சேரன் சாரால் அன்று பிரச்சனை.. மாமாவிடம் பேசுங்க.. நடிகைக்கு உறவினர் மூலம் சீமான் 'தூது'? பரபர ஆடியோ!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தம் மீது பலாத்கார புகார் தெரிவித்த நடிகையை பாலியல் தொழிலாளி என கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் தம் மீது புகார் தந்த நடிகையை சமாதானப்படுத்த கடந்த வாரம் தமது உறவினர் மூலம் சீமான் தூது அனுப்பியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படவில்லை.
சீமானின் உறவினர் என கூறிக் கொள்ளும் நபர் நடிகையுடன் பேசும் ஆடியோவில் இடம் பெற்றிருப்பதாவது: நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டு சமாதானமாக போகலாம்; மன்னித்துவிடலாம் என நினைத்தால் வேறுவழி குறித்து முயற்சி பண்ணலாம் அக்கா.

நீங்க வழக்கை வாபஸ் வாங்குங்க என சொல்லவே இல்லை. நீங்க சமாதானமாகப் போவது என சொல்லுங்க.. அடுத்த வழியைப் பேசுவோம் அக்கா..
இது உங்களுக்கும் (சீமானுக்கும்) அவருக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்சனை. இது தனிப்பட்ட பிரச்சனை என நீதிமன்றத்தில் சொல்லிவிட்டால் முடிந்துவிடும். அக்கா, சமாதானத்துக்கு (சீமானுடன்) என்ன கண்டிஷன் என சொல்லுங்க
பைனலா கேட்கிறேன் அக்கா.. மாமா (சீமான்) வாட்ஸ் அப் காலில் பேசினால் பேச தயாராக இருக்கீங்களா?
ஆக்சுவலா இன்று இரவு உங்களை பார்க்க போ என சொல்லி இருந்தார் மாமா. அப்படி என்னை தொடர்பு கொள்ள முடியவில்லை எனில் பாக்கியம் என ஒருத்தர் இருக்கிறார்.. நீங்கள் சொல்ல பாக்யராஜ் இல்லை.. பாக்யம் என ஒருவர் இருக்கிறார்.. அவர் எண்ணில் பேச சொல்லி இருக்கிறார்.
அக்கா.. அக்கா.. நான் நைட் தெளிவாக பேசுறேன்.. அவர் முன்னாடி இருந்து பேசறேன்.. அவர் பேச சொன்னால் நான் கண்டிப்பாக அடிப்பேன். அப்ப நீங்க ஒரு வார்த்தை மட்டும் பேசுங்க.. அப்ப, இந்த வழக்கை எல்லாம் முடிச்சுட்டு போகனும்னு நினைக்கிறேன்.. இந்த அவமானம் எனக்கு தேவை இல்லை.. ஒரு காலத்தில நாம நேசிச்சோம் என என்ன தோணுதோ அதை அவர்கிட்ட (சீமானிடம்) சொல்லுங்க..
நாங்க அவர்கிட்ட போய்ட்டு ஸ்பீக்கர் ஆன் பண்ணி பேசறேன். ஆரம்ப காலத்தில் பாக்யராஜால் பிரச்சனை. அதுக்கு பிறகு சேரன் சாரால் பிரச்சனை. அதுக்கு பிறகு மதுரை செல்வத்தால் பிரச்சனை. அங்க ஒன்னு பேச... இங்க ஒன்னு பதில் சொல்ல.. ட்விஸ்ட் பண்ணிவிட்டுட்டாங்க.. இதுதான் நடந்துச்சு.
இது ஒரு கறுப்புப் புள்ளி.. இந்த விஷயத்தை அவர் அழிச்சு ஆகனும்.. அக்கா, நீங்க மனசுல என்ன நினைக்கிறீங்களோ அதை சொல்லிடுங்க.. அவர் அதை கேட்டுக்கொள்ளட்டும்.
இரவு 9.20 மணிக்கு பிளைட் லேண்ட் ஆகும்.. அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்துவிட்டு வர 10.30, 11 மணி கூட ஆகிடும்.. அப்ப, இதுவரை நடந்தது கம்யூனிகேசன் பிரச்சனைதான்.. மாமா நல்லவர்தான்.. மாமா மேல எனக்கு எந்த குறையும் இல்லைதான். இடையில மதுரை செல்வம் பிரச்சனை செய்ததால் பிரச்சனை கூடியது. என்னால களங்கம் வரக் கூடாதுன்னு நினைக்கிறேன்- அப்படிங்கிற மாதிரி சொல்லுங்க அக்கா.
நைட் 10.30 மணிக்கு உங்களுக்கு போன் செய்யுற மாதிரி இருக்கும்.. அப்ப அவரு (சீமான்) கூடத்தான் இருப்பாரு.. ஸ்பீக்கர் ஆன் பண்ணிதான் பேசுவேன்.
அக்கா, மதுரை செல்வம், சாட்டை துரைமுருகன் எல்லாம் இன்னைக்கு இருப்பாங்க.. நாளைக்கு போய்டுவாங்க.. எங்களுக்கும் அவருக்கும் (சீமானுக்கும்) ஆயிரம் பிரச்சனை இருந்தா கூட, நாங்க சொந்தம். ஏதாவது ஒரு நல்லது கெட்டதில சந்திக்கிறமாதிரி இருக்கும்.அதுல எனக்கு பங்கம் வந்துவிடக் கூடாது. இவ்வாறு சீமான் உறவினர் என சொல்லக் கூடிய நபர் அந்த ஆடியோவில் பேசி இருக்கிறார்.
இந்த ஆடியோவில் பேசும் நபர் சீமானின் உறவினர்தானா? இடைமறித்து பேசுவது சீமான் மீது புகார் தெரிவித்த நடிகைதானா? என்பது உறுதி செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications