைகள் எல்லாம் பத்திரமாக இருக்கிறதா ? எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த கொடநாடு கொள்ளை சம்பவத்தில் என்னென்னவெல்லாம் திருடு போனது? என்பதையெல்லாம் ஆராய்வதற்காகவே கொடநாடு சென்றதாக சிலர் சொல்கிறார்கள். இந்த 2 காரணங்களில் எது உண்மை என்று தெரியவில்லை.. ஆனால், சசிகலாவின் அரசியல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது கவனிக்கத்தக்கது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications