Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அஸ்திவாரத்தையே ஆட்டும் சீமான்.. அவங்க அடிமடியிலேயே "கை" வெச்சிட்டாரோ? படக்னு பார்த்த பாஜக, காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீமான் பேசிய பேச்சுக்களை கேட்டு, கடும் கொந்தளிப்பில் உள்ளது காங்கிரசும், பாஜகவும்.. இந்த 2 நாட்களாகவே, சோஷியல் மீடியாவில் இதுதான் பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது.

சீமானை பொறுத்தவரை, தீவிரமான காங்கிரஸ் எதிர்ப்பாளர்... பாஜகவை எந்த அளவுக்கு விமர்சிக்கிறாரோ, அதே அளவுக்கு காங்கிரஸையும் விமர்சிப்பவர்.. பாஜகவை போலவே, காங்கிரஸையும் பொதுவான அரசியல் எதிரியாக கருதி வருகிறது நாம் தமிழர் கட்சி..

Did Seeman slams BJP, Congress and what are the Naam Tamizhar Parties Important Strategies

சீமான்: "பாஜக - காங்கிரஸ் இவங்க 2 பேருமே ஒன்றுதான்" என்று அடிக்கடி சொல்பவர் சீமான்.. "இரண்டு கட்சிகள் இடையே கொள்கை ஒன்றுதான்.. ஆனால் கட்சிகள் மட்டுமே வேறு.. பணமதிப்பிழப்பீடு தவிர்த்து சிஏஏ, என்ஆர்சி, என்ஐஏ, ஜிஎஸ்டி, நீட் தேர்வு இவைகளை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி. ஆனால் அவற்றை செயல்படுத்தியது பாஜக. 2 பேருமே பேராபத்தை நோக்கி நாட்டை நடத்துபவர்கள்" என்று முழங்கியவர்.

ஒருமுறை செய்தியாளர் சந்திப்பில், "அண்ணாமலை திமுக பற்றி பட்டியல் வெளியிட்டதால், அதிமுகவில் உள்ளவர்கள் புனிதர்கள் ஆகிவிட முடியுமா? அதனால் அதிமுகவின் ஊழல் லிஸ்ட்டையும் வெளியிட வேண்டும்.. இரண்டு பக்கமும் நடவடிக்கை எடுக்கணும்.. ஊழல் செய்த கட்சிகளுடன் இனி கூட்டணி கிடையாது என்கிற பேரறிவிப்பையும் பாஜக செய்ய வேண்டும்.. அன்புதம்பி அண்ணாமலைக்கு நான் வைக்கும் வேண்டுகோள்" என்று கூறியிருந்தார்.

தனித்து போட்டி: தற்போது எம்பி தேர்தல் நெருங்கும் சூழலில், நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துவிட்டது. இந்த அறிவிப்பை திமுகவும் வெளியிடவில்லை, அதிமுகவும் வெளியிடவில்லை.

ஆனால், சின்னம் விவகாரம் சீமானுக்கு சிக்கலை தந்து வருகிறது.. இதுசம்பந்தமாக தேர்தல் ஆணையத்திடம் அணுகிவந்தாலும், கரும்பு விவசாயி சின்னம் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் போஸ்டர்களை அடித்து ஒட்டி வருகிறார்கள் சீமானின் தம்பிகள்.

திருச்சி சீமான்: இப்படிப்பட்ட சூழலில், சீமானின் பேட்டி, தொடர்ந்து 2 நாட்களாகவே இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. திருச்சியில் சீமான் பேசியதன் சுருக்கம் இதுதான்:

எம்பி தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும். நான் போட்டியிட போவதில்லை.. ஜாதியின் அடிப்படையில் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கிறேன். ஆதி தமிழ் குடிமக்களை அங்கீகரிக்க வேண்டும். தனித்தொகுதி என்பது இல்லையென்றால் இங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பே இருக்காது.. அரசியல் அதிகாரம், அங்கீகாரம் இல்லாமல் இருப்பவர்களுக்கு நாங்கள் வாய்ப்பளிக்கிறோம்" என்றார் சீமான்.

கோமா?: அரை நூற்றாண்டுகளாக இந்தியாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், இப்போது சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த கோரிக்கை வைப்பது ஏன்? இவ்வளவு நாள் அவங்க கோமாவில் இருந்தார்களா? ராகுல் காந்தி இப்போது ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்கிறாரே? இவ்வளவு நாள் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? தேர்தல் வரும் பொழுது அனைவர் மீதும் பாசம் வருகிறது. இவை எல்லாமே நாடகங்கள்.

வாக்களித்து தேர்ந்தெடுத்த தமிழக மக்களை வாழவைக்காமல், இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார். நான் ஆட்சியில் உட்கார்ந்தபிறகு, மீனவர்கள் மீது முடிந்தால் யாராவது தொட்டுப்பார்க்கட்டுமே.

பாஜக காங்கிரஸ்: காங்கிரஸ் கட்சி இனிமேல் இருக்காது, அதனால் பாஜகவிற்கு செல்லலாம் என்கிற நினைப்பில் விஜயதாரணி அங்கு சென்றிருக்கலாம். காங்கிரஸ் கட்சியாவது அவருக்கு 3 முறை எம்எல்ஏ சீட்டு வழங்கியது. ஆனால் பாஜகவை பொறுத்தவரை அந்த கட்சியில் சேரும்போது ஏதாவது செய்வார்கள். அதுக்கப்பறம் அங்கிருந்து எந்தசெய்தியும் வராது.

வாக்கு எந்திரத்தை வைத்து தேர்தல் நடக்கும்போது, முடிவு மக்கள் கையில் இருக்காது. பாஜகவினர் ஒரு கையில் நோட்டு பெட்டியும் இன்னொரு கையில் வாக்கு பெட்டியும் வைத்துள்ளார்கள். அவர்கள் எத்தனை சீட்டு வெல்வோம் என்று சொல்கிறார்களோ, அத்தனையும் வெல்வார்கள்..

ரகசிய பேச்சுவார்த்தை: நாம் தமிழர் கட்சியை கூட்டணியில் சேர பல்வேறு கட்சியில் இருந்து அழைப்பு வருகிறது. என்னிடம் ரகசியமாக பேசுகிறார்கள். நானும் அதை ரகசியமாக வைத்துள்ளேன். அதை வெளிப்படையாக சொல்வது மாண்பாக இருக்காது. வேட்பாளர் அறிவித்த பிறகு எங்கள் நிலைப்பாட்டை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். வாக்கு எந்திரத்தை நமக்கு தயாரித்து தருவது ஜப்பான். ஆனால் அந்த நாட்டு தேர்தலிலேயே அதை பயன்படுத்துவதில்லை.

நீட் தேர்வு எழுத செல்லும் மாணவிகளின் தோடு, மூக்குத்தியில் விடைகளை மறைத்து வைத்து எடுத்துச் செல்ல முடியும் என சொல்கிறார்கள்.. ஆனால் இவ்வளவு பெரிய வாக்கு எந்திரத்தில் எதுவும் செய்ய முடியாது என அவர்களே சொல்கிறார்கள்.. தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடக்கும் போதும் நிச்சயமாக எங்கள் கட்சி போட்டியிடும் என்றார் சீமான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+