அரசு தயாரித்த உரையை ஆளுநர் ரவி முன்பே திருப்பி அனுப்பினாரா? "ஆதாரம்" எங்கே? சீறி வரும் திமுக.. பளீர்
சென்னை: தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரைக்கு ஆளுநர் ஆர். என் ரவி முன்பே எதிர்ப்பு தெரிவித்ததாக சிலர் கூறுகிறார்கள். அதற்கு ஆதாரம் இருக்கிறதா? ஆளுநர் இதை எதிர்த்ததற்கு ஆதாரம் இருக்கிறதா? ஏன் ஆளுநர் பின்னர் கையெழுத்து போட்டு கொடுத்தார்? என்று திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர். என் ரவி தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை பேசாமல் சுயமாக சில விஷயங்களை பேசியது சர்ச்சையாகி உள்ளது. சுயமாக அரசு உரையை வெட்டி ஒட்டி அவர் பேசி உள்ளதாக புகார் வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த உரைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தீர்மானமும் கொண்டு வந்து, அவரின் உரையை அவை குறிப்பில் இருந்து நீக்கவும் செய்துள்ளார்.
இந்த நிலையில்தான் சமூக ஊடகங்களில் சிலர், தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரைக்கு ஆளுநர் ஆர். என் ரவி முன்பே எதிர்ப்பு தெரிவித்ததாக கூறி வருகிறார்கள். இது தொடர்பாக திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

பேட்டி
இந்த நிலையில் ஆளுநரின் செயல் மற்றும் பேச்சுக்கள் குறித்து திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் ஒன்இந்தியா யூடியூபிற்கு அளித்த பேட்டி பின்வருமாறு, ஆளுநர் பதவி என்பது நியமன பதவி. இந்தியாவில் இருக்கும் பெரிய பதவிகளில் ஆளுநர் பதவி மட்டுமே நியமன பதவியாக இருக்கிறது. இதனால்தான் ஆளுநர் பெரிதாக முடிவுகளை எடுக்க கூடாது என்று அவருக்கு பெரிதாக அதிகாரம் எதையும் கொடுக்காமல் வைத்து உள்ளனர். அப்படி இருக்கும் போது ஆளுநர் சுயமாக பேசுவது எல்லாம் தவறானது. அவரின் பதவி வெறியை காட்டுகிறது. ஆளுநர் ஒப்புக்கொண்டு தானே அவைக்குள் வந்துள்ளார். ஆளுநரின் செயல் தார்மீக கோபத்தை தமிழர்களுக்கு ஏற்படுத்தும். எம்எல்ஏக்கள் எல்லோரும் கோபமாக ஆளுநருக்கு எதிராக கோஷமிட இதுதான் காரணம்.

திமுக சரவணன்
நாங்கள் யாரையும் தூண்டிவிடவில்லை. எம்எல்ஏக்கள் தமிழர் உணர்வால் செயல்பட்டு உள்ளனர். நாங்கள் எழுதிக்கொடுத்ததை அவர் படித்து இருந்தால் பிரச்சனை இல்லை. அண்ணாமலை இதை பற்றி செய்யும் கமெண்டை எல்லாம் பற்றி நான் பேச மாட்டேன். அவருக்கு அரசியல் தெரியுமா? அவர் என்ன படித்து இருக்கிறார். அரசியலமைப்பு சட்டத்தில் அவருக்கு ஏதாவது தெரியுமா? அண்ணா, பெரியார், காமராஜர், கருணாநிதி இவர்களின் பெயரை எல்லாம் உச்சரிக்க மாட்டேன் என்றால் ஆளுநருக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்.

அதிகாரம்
ஆளுநருக்கு அகங்காரம். பெரிய அகங்காரம். நமக்கு பின்னால் ஆர்எஸ்எஸ் பாஜக இருக்கிறது. அவர்கள் நம்மை பார்த்துக்கொள்வார்கள் என்ற அகங்காரம். ஏன் ஆளுனர் ஆர். என் ரவி தமிழ்நாடு, தமிழகம் என்று பேச வேண்டும். அண்ணாமலை காயத்ரி விவகாரம், ரபேல் வாட்ச் விவகாரம், விமான கதவை திறந்த விவகாரம், செய்தியாளர்களிடம் சண்டை போட்ட விவகாரம் போன்றவற்றை மடைமாற்ற ஆளுநர் பேசுகிறார். அண்ணாமலைக்கு மறைமுகமாக ஆளுநர் சப்போர்ட் செய்கிறார். இவர்கள் எல்லாம் ஆர்எஸ் எஸ் கும்பல். மாற்றி மாற்றி சப்போர்ட் செய்து கொள்வதற்காக ஆர்எஸ்எஸ் இவர்களை அனுப்பி உள்ளது. இவர்களால் காயத்ரி கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா?

