Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடியை விடுங்க.. இதான் ஸ்டாலினுக்கு போன "ரிப்போர்ட்".. ஒரே வார்த்தைதான்.. கப்சிப் ஆன கூட்டம்..!

திமுக எம்எல்ஏக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் புது உத்தரவு போட்டுள்ளதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுவென நடந்து கொண்டிருக்கையில், மிக முக்கியமான உத்தரவு ஒன்றை முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளாராம்.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, முதல்வர் ஸ்டாலினின் அணுகுமுறை மாற்று கட்சிக்காரர்களையும் ஈர்த்து வருகிறது.

குறிப்பாக, ஓபிஎஸ், டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த் என முக்கிய தலைவர்களிடம் போனில் நலம்விசாரிப்பது முதல் அவர்களின் கருத்தையும் மதிப்பது வரை முதல்வர் கடைப்பிடித்து வருகிறார்.

 ஜெயலலிதா

ஜெயலலிதா

சமீபத்தில் அரசு சார்பில் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரம் பலரது கவனத்தையும் ஈர்த்தது.. அதிமுகவின் மறைந்த முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக அரசு, தமிழ் நாளிதழ் ஒன்றில் விளம்பரம் செய்திருந்தது.. ஆனால், அதிமுக ஆட்சியில் கருணாநிதியின் பிறந்தநாளுக்கு இதுபோன்ற விளம்பரங்களை பார்த்ததாக யாருக்கும் நினைவில்லை... தமிழகத்தின் பெருந்தன்மை கொண்ட தலைவராக முதல்வர் ஸ்டாலின் விளங்குகிறார் என்று ட்விட்டர்வாசிகளும் அதை கொண்டாடினர்.

 உதயநிதி

உதயநிதி

அதேபோல, சட்டசபை நிகழ்வுகளையும் எடுத்து கொண்டால், அங்கும் அரசியல் நாகரீகத்தை மிகசரியான முறையில் முதல்வர் கடைப்பிடிப்பதாகவே கூறப்படுகிறது.. கடந்த முறை சட்டசபைக் கூட்டம் நடந்தபோதுதான், முதல்வரையும், உதயநிதியையும் புகழ்ந்து கொஞ்சம் ஓவர்டோஸ் ஆகிவிட்டது.. ஆனால், அதையும் ஸ்டாலின் உடனடியாக கண்டித்தார்..

 திடீர்னு போட்ட ஆர்டர்

திடீர்னு போட்ட ஆர்டர்

அதிலும் எ.வ வேலு பேசும்போது, "நம்ம முதல்வர் ஸ்டாலின் எப்ப தூங்குகிறார் என்றே தெரியவில்லை. அமைச்சர்களுக்கும் கூட தெரியவில்லை. இரவு 1 மணிக்கு, 3 மணிக்குலாம் முதல்வரிடமிருந்து போன் வருகிறது. அந்த அளவுக்கு முதல்வர் ஸ்டாலின் 24 மணி நேரமும் உழைக்கிறார்" என்றதுமே, தன்னுடைய கடிவாளத்தை பலமாக வீசினார் முதல்வர் ஸ்டாலின்..

 கேள்வி நேரம்

கேள்வி நேரம்

"உங்களின் உரைகளில் உங்களை ஆளாக்கிய, உங்களை உருவாக்கிய நமது முன்னோடிகளைக் குறிப்பிட்டுப் பேசுவது முறை. ஆனால், நேரத்தைக் கருத்தில்கொண்டு இதைக் கேள்வி நேரத்துக்கு முன் பயன்படுத்தக் கூடாது. ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இதுதான் எனது கட்டளை" என்று ஆர்டர் போட்ட பிறகுதான் இந்த பழக்கம் கைவிடப்பட்டுவிட்டது. அதன்படியே பிடிஆரும் தன்னுடைய பட்ஜெட் தாக்கலின்போது முதல்வரை புகழ்ந்து ஒருவார்த்தைகூட பேசவில்லை.. இந்த முறையும் அதுபோலவே சட்டசபை கண்ணியத்தை காக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு சரியான முறையில் பதிலளிக்க வேண்டும் என்று தன்னுடைய எம்எல்ஏக்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியும் உள்ளார்..

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஆனால், ஒருசிலர் முதல்வரின் பேச்சை மீற போவதாக தெரிகிறது.. அதாவது பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கிறது இல்லையா, இதில், எதிர்க்கட்சி என்பதால் ஒவ்வொரு நாளும் அதிமுகவை வெளியேற்றுகிற சூழலையே எடப்பாடி உருவாக்குவார் என ஆளும் கட்சி எதிர்பார்த்திருக்கிறது. அதற்கேற்ப பட்ஜெட்டை குறை சொல்லியும் ஆளும் கட்சி எம்எல்ஏக்களை வம்புக்கு இழுக்கும் வகையிலும் அதிமுக தலைவர்கள் திட்டமிடுவார்கள்... அதனால், வெளியேற்றப்பட வேண்டும் என்கிற சூழல்களை அவர்கள் உருவாக்கினாலும், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் எதிர்வினையாற்றக்கூடாது என திமுக எம்எல்ஏக்களுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறார் ஸ்டாலின்.

Recommended Video

    21-03-2022 - தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் - விவாதம்.
     ஸ்டாலின் கண்டிஷன்

    ஸ்டாலின் கண்டிஷன்

    ஆனால், இதனை எம்எல்ஏக்கள் பலரும் ஏற்கவில்லையாம். அதிமுக ரகளையில் ஈடுபட்டால் அதற்கு தகுந்த பதிலடியை சபையிலேயே தர வேண்டும் என்று துடிக்கின்றனர். இதனை மோப்பம் பிடித்த உளவுத்துறை அதனை ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாம். இதனையடுத்து, முரட்டு எம்எல்ஏக்கள் என ஆளும் கட்சியால் கருதப்படும் அந்த எம்எல்ஏக்களுக்கு மட்டும், எந்த ரகளையிலும் ஈடுபடக் கூடாது, அதிமுகவினர் எது செய்தாலும் அமைச்சர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்கிற ஸ்ட்ரிக்டான உத்தரவு ஸ்டாலினிடமிருந்து பறந்துள்ளதாம்.. என்ன நடக்க போகிறது என்று பார்ப்போம்..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+