லீக் ஆன சீக்ரெட்.. நொறுங்கும் பாஜக பிளான்.. நாள் குறிச்சாச்சு போல.. ஒன்று திரள போகும் விவசாயிகள்?
ரகசிய மீட்டிங் நடத்தி, பாஜக அரசுக்கு எதிராக போராட விவசாயிகள் தயாராகி வருகிறார்களாம்
சென்னை: எம்பி தேர்தலுக்கு தேசிய பாஜக தயாராகி வரும் நிலையில், புது பிளான் ஒன்றை பஞ்சாப் விவசாயிகள் கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தனர்.. இந்த போராட்டங்களில் 800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியாகினர்.
அதில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகளின் பங்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. கடுமையான வெயில், மழை, பனி என மிக மோசமான சூழலிலும் விடாமல் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்...

வாபஸ்
ஆனால், அந்த சூழலிலும் விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த மத்திய அரசு, மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மறுத்துவிட்டது. இதற்கு பிறகு, சுப்ரீம்கோர்ட் தலையிட்டு விவசாய சட்டங்களை நிறுத்தி வைத்தது... இதற்கு பிறகு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, 3 விவசாய சட்டங்களையும் திரும்ப பெறுவதாக அறிவித்தார்... மேலும் நாடாளுமன்றத்தில் மூன்று விவசாய சட்டங்களையும் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்... அத்துடன் டெல்லியில் போராடும் விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

கமா கூட மாற்ற மாட்டோம்
இதற்கு காரணம், 5 மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த சட்டங்களை பாஜக வாபஸ் பெறுகின்றது என்று அப்போது எதிர்க்கட்சிகளும் விமர்சித்தன.. ஆனால், போராட்டம் நடக்கும்போது இந்த சட்டத்தை தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரித்து பேசியபடியே இருந்தனர்.. வேளாண் சட்டத்தை அரசு திரும்ப பெற்றதுமே, மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருந்த ஒரு வீடியோவை சோஷியல் மீடியாவிலும் வைரலாக்கின.

ஷூட்டிங் - பச்சை துண்டு
அந்த வீடியோவில், "நம்முடைய அரசு என்ன சொல்கிறது என்றால், 500 வருஷம் போராட்டம் பண்ணினாலும் இந்த விவசாய சட்டத்தில் ஒரு கமாவை கூட மாத்தமாட்டோம்... ஏனென்றால் இது காங்கிரஸ் ஆட்சி கிடையாது. இது பாஜகவின் ஆட்சி. யாருக்கும் பயப்படமாட்டோம்.. இது மக்களுக்காக கொண்டுவரப்பட்ட சட்டம். மக்களுக்கு நல்லது செய்யக் கூடிய சட்டம்... என்னதான் நீங்க மிரட்டி உருட்டி ஷூட்டிங் நடத்தி, பச்சை துண்டு போட்டாலும் எதுவும் செய்ய முடியாது" என்று ஸ்டாலினை கிண்டலடித்து கூறியிருக்கிறார்.

ரகசிய பேச்சுவார்த்தை
வாபஸ் என்ற அறிவித்தபிறகு பெரிதாக பாஜக இதை பற்றி வாய் திறக்கவில்லை.. ஆனால், இந்த வேளாண் சட்ட வாபஸை விவசாயிகள் முழுமையாக ஏற்க மறுத்தனர்.. மேலும் சில கோரிக்கைகளை மத்திய அரசுக்கு விவசாயிகள் விடுத்திருந்தனர்.. ஆனால், அதற்கு பிறகு, வடமாநில தேர்தல் விவகாரங்களில் பாஜக மும்முரமாகிவிட்டதே தவிர, விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது.

அக்னிபாத்
இப்போது, கோரிக்கைகள் குறித்து வாய் திறக்காமல் இருக்கும் இந்த விவகாரத்தைதான், விவசாயிகள் மீண்டும் கையில் எடுக்க போகிறார்களாம்.. மீண்டும் போராட்டத்தைத் தொடர போவதாக கூறப்படுகிறது.. குறிப்பாக, பஞ்சாப் விவசாயிகள் தரப்பில் ரகசிய பேச்சுவார்த்தைகளை தொடங்கி இருக்கிறார்களாம்.. அதுமட்