"பிரபலம்" சிக்குகிறார்.. வளையத்தில் "விஐபிகள்?.. திமுகவுக்கு பெரிய தலைவலி.. சைலண்ட்டா சிரிக்கும் பாஜக
சென்னை: திமுக அரசுக்கு மிகப்பெரிய சவால்கள் காத்துக் கொண்டிருக்கும் சூழலில், தர்மசங்கட தலைவலிகளும் முளைக்க தொடங்கிவிட்டன. இவைகளை எப்படி திமுக எதிர்கொள்ள போகிறது என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது.
எம்பி தேர்தலுக்கு முன்பேயே, பலம்வாய்ந்த திமுகவை வீழ்த்த, பாஜக பக்காவாக காய்களை நகர்த்தி வருகிறது.. முக்கியமாக, அவதூறுகளையும், குற்றச்சாட்டுகளையும் பரப்பி டேமேஜ் செய்வதன் மூலம், திமுக மீதான நன்மதிப்பை குறைக்கும் வியூகத்தை, கடந்த 2 வருட காலமாகவே தமிழக பாஜக முன்னெடுத்து வருகிறது.

இந்த புள்ளியிலிருந்துதான், அதிமுகவுடன் முரண்பட்டு நின்றது பாஜக.. நிஜமான எதிர்க்கட்சி தாங்கள்தான் என்ற அஸ்திரத்தையும், திராவிட கட்சிகள் மீது வீச துவங்கியது.
கோட்டை விட்ட அதிமுக: அந்த நேரத்தில், உட்கட்சி பிரச்சனையால், சற்று சுணங்கிப்போன அதிமுக, இந்த விஷயத்தில் அண்ணாமலையிடம் கோட்டைவிட்டது என்றே சொல்லலாம். அதிமுக Vs திமுக என்பதையும் முறியடித்து, திமுக Vs பாஜக என்ற கோணத்தை வலுவாக எடுத்துவைத்தது பாஜக..
ஆனால், இது தமிழக அரசியலுக்கு சாத்தியமாகாது என்றாலும், அப்படி ஒரு பிம்பத்தை கட்டமைக்க, கமலாலயம் எடுத்துக்கொண்ட முயற்சிகளும், உழைப்பும் அதிகம் என்றே சொல்லலாம். அதில் பெற்ற வெற்றியையடுத்து, திமுக அமைச்சர்களின் மீதான வழக்குகளில் கவனத்தை திருப்பியிருக்கிறது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோதே, டெல்லி டார்கெட் செய்யப்பட்ட லிஸ்ட்டில் மேலும் 5 திமுக அமைச்சர்கள் இருப்பதாகவும், அதிலும், 2 அமைச்சர்கள் பெயர் டாப்பில் உள்ளாகவும் சலசலக்கப்பட்டது.
ஒருவர் கொலை முயற்சி வழக்கில் சிக்கியவராம்.. மற்றொருவர் பொறியியல் கல்லூரி வைத்து நடத்தி வருவராம்.. அதனால், இவர்கள் எந்நேரமும் வருமான வரித்துறை, அமலாக்கத் துறையினரின் வளையத்துக்குள் வரக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இதுபோக பவர்புல் அமைச்சர் ஒருவரிடம் அடுத்த குறி பாயலாம் என்கிறார்கள். அந்த சமயத்தில்தான் பொன்முடி விவகாரம் சூடுபிடித்தது.
தங்கம் தென்னரசு: பொன்முடி வழக்கின் தீர்ப்பு, மீண்டும் பார்ட் 2- ஆரம்பமாகி உள்ள நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், என லிஸ்ட் விரிவடைந்து வருகிறது.
இப்படி திமுக அரசின் அமைச்சர்களை குறிவைத்து வருமானவரித்துறையும், அமலாக்கத்துறையும் மாறி மாறி இயங்கி வருகின்றன. இவர்களுக்கு கொடுக்கப்படும் அசைண்மெண்ட்படி, தேவைப்படும்போதெல்லாம் ரெய்டுகளும் நடக்கின்றன. ரெய்டுகளுக்கு செல்வதற்கு முன்பு, போதுமான அளவுக்கு ஆதாரங்களை சேகரித்தப்பிறகே ரெய்டுக்கு போகிறார்களாம்.
வருமானவரித்துறை: சமீபகாலமாகவே, வருமானவரித் துறையில் திமுக விஐபிக்களை பற்றி நிறைய புகார்கள் குவிந்தபடி இருக்கின்றனவாம். குறிப்பாக, முக்கிய மாநகராட்சிகளின் மேயர்கள் குவித்து வைக்கும் சொத்துக்களை பற்றிய புகார்கள் அதிகமாக போகின்றன. இதில் நம்பகத்தகுந்த புகார்கள், நம்பகத்தன்மையற்ற புகார்கள் என்று 2 ஆகி பிரிக்கிறார்களாம். நம்பகத்தன்மை இல்லாத புகார்களை ஓரங்கட்டிவிடுகிறதாம் வருமானவரித் துறை.
அதேபோல, நம்பகத்தன்மை உள்ள புகார்களை கவனமாக பாதுகாத்து வருவதுடன் அது குறித்த கூடுதல் தகவல்களை தங்கள் துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் சேகரித்து வருகின்றது வருமானவரித்துறை. குறிப்பிட்ட மாநகராட்சிகளின் மேயர்கள் பற்றி புகார் வந்திருந்தாலும், தமிழகத்தில் உள்ள 21 மாநாகராட்சிகளின் மேயர்களும் ரகசியமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.
மேயர்கள்: அதேசமயம், மேயர்களுக்கும் அமைச்சர்களுக்கும் நெருக்கமான கவுன்சிலர்களும் வருமானவரித்துறையின் வளையத்துக்குள் இருக்கிறார்கள். ஆக, தேர்தல் நெருக்கத்தில் மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை குறி வைத்து ரெய்டுகளுக்கு திட்டமிடப்படுகிறது.
ஏற்கனவே, உயர் அரசு அதிகாரிகள் சிலரும் விசாரணை வளையத்துக்குள் வரப்போவதாகவும், சம்மன் அனுப்பிவிட்டால் என்ன செய்வது என்ற பீதியில் அவர்கள் உறைந்துள்ளதாகவும் செய்திகள் கசிந்துவரும் நேரத்தில், இப்போது மேயர்கள் பக்கம், வருமானவரித்துறை கவனத்தை திருப்பியுள்ளது திமுகவுக்கு கலக்கத்தை தந்துவருகிறது. பெரும்பாலான மேயர்கள், அந்தந்த மாவட்டங்களில் பிரபலம் வாய்ந்தவர்கள் என்றாலும், நிறைய சர்ச்சைகளிலும் சிக்கியவர்கள்.
தலைவலி: வருமானவரித்துறை விசாரணையின் முடிவில் ஒருவேளை, இவர்கள் மீது தவறேதும் இல்லாவிட்டாலும்கூட, இந்த அதிரடி நடவடிக்கைகள், திமுக அரசுக்கு தேவையில்லாத தலைவலியை தந்துவருவதாகவே தெரிகிறது. அத்துடன், திமுகவுக்கு செக் வைப்பதற்காகவே, மத்திய அரசின் ஏஜென்சிகள் செயலாற்றுவதாக, உடன்பிறப்புகள் சொல்லிவரும் குற்றச்சாட்டும் வலுப்பெற்று வருகிறது.. அடுத்து என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.!!!
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications