சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அப்ரூவர்" சசிகலா?.. நகைக்கடையே ரோட்டில் நடந்து வந்துச்சு.. கூடவே தேவாரம் துப்பாக்கியுடன்: மணி பளீச்

சசிகலா + ஜெயலலிதா இருவரின் நட்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி பேட்டி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக + தமாகா தரப்பில், அப்ரூவர் ஆகும்படி நெருக்கடிகள் வந்தபோதும்கூட, சசிகலா ஜெயலலிதாவுக்காக அவர்பக்கம் உறுதியாக நின்றார் என்று மூத்த பத்திரிகையாளர் மணி, பழைய அரசியல் சம்பவங்களை நினைவுகூர்ந்துள்ளார்.

ஜெயலலிதாவோடு இணைந்து சசிகலா ஆடம்பர வாழ்க்கையை மட்டுமில்லாமல் நெருக்கடி காலத்தையும் சேர்ந்து ஒன்றாக கழித்தவர்.. ஜெயலலிதாவுடன் சசிகலாவும் கைதானவர்.

வளர்ப்பு மகன் தத்தெடுத்தது துவங்கி, சசிகலா குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தியது வரை எல்லாம் சசிகலாவால்தான் என சொல்லப்பட... அதுவே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சசிகலாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஜெயலலிதா அறிவித்தார்,

 ராஜீவ் கொலையாளிகள் விடுதலை..திமுக கூட்டணியில் களேபரம்- காங். ஜோதிமணிக்கு விசிக வன்னி அரசு பதிலடி! ராஜீவ் கொலையாளிகள் விடுதலை..திமுக கூட்டணியில் களேபரம்- காங். ஜோதிமணிக்கு விசிக வன்னி அரசு பதிலடி!

ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

ஆனால் அடுத்த சில நாளிலேயே, எனது உடன்பிறவா சகோதாரி சசிகலா என்றார்.. "சசிகலா எப்பவுமே என்னோடுதான் இருப்பார். அவரைப்பற்றிய எந்த கேள்வியும் அவசியமற்றது என்று வெளிப்படையாகவே சொல்லியவர் ஜெயலலிதா.. கிட்டத்தட்ட 32 ஆண்டுகால நட்பின் அடிப்படையில் இவர்கள் இணைபிரியாமல் இருந்தனர். இந்நிலையில், ஜெயலலிதாவுடன் சசிகலாவின் உறவு எந்த அளவுக்கு வலுப்பெற்று இருந்தது என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி நம்மிடம் பகிர்ந்து கொண்டார். ஒன் இந்தியா தமிழுக்கு மணி அளித்த ஸ்பெஷல் பேட்டிதான் இது:

செங்கோட்டையன்

செங்கோட்டையன்

"சசிகலாவை பார்க்காமல் ஜெயலலிதாவை கட்சிக்காரர்கள் பார்க்க முடியாது.. எஸ்டி சோமசுந்தரம், அரங்கநாயகம், நெடுஞ்செழியன் என மத்த தலைவர்கள் பலர் அமைச்சர்களாக இருந்தனர்.. கண்ணப்பன், செங்கோட்டையன், முத்துசாமி, கேஏ கிருஷ்ணசாமி, இவர்கள் எல்லாருமே எம்ஜிஆரிடமே அமைச்சர்களாக இருந்தவர்கள்.. இத்தனை தலைவர்கள் இருந்தும்கூட, நேரடியாக ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை.. அந்த சந்திப்புகள் வெறும் சொற்பம் என்றே சொல்லலாம்.. 1991-96 காலகட்டம் என்பது மோசமானது.. அவர் ஆட்சிக்கு வந்த புதிது.. தான்தோன்றித்தனங்கள் அதிகமாக இருந்தது..

 பீச் + சப்வே

பீச் + சப்வே

அதிலும் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு, போலீஸ் கெடுபிடிகளும் அதிகம்.. சாலையில் மக்கள் நடந்து செல்வதே கடினமாக இருந்தது.. அந்தம்மா போயஸ் கார்டனில் இருந்து கிளம்பி, தலைமை செயலகம் செல்கிறார் என்றால், வழியெல்லாம் கட்டுப்பாடுகள் அதிகம் இருந்தன.. தலைமை செயலகத்துக்கு, இவங்க பீச் ரோடு வழியாக போவார்களா? அல்லது மவுன்ட்ரோடு வழியாக போவார்களா? என்று தெரியாது.. அதனால் 2 ரோட்டையுமே பிளாக் செய்துவிடுவார்கள்.. மவுண்ட்ரோடில் 12 சப்வே-க்கள் உள்ளன.. இந்த 12 சப்-வேக்களிலும் யாரையுமே இறங்கவும் விடமாட்டாங்க..

