கவனிச்சீங்களா? திமுகவுக்கு "இருக்குதா மனசாட்சி".. சவுக்கு சங்கர் பத்தி கேட்டால், சீமான் வேற சொல்றாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை ஆட்சி முறை தான் சரியானது என்றும், மாநில ஆட்சி, மத்திய அரசு என இரண்டும் செயல்பட வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

அயோத்திதாசப் பண்டிதர் 110ம் வருட, நினைவு நாளையொட்டி, தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனை வளாகத்தில் அமைத்துள்ள அயோத்திதாசர் பண்டிதர் திருவுருவச் சிலைக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Did Seeman slams DMK Government rs1000 monthly financial assistance and criticized PM Modi

பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, "மத்தியில் இருக்கக்கூடிய எந்த கட்சிகளுக்கும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். இரட்டை ஆட்சி முறை தான் சரியானது... மாநில ஆட்சி, மத்திய அரசு என இரண்டும் செயல்பட வேண்டும்.
மீனவர்: வட இந்தியாவில் யாராவது ஒரு மீனவன் பலியானால், உடனே மோடி ஓடோடி வந்து பார்க்கிறார், ஆனால் தமிழ்நாட்டிலுள்ள மீனவர்கள் இறந்தால் ஏன் வந்து பார்ப்பதில்லை? ரூ.16 லட்சம் கோடி, முதலாளியின் கடனை தள்ளுபடி செய்கிறார்கள் என்றால், ஏழைகளுக்கான ஆட்சி கிடையாது.. பெரும் முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்கிறது.

மறுபடியும் பாஜக ஆட்சிக்கு வந்தால், மோடி பிரதமராக பிரதமரா இருந்தாலும்சரி, அமித்ஷா பிரதமராக இருந்தாலும், அவரகளுக்கான கொள்கையை வகுப்பது ஆர்எஸ்எஸ்தான்.

அதானி துறைமுகம்: அதானி துறைமுகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் போதைப்பொருள் இறங்கியது. அந்த பொருள் எங்கே போனது? யாருடையது? என்று விசாரணை மேற்கொள்ளாமல், இஸ்லாமியர் என்பதனால் அமீர் மீதும், ஜாபர் சாதிக் மீது மட்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது...

ஒரு சினிமா எடுக்கும்போது, தயாரிப்பாளர் பணம் போடுகிறார், நாங்கள் வேலை செய்கிறோம் என்று தான் பார்க்க முடியுமே தவிர, அந்த பணத்தை அவர் எப்படியெல்லாம் சம்பாதித்தார் என்று நாங்கள் கேள்வி கேட்க முடியாது.

துறைகள்: அனைத்து துறைகளையும் தனியாருக்கு ஒதுக்கிவிட்டு, அவர்களின் கடன்களையும் அரசு தள்ளுபடி செய்கிறது. தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ள கார் தொழிற்சாலைகளில் எத்தனை தமிழர்கள் பணியாற்றுகிறார்கள் என்பதை நேரில் போய்தான் பார்க்க வேண்டும்" என்றார்

பெண் காவலர்களை பற்றி சவுக்கு சங்கர் பேசியதை முற்றிலும் தவிர்த்திருக்கலாம்.. ஆனால், சவுக்கு சங்கர் மீது கஞ்சாவழக்கு போடப்பட்டுள்ளது.. இந்த கஞ்சாவை விற்பதே அரசுதானே? இதற்கு முன்னதாக அரசுதான் சாராயம் விற்பனை செய்தது. இப்போதெல்லாம் கஞ்சா விற்பவர்களை போலீசார் கைது செய்வதில்லை.

விமான நிலையம்: விமான நிலையம் முழு அளவில் செயல்படாமல் தான் உள்ளது.. பரந்தூர் விமான நிலையம் அமைக்கக்கூடாது என்று மக்கள் போராடுகிறார்கள்.. ஆசிரியர்கள் போராடுகிறார்கள்.. மாணவர்கள் போராடுகிறார்கள்.. இப்படி எல்லாரும் தெருவில் நின்றுபோராடி கொண்டிருந்தால், "ஈடில்லா ஆட்சி இரண்டாண்டே சாட்சி" என்று சொல்கிறார்கள். இவர்களை பார்த்து, "இருக்கிறதா மனசாட்சி" என்றுதான் என்றுதான் கேட்க தோன்றுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்தால் தவறான விஷயங்கள் நடப்பது இயல்பு தானே? இங்கு நடப்பது சேவை அரசியலும் இல்லை, செயல் அரசியலும் இல்லை.. பூராவும் "செய்தி அரசியல்"தான்..

ஆயிரம்: 1000 ரூபாய் தருவதற்காக 6 மாதத்துக்கு முன்பே விளம்பரம் தந்த அரசு இது.. ஆயிரம் ரூபாய் தந்துவிட்டு, ஆயிரம் முறை சொல்லிக்காட்டுகிறார்கள்.. அதிலும் அந்த 1000 ரூபாயில் மிச்சப்படுத்தி வைத்து இருக்கிறீர்களா? என்றும் கேட்கிறார்கள். மோடி மட்டும் என்ன? தேர்தலுக்கு 2 வாரத்துக்கு முன்பு வந்து சிலிண்டர் விலையை குறைத்தாரே, அதுவும் செய்தி அரசியல்தான்" என்றார் சீமான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+