Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோயம்புத்தூர் பாஜக.. ஒரே அசிங்கம், கேவலம்.. முட்டை வாங்கின அண்ணாமலைக்கு சரியான தண்டனை: யார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜகவை மீண்டும் விமர்சித்திருக்கிறார் பிரபல நடிகரும், பாஜக ஆதரவாளருமான எஸ்வி சேகர்.

தமிழக பாஜகவை குறிப்பாக தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் எஸ்வி சேகர்.. கடந்த ஒரு வருட காலமாகவே, இந்த விமர்சனம் அதிகமாகி கொண்டே வருகிறது.

Sve Shekar Tamil Nadu BJP Annamalai TN Leader Annamalai PM Modi lok sabha election result

அண்ணாமலை நடைபயணத்தின்போதுகூட, "கீரை விக்கிற ஆயாவே ஒரு நாளைக்கு 10 கிலோமீட்டர் நடக்கிறாங்க, அண்ணாமலை பின்னாடி நடக்கிற அளவுக்கு நா வெட்டியா இல்லீங்க" என்று எஸ்.வி.சேகர் கிண்டலடித்திருந்தார்.

பூஜ்ஜியம்: கடந்த மாதம்கூட செய்தியாளர்களிடம் பேசும்போது, "300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவார்... ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த அண்ணாமலையின் பங்கு அதில் பூஜ்ஜியமாக தான் இருக்கும்..

அண்ணாமலை குழந்தைத்தனமான அரசியல்வாதியாகச் செயல்பட்டு வருகிறார். அதிமுகவுடன் கூட்டணி கூடாது என்பதை திட்டமிட்டு தான் அண்ணாமலை செயல்பட்டு வந்தார். அதன் பலனை இந்த தேர்தலில் பார்ப்பார். அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கக்கூடிய ஒரு கட்சி. ஆனால் தமிழகத்தில் பாஜக 3 சதவீதம் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு கட்சி. 3 சதவீதம் 33 சதவீதம் ஆகுமா என்பதனை வரும் தேர்தல் ரிசல்ட்டில் மட்டுமே நாம் பார்க்க முடியும்.

அதிசயம்: அண்ணாமலை சொல்வது போல 40க்கு 40 தொகுதிகளில் எல்லாம் வெற்றி பெற முடியாது. தமிழகத்தில் அதிசயம் நடந்தால் பாஜக ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெறும். ஏனென்றால் கூட்டணி இல்லை. அண்ணாமலை மோடியின் திட்டங்களை பொதுமக்களிடம் சரிவர எடுத்துச் செல்லவில்லை. அண்ணாமலை போன பாதை தவறாகிவிட்டது" என்று காட்டமாக கூறியிருந்தார்.

இப்போது தேர்தல் முடிந்த நிலையில், பாஜக மொத்த இடத்திலும் மண்ணை கவ்வியிருக்கிறது.. போட்டியிட்ட எங்கியுமே பாஜக வெற்றிபெறவில்லை.. இப்படிப்பட்ட சூழலில், மறுபடியும் எஸ்வி சேகர் அண்ணாமலையை விமர்சித்திருக்கிறார்.. அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜகவை 40க்கு பூஜ்ஜியம் என்ற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டார்.. அதற்கெல்லாம் அவருக்கு தண்டனை கிடைத்தால்தான் திருந்துவார் என்றும் மீண்டும் சீறியிருக்கிறார்.

பூஜ்ஜியம்: இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்வி சேகர், "அண்ணாமலை கஷ்டம் அவரால் வந்தது... கடப்பாரையை எடுத்து அவரே குத்திக்கொண்டார். அதற்கெல்லாம் அவருக்கு தண்டனை கிடைத்தால்தான் திருந்துவார். அவர் தமிழ்நாட்டில் பாஜகவை 40க்கு பூஜ்ஜியம் என்ற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டார். அதில் 13 இடங்களில் டெபாசிட் போய்விட்டது. ஒரு ஓட்டில் தோற்றாலும் தோல்வி தான்.

இதுகுறித்து 6 மாதங்கள் முன்பே நான் சொன்னேன்.. தமிழக பாஜக அண்ணாமலை தலைமையில் ஒரு பூஜ்ஜியம் தான் என்று. அதுதான் இப்போது நிரூபணமாகியுள்ளது. அதே சமயத்தில் மோடி அவர்கள் 3வது முறையாக இந்தியாவின் பிரதமராக வருவார் என்றேன், அதுவும் இப்போது நடந்திருக்கிறது.

எதிர்காலம்: தமிழக பாஜக, எப்போது அண்ணாமலையின் யோசனையைக்கேட்டு அதிமுகவின் கூட்டணியை முறித்துக்கொண்டதோ, அன்றே தமிழக பாஜகவின் எதிர்காலம் முடிந்துவிட்டது. இரண்டு முறை இந்தியாவை ஆண்ட தேசிய கட்சிக்கு தன்னால் ஒரு சீட் கொடுக்கக்கூட உபயோகம் இல்லாமல் மாநில தலைவர் உள்ளார் என்றால், அது வெட்கப்பட வேண்டிய விஷயம்.

பாஜக 14 சதவிகிதம் வாக்கு என்பது வளர்ச்சியில்லை, அசிங்கம்.,, 13 இடங்களில் பாஜக டெபாசிட்டே இல்லை. 14 சதவிகிதம் என்பது பாஜக கூட்டணியால் வந்த வாக்குதான். அதனால், தோல்வியை ஒப்புக்கொள்ள தான் வேண்டும். இதை சரி செய்தால் தான் திருந்த வாய்ப்பு உள்ளது..

திமுக சாதனை: கலைஞர் நூற்றாண்டு விழா முடிந்து, அந்த கொண்டாட்டத்தில் அவரது 101வது பிறந்தநாளை பெரிய அளவில் திமுக கொண்டாடக் கூடிய வகையில் திமுகவின் வெற்றி இருக்கும் என்று நான் கூறினேன். அதுபோல் தான் இந்த முடிவு வந்திருக்கிறது... அதற்கு முக்கிய காரணம், அடிப்படையான கூட்டணி என்ற விஷயம் தான். கூட்டணியை கலையாமல் ஸ்டாலின் அவர்கள் பார்த்துக் கொண்டார்.. அரசின் சாதனைகள் மூலம் முழு வெற்றியை பெற்றிருக்கிறார்கள்" என்றார் எஸ்வி சேகர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+