 எம்ஜிஆர் போட்டோ

எம்ஜிஆர் போட்டோ

ரோட்டில் போறவங்களை, "சுவற்றை பார்த்து திரும்பி நில்லுங்கள்" என்று சொல்லும் அட்டூழியம் எல்லாம் நடந்தது.. இப்படியான சூழலில், அமைச்சர்கள்கூட ஜெயலலிதாவை பார்க்க முடியாது.. சந்திப்பு என்பதே குதிரைக்கொம்பாக இருந்தது.. 1991 இறுதி அல்லது 92 துவக்கம் என்று நினைக்கிறேன், அப்போது எம்ஜிஆரின் ஆளுயர படத்தை சட்டசபையில் திறந்து வைத்தார்கள்.. சட்டசபைக்குள்ளே நடக்கும் அந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் சேரில் ஜெயலலிதா போய் உட்கார்ந்து கொண்டார்.. துணை சபாநாயகர் சேரில் சசிகலா போய் உட்கார்ந்து கொண்டார்.. சட்டசபை நிகழ்ச்சிகளுக்கு கூப்பிட்டால் யார் வேண்டுமானாலும் போகலாம்..

இரும்புக்கோட்டை

இரும்புக்கோட்டை

சமீபத்தில்கூட, சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில், ராம்நாத் கோவிந்த் பங்கேற்றபோது, பாஜகவில் இருந்து அண்ணாமலைகூட சட்டசபை நிகழ்வில் கலந்து கொண்டார்.. அதில் தவறில்லை.. ஆனால் சட்டசபைமுறை என்று ஒன்று இருக்கிறது.,. சபாநாயகர் சேரில் ஜெயலலிதாவும், துணை சபாநாயகர் சேரில், எந்த பொறுப்பிலும் இல்லாத சசிகலாவும் உட்கார்ந்தனர்.. அமைச்சர்கள் என்றில்லை, அதிகாரிகளும்கூட சசிகலாவை பார்க்காமல், ஜெயலலிதாவை சந்திக்கவே முடியாது.. இரும்புக்கோட்டையாக அந்த நிர்வாகம் அன்று இருந்தது.. ஜெயலலிதாவுடன் இருந்தவரை, 25 வருடங்களாக சசிகலாவின் குரலை யாருமே கேட்டதில்லை.. ஜெயலலிதா இறந்தபிறகு, பொதுக்குழுகூட்டத்தில் பேசும்போதுதான் சசிகலா குரலே எல்லாருக்கும் தெரியவந்தது..

 மூப்பனார்

மூப்பனார்

94-95ம் ஆண்டு காலத்திலேயே அமலாக்கத்துறை, சசிகலாவுக்கு நிறைய நோட்டீஸ்களை அனுப்பியிருக்கிறது.. ஆனால், ஒரு நோட்டீஸை கூட மதித்து, அவர்கள் ஆஜராகவில்லை.. 96-ல் ஜெயலலிதா தோற்று, டெல்லியில் ஆட்சி மாற்றம் வந்தபிறகுதான், 96-ல் கைது செய்து 10 மாதம் சிறைவைத்திருந்தார்கள்.. ஆனால், ஜெயலலிதாவிடம் அவரது விசுவாசம் என்பது அசைக்க முடியாமல் இருந்தது.. 1996-ல், திமுக - தமாகா கூட்டணியின்போது, சசிகலாவை அப்ரூவராக மாறும்படி திமுக தரப்பு நிர்ப்பந்தித்தாககூட ஒரு தகவல் வந்தது..

 அப்ரூவர்

அப்ரூவர்

"அப்ரூவர் ஆயிடுங்க.. எங்களுக்கு டார்கெட் நீங்கள் கிடையாது" என்று அழுத்தங்களை தந்தும்கூட கொள்ளையடித்ததற்கு காரணம் ஜெயலலிதா தான் என்றுகூட ஒரு அறிக்கை விடும்படி கேட்டுக்கொண்டும்கூட, சசிகலா அதற்கு கடைசிவரை சம்மதிக்கவில்லை.. தவறுகள் ஆயிரம் செய்தாலும், ஜெயலலிதாவிடம் சசிகலாவுக்கு விசுவாசம் நிறையவே இருந்தது.. அப்போதுதான் வளர்ப்பு மகன் திருமணம் நடந்தது.. திடீர்னு யார் இது வளர்ப்பு மகன் என்று எல்லாருமே ஆச்சரியப்பட்டார்கங்ள.. நாடே காழி உமிழ்ந்த கல்யாணம் அது.. ஜெயலிதாவும் சகிகலாவும் நகைக்கடையை உடம்பில் மாட்டிக் கொண்டு, மாப்பிள்ளை அழைப்புக்கு நடந்து போனாங்க.. தேவாரம் துப்பாக்கி வைத்துக் கொண்டு பக்கத்திலேயே நடந்து வந்தார்..

 மீசை தேவாரம்

மீசை தேவாரம்

தினமணியில்கூட அப்போது கார்டூன் போட்டிருந்தாங்க.. உடம்பெல்லாம் ஒட்டியானம், நகைகளுடன் இவர்கள் நடந்துவரும்போது, தேவாரம் பெரிய மீசை வெச்சிக்கிட்டு துப்பாக்கியுடன் நடந்து வந்தார்.. ஒரு நகைக்கடையே நடந்து வருகிறது என்றால் சும்மாவா? போலீஸ் பாதுகாப்பு தேவைதானே? என்று அந்த கார்ட்டூனில் எழுதியிருந்தார்கள்.. அந்த கல்யாணத்தில்தான் நிறைய கெட்ட பெயர்.. அரேபியாவில் இருந்து குதிரைகள் வரவழைச்சாங்க.. ஊரெல்லாம் வாழை மரம் வெச்சாங்க.. 27 வயதில் ஒரு வளர்ப்பு மகன்.. இப்படி ஒரு வளர்ப்பு மகனை இதுக்கு முன்னாடியே சொல்லியிருக்கணும்..

 கருணாநிதி பிரஷர்

கருணாநிதி பிரஷர்

வளர்ப்பு மகனாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சசிகலாவின் அக்கா மகன்.. சசிகலாவின் நிர்ப்பந்ததினால்தான் வளர்ப்பு மகன் என்ற விவகாரம் நடந்துள்ளது.. 96-ல் தேர்தலில் தோல்வியடைய இந்த திருமணமும் ஒரு முக்கிய காரணம்.. அதற்கு பிறகு 5 ஆண்டுகள் பதவியில் இல்லாவிட்டாலும், சசிகலா ஜெயலலிதாவை காட்டிக் கொடுக்கவில்லை.. வாழ்விலும், தாழ்விலும் உறுதுணையாக நின்றார்.. 96ல் ஜெயலலிதா தோற்றதுமே, எல்லாரும் அவரை விட்டு ஓடிட்டாங்க.. கலைஞர் ஒருபக்கம் நெருக்கினார்.. ஜெயலலிதாவுடன் இருந்த அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது கேஸ்களை போட்டார்..

கலைஞர்

கலைஞர்

ஆனால், அரியணை ஏறும்போதும்சரி, ஜெயிலுக்கு போனாலும்சரி, ஒன்றாகவேதான் இருப்போம் என்று, தைரியமாக ஜெ.வுடன் துணை நின்றவர் சசிகலா.. பதவியில் இல்லாவிட்டாலும் எனக்கு எல்லாமே அக்காதான் என்று விசுவாசத்தை நிலைநாட்டினார்.. அதற்கு வாய்ப்பாக அமைந்ததுதான் 96 கால கட்டம்.. காரணம், கலைஞர் இங்கே முதல்வர், ப.சிதம்பரம் அங்கே நிதியமைச்சர்.. 2 பக்கமும் இடி என்றாலும், துணிச்சலாக, உறுதியாக ஜெயலலிதாவுடன் நின்றார் சசிகலா" என்றார் மணி.

English summary
Did the Kalaignar Karunanidhi ask Sasikala to become an approval, says Sr Journalist Mani: Specials Interview
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X