பாஜக உட்கட்சி
காயத்ரி ரகுராம் வைக்கும் புகார்களுக்கு அண்ணாமலை முதலில் பதில் சொல்லட்டும்? கொள்கை அரசியல் பேச ஆளுநருக்கு என்ன அருகதை இருக்கிறது? அவர் யார் பேசுவதற்கு? அவர் என்ன அரசியல்வாதியா? சட்ட ஒழுங்கு பிரச்சனை இருக்கிறது என்று சொல்ல ஆளுநர் யார்? வயிற்று எரிச்சலில் ஆளுநர் பேசிக்கொண்டு இருக்கிறார். திராவிட மாடல் ஆட்சி என்பது இவர்களுக்கு எதிரி, சனாதன மாடலுக்கு எதிரானது திராவிட மாடல். சனாதன மாடலை பின்பற்றிய எந்த மாநிலமும் திராவிட மாடலை பின்பற்றிய தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை அடையவே இல்லை.

அண்ணாமலை
எல்லா புள்ளிகளிலும் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை சனாதனத்தை பின்பற்றும் மாநிலங்கள் வளரவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சி அவர்கள் மாநிலத்தில் இருக்கிறதா? அவர்களுக்கு வயிற்று எரிச்சல். ரவிக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன தொடர்பு? தமிழர்களின் உணர்வு அவருக்கு தெரியுமா? அது தெரிந்து இருந்தால் ஆளுநர் ரவி தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு எதிராக பேசி இருப்பாரா? உங்களுக்கு யார் சம்பளம் கொடுக்கிறார்? ஒன்றிய அரசா கொடுக்கிறது? ஆளுநரின் பேச்சு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கு எதிரான பேச்சு.

ஆதாரம் எங்கே?
ஆளுநர் விதியை மீறினார். அதனால் அவரின் பேச்சை நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பு ஆளுநர் எழுந்து போகிறார். அப்படி என்றால் ஆளுநர் தேசிய கீதத்திற்கும் கொடுக்கும் மரியாதை என்ன? தேசப்பற்று இல்லாமல் அவர் கிளம்பி சென்று இருக்கிறார். தேசிய கீதத்திற்கு அவர் கொடுக்கும் மரியாதை என்ன.. இதுதான் அவரின் தேசப்பற்றா? அந்த மரியாதையை கூட அவருக்கு தெரியவில்லையா? எல்லாவற்றையும் பேசுகிறாரே.. இந்த சிறிய விஷயம் அவருக்கு தெரியாதா? ஆளுநர் உரைக்கு ஆளுநர் முன்பே எதிர்ப்பு தெரிவித்ததாக சிலர் கூறுகிறார்கள். ஆதாரம் இருக்கிறதா? ஆளுநர் இதை எதிர்த்ததற்கு ஆதாரம் இருக்கிறதா? ஏன் ஆளுநர் பின்னர் கையெழுத்து போட்டு கொடுத்தார்? அவர் என்ன ஏமாற்றுகிறாரா? ஏன் இப்படி நயவஞ்சகத்தோடு இருக்கிறார், என்று திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் தெரிவித்து உள்ளார்.
-
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு! -
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
2021ல் திமுக vs அதிமுக.. வாக்கு வித்தியாசம் வெறும் 5.7% தான்.. கேம்சேஞ்சரான நாதக, அமமுக, கமல்ஹாசன்! -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
அதிமுகவுக்கு கூடுதல் சீட் கேட்டு டெல்லி சென்ற இபிஎஸ்! "அப்ப கடைக்கு ஓனர் டக்ளஸ் அண்ணே இல்லையா? நேரு -
ரஜினிகாந்த் சொன்ன ஒற்றை வார்த்தை.. அதிமுகவை பாதாளத்துக்கு தள்ளிய ரிசல்ட்! 173 இடங்களில் திமுக வெற்றி -
இது திமுக கோட்டை.. அதிமுகவுக்கு ஒத்துவராது.. சென்னையை கூட்டணி கட்சியிடம் தாரைவார்க்க தயாரான எடப்பாடி -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி











Click it and Unblock the Notifications