5 அதிமுக தலைவர்கள் என் கையில்.. கட்சியை உடைக்க நான் ரெடி.. அமித் ஷாவிற்கு சசிகலா கடிதம்? பின்னணி?
சென்னை; அதிமுக பாஜக இடையிலான மோதல் நிலவி வரும் நிலையில் சசிகலா தரப்பில் இருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு முக்கிய கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த கடிதத்தின் உண்மைத்தன்மை குறித்த கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக பாஜக மோதல் உச்சம் பெற்றுள்ளது. இந்த மோதலில் தற்போது சசிகலா உள்ளே வந்துள்ளார். அதிமுக - பாஜக மோதலை கட்சியில் ஒரு தரப்பினர் வெகுவாக வரவேற்று உள்ளனர். உதாரணமாக கட்சியில் இருக்கும் ஜெயக்குமார், சிவி சண்முகம் போன்றவர்கள் பாஜகவுடன் அதிமுக உறவை முறித்ததை வெகுவாக வரவேற்று உள்ளனர்.

இது மிகவும் சிறப்பாக முடிவு என்று அவர்கள் கருதுகிறார்களாம். முக்கியமாக இவர்கள் பாஜகவுடன் கூட்டணி இருப்பதை தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வந்தனர். பாஜகவுடன் கூட்டணி இருப்பதால்தான் நாம் தோல்வி அடைந்து வருகிறோம். இனி தோல்வி அடைய மாட்டோம் என்று கருதுகிறார்களாம்.
அதிமுக - பாஜக மோதலை பெரும்பாலான அதிமுக தொண்டர்கள் வரவேற்று உள்ளனர். இவர்களின் கூட்டணி முறிவை பெரும்பாலான அதிமுக தொண்டர்கள் பாராட்டி வரவேற்று உள்ளனர். பெரும்பாலான தொண்டர்கள்.. பாஜகவுடன் கூட்டணி இருந்தது தவறான முடிவு. அதனால் நாம் தோல்வி அடைந்தோம். இனி பிரச்சனை இல்லை என்று நினைக்கிறார்கள்.
எதிர்ப்பு: இன்னொரு பக்கம் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் என்றும் சில அதிமுக தலைவர்கள் கருதுகிறார்களாம். அதிமுகவில் ஒருவர் தமிழ்நாட்டில் ஏக்நாத் ஷிண்டே ஆக வாய்ப்புள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஒருவர் பெயரை குறிப்பிடுகின்றனர். அதிமுக எப்போதும் போல பாஜகவுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அப்போதுதான் அரசியல் செய்ய முடியும். பிஸ்னஸ் செய்ய முடியும். திமுகவை எதிர்க்க முடியும். பணிகளை செய்ய முடியும். அதிகாரத்தில் இருக்க முடியும் என்று நினைக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
சசிகலா: பாஜகவுடன் கூட்டணி வைப்போம். தேர்தலுக்கு முன் எடப்பாடி கூட்டணி வைக்கவில்லை என்றால் அதிமுகவை உடைக்கும் திட்டத்தில் கூட அவர் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டேவாக மாற அந்த தலைவர் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட விஷயங்களுக்கு இடையில்தான் சசிகலா தரப்பில் இருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு முக்கிய கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த கடிதத்தின் உண்மைத்தன்மை குறித்த கேள்வி எழுந்துள்ளன.
அந்த கடிதத்தில் என்ன இருந்தது?: அந்த கடிதத்தில்.. என் கையில் அதிமுக தலைவர்கள் 5 பேர் உள்ளனர். பாஜகவுடன் கூட்டணி வைக்க நான் தயார். பாஜக - அதிமுகவை மீண்டும் இணைக்க நான் தயார். எனக்கு டெல்லி சப்போர்ட் வேண்டும். அவர்கள்தான் எனக்கு உதவ வேண்டாம்.
பாஜகவிற்கு எதிராக செயல்பட அதிமுகவில் சிலர் விரும்பவில்லை. அவர்கள் என்னுடன் நட்பில் இருக்கிறார்கள். அதனால் எனக்கு ஆதரவு கொடுங்கள் என்று அமித் ஷாவிற்கு சசிகலா கடிதம் எழுதி இருக்கிறாராம். அதே சமயம் அந்த கடிதத்தின் பிரதியை அவர் மோடிக்கும் அனுப்பி உள்ளாராம். ஆனால் இது உண்மையா .. இதற்கு டெல்லி எதுவும் பதில் கொடுத்ததா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications