அசிங்கத்திலும் அசிங்கம்.. ஜூமில் பிளாக் பண்ணியும்.. சீறும் பாஜக தமிழிசை சவுந்தரராஜன்.. போலீஸ் புகார்
சென்னை: தமிழிசை சவுந்தரராஜன் நடத்திய இணையதள மீட்டிங்கில் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த மர்ம நபரை கண்டறிந்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். தற்போது தீவிர பிரச்சாரத்தையும் முன்னெடுத்து வருகிறார் தமிழிசை சௌந்தரராஜன்.

குடியிருப்புவாசிகள்: அந்தவகையில், அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடமும் வாக்கு சேகரிக்கும் விதமாக நேற்றுமுன்தினம் ஜூம் மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. அதில், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்புவாசிகளில் சிலர் கலந்துகொண்டனர்... இதில் ஏராளமான பெண்களும் பங்கேற்றதாக தெரிகிறது. அப்போது திடீரென ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், அந்த மீட்டிங்கில் கலந்துகொண்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த மீட்டிங் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.. இதையடுத்து, வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டிருந்தார் தமிழிசை சௌந்தரராஜன்.
அதிர்ச்சி: அதில், "அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வாக்காளர்களிடத்தில் எனக்கு ஆதரவு தருமாறு கேட்க திட்டமிட்டேன். அவர்களை நேரில் சந்திக்க முடியவில்லை என்பதால், ஜூம் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த மீட்டிங்கில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து தெரிந்து கொள்ளவும் முடிவு செய்திருந்தேன். இதில் பலர் ஆர்வமாக கலந்து கொண்டனர். மீட்டிங் தொடங்கிய சில நிமிடங்களில் ஆபாசமான படங்கள் அதில் பகிரப்பட்டன.
தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுகவை இதற்கு நேரடியாகவே நான் குற்றம் சுமத்துகிறேன். இது கேவலமான அரசியல்.. இதன் மூலம் எங்களுக்கும், மக்களுக்குமான தொடர்பை துண்டிக்க முடியாது. பெண்கள் இணைய வெளியில் சுதந்திரமாக பேசக்கூட முடியவில்லை. இதை யாரால் பொறுத்துக் கொள்ள முடியும்? அரசியலை தூய்மைப்படுத்த நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம். நேர்மையான அரசியல் செய்வது இங்கு அவசியம்" என்று கூறியிருந்தார்.
போலீசில் புகார்: இந்நிலையில், ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்த மர்ம நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழிசை தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஒரு சேனலுக்கு தமிழிசை சவுந்தராஜன் பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் சொல்லும்போது, "அந்த அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்கு சில பிரச்சனைகள் இருப்பதாக சொன்னார்கள்..
எனவே அதை பற்றியும் மீட்டிங்கில் எடுத்து சொல்லுமாறு சொல்லியிருந்தேன்.. அந்த பிரச்சனைகளை அவர்கள் என்னிடம் தெரியப்படுத்திவிடக்கூடாது என்பதற்காகவும், அவர்களின் ஆதரவு எனக்கு கிடைத்து விடக்கூடாது என்பதற்காகவும்தான், இப்படி கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளனர்.
வாக்காளர்கள்: வேட்பாளருக்கும், வாக்காளர்களுக்கும் இடையிலான இணைப்பை துண்டிக்கும் முயற்சிதான் இது.. நான் தாமரை சின்னத்துக்கு ஆதரவு கேட்கக்கூடாது என்ற மோசமான நோக்கிலும் எதிர்க்கட்சியினர் இதை செய்தனர். வேண்டுமென்றே, திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது.. இதுகுறித்து நான் சைபர் கிரைமில் புகார் தர முயன்றேன்.. ஆனால், இங்கே பிரச்சார சுற்றுப்பயணத்துக்கு நிறைய பேர் காத்திருந்ததால், ஐடிவிங் மூலமாக புகார் தர சொல்லியிருக்கேன்.
அந்த மீட்டிங்கில் பெண்கள் நிறைய பேர்கலந்து கொண்டிருந்தார்கள்.. நானும் அப்பதான் மீட்டிங்கில் பேச ஆரம்பித்தேன்.. உடனே இதுபோன்ற படங்கள் வந்துவிட்டன. அதை உடனே பிளாக் பண்ணியும்கூட, திரும்ப திரும்ப வேற வேறு, சைட்களிலிருந்து படங்கள் வந்து கொண்டேயிருந்தன. திட்டமிட்டேதான் இதை செய்திருக்காங்க.
அசிங்கமான மோதல்: நான் சொல்வது என்னவென்றால், "நேரடியாக என்கிட்ட மோதுங்க, அதை சந்திக்க நான் தயாராகவே இருக்கேன்.. இப்படி அசிங்கமா மோதாதீங்க.. இதனால் எனக்கும், மக்களுக்குமான இணைப்பினை ஒருபோதும் உங்களால் துண்டிக்க முடியாது" என்றார் தமிழிசை சவுந்தராஜன்.












Click it and Unblock the Notifications