ஆமா.. அதிமுக எம்எல்ஏக்கள்தான்.. இத்தனை கேமரா முன்னாடி எப்படி சொல்ல முடியும்.. இபிஎஸ்ஸுக்கு சசி ஷாக்
சென்னை: அதிமுக எம்எல்ஏக்களுடன் பேசி வருகிறீர்களா என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு சசிகலா சொன்ன பதில் என்ன தெரியுமா?
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையான சசிகலா அதிமுகவை கைப்பற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவ்வப்போது அதிமுக தொண்டர்களை சசிகலா சந்தித்து பேசி வருகிறார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை நேற்றைய தினம் சசிகலா சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொண்டர்கள் இருக்கிறார்கள்.

யாரையும் பிரித்து பார்க்கவில்லை
நான் யாரையும் பிரித்து பார்க்கவில்லை. தமிழக காவல் துறையை பொருத்தமட்டில் நல்ல அதிகாரிகளும் இருக்கிறார்கள். அவர்களை சரியாக கவனித்து நடத்த வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெறும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார்கள்.

கட்சியை சேர்ந்தவர்கள்
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆட்சி பொறுப்பில் இருப்பார்கள். தேர்தல் என்பது வேறு. அரசாங்கம் என்பது வேறு. நாம் அனைவரும் வரி செலுத்துகிறோம். அதனால் நாம் அனைத்தையும் கேட்டு பெறுவதற்கு 100 சதவீத உரிமை இருக்கிறது. இதுதான் நம் தலைவர்கள் பின்பற்றிய வழியும் கூட.

மத்திய அரசு ஓபிஎஸ்
மத்திய அரசிடம் இருந்து எதையும் கேட்டுப் பெறவே மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது. தேர்தல் நேரத்தில் மத்திய அரசை விமர்சிப்பது வேறு. தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மக்கள் வாக்களித்துள்ளனர் என்றார் சசிகலா. அவரிடம் ஓபிஎஸ்ஸை நீங்கள் எப்போது சந்திப்பீர்கள் என நிருபர்கள் சசிகலாவிடம் கேள்வி எழுப்பினர்.

ஓபிஎஸ்தான் சொல்ல வேண்டும்
அதற்கு அவர் கூறுகையில் இதை நீங்கள் ஓபிஎஸ்ஸிடம்தான் கேட்க வேண்டும் என்றார். அதிமுக எம்எல்ஏக்களுடன் நீங்கள் பேசி கொண்டு இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு சசிகலா பதில் அளிக்கையில் இத்தனை கேமரா முன்னால் அதை எப்படி உங்களிடம் சொல்ல முடியும்? என சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள்
இதன் மூலம் சசிகலா மாஜி அமைச்சர்கள் மட்டுமின்றி தற்போதைய எம்எல்ஏக்களிடமும் பேசி வருவது தெரிகிறது. அதை அவர் மறுக்கவே இல்லை. சசிகலா யாருடன் பேசினாலும் யாரை சந்தித்தாலும் கவலை இல்லை என கூறும் எடப்பாடி தரப்பு சசிகலாவின் இந்த பேச்சை கேட்டுவிட்டு ஆடி போய்விட்டதாக தகவல்கள் வெளியாகின்றன.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications