வீக்கம் வந்தது எப்படி? துன்புறுத்தப்பட்ட செந்தில் பாலாஜி! அடித்து சொல்லும் உதயநிதி, சேகர் பாபு! ஷாக்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை சார்பாக துன்புறுத்தப்பட்டதாக அமைச்சர்கள் உதயநிதி , மா. சுப்பிரமணியன் ,ரகுபதி மற்றும் சேகர்பாபு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அமலாக்கத்துறை ரெய்டு மற்றும் கைதுக்கு இடையில் நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டு உள்ளார். செந்தில் பாலாஜியின் சென்னை இல்லத்தில் 17 மணி நேர சோதனையை நிறைவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

சோதனையை முடித்து கொண்டு அவரின் வீட்டிற்கு உயரதிகாரிகள் வந்தனர். அவரை கைது செய்வது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டனர். அவர் காலையில் வாக்கிங் சென்ற போது தொடங்கிய ரெய்டு இரவு வரை நீடித்தது.
அவர் வீட்டில் இருந்து சில பைகளையும் எடுத்து சென்றுள்ளனர். இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காகவும், முறையாக கைது செய்யவும் அவரை அழைத்து சென்றபோது நெஞ்சில் கைவைத்து வலிப்பதாக கூறி அவர் காரில் படுத்ததால் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று இருக்கிறார்கள்.
அமைச்சர்கள் புகார்: அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்ட ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர்கள் உதயநிதி , சுப்ரமணியன் ,வேலு , ரகுபதி மற்றும் சேகர்பாபு ஆகியோர் வருகை புரிந்தனர்.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி துப்புறுத்தப்பட்டதாக திமுகவின் டாப் அமைச்சர்கள் கூறி வருகின்றனர். அவர் துன்புறுத்தப்பட்டதாக அவர்கள் உறுதியாக செய்தி வெளியிட்டு உள்ளனர்.
அதன்படி அமைச்சர் எஸ் ரகுபதி அளித்த பேட்டியில், திமுக அமைச்சர் என்ற காரணத்தாலேயே செந்தில் பாலாஜி பழிவாங்கப்பட்டுள்ளார்; அமைச்சரை மன உளைச்சலுக்கு ஆளாக்கவே அமலாக்கத்துறை நடவடிக்கை
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனநிம்மதியை குலைக்கும் விதமாக செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. தொடர்ச்சியாக 24 மணி நேரம் விசாரணை செய்து சித்ரவதை செய்துள்ளனர். இது ஒரு மனித உரிமை மீறல். திமுக அமைச்சர் என்பதாலேயே செந்தில் பாலாஜி பழிவாங்கப்பட்டிருக்கிறார்
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் எந்த விதிகளும் முறையாக பின்பற்றப்படவில்லை. மக்கள் மன்றத்தின் முன்பும், மக்கள் முன்பும் பாஜக அரசு பதில் சொல்லியாக வேண்டும்; அமைச்சரை மன உளைச்சலுக்கு ஆளாக்கவே அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கோடு சோதனை நடத்தப்பட்டுள்ளது, என்று கூறியுள்ளார்.
துன்புறுத்தல் குறித்து அடித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய பாஜக அரசின் உருட்டல், மிரட்டலுக்கு திமுக அஞ்சாது; அமைச்சர் செந்தில் பாலாஜியை துன்புறுத்தி இருக்கின்றனர்.
அவர் இப்போது மருத்துவரின் கண்காணிப்பில் இருக்கிறார், என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்தார். செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து அமைச்சர் சேகர் பாபு அளித்த பேட்டியில், அமைச்சர் செந்தில் பாலாஜி ICU ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்; சுய நினைவில்லாமல் உள்ளார்; நான்கு ஐந்து முறை பெயர் சொல்லி அழைத்தபோதும் அவர் கண் திறந்து பார்க்கவில்லை; அவர் காது அருகே வீக்கம் உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி ரத்த அழுத்தம், நெஞ்சு வலி காரணமாக இருதய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் துன்புறுத்தி இருக்க வாய்ப்பு உள்ளது. திமுக இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ளும்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்க நிலையில் உள்ளார் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இப்படி டாப் அமைச்சர்கள் எல்லோரும் அமைச்சர் செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டதாக கூறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் மாநில தலைவர் இது தொடர்பாக தெரிவித்த கண்டனத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது ஜனநாயக படுகொலை; அவர் ஒரு அரசியல் தலைவர், அவர் எங்கும் ஓடிவிடவில்லை;
நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?; உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்துசென்ற மறுநாளில் இது நடக்கிறது என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது, என்று கூறி உள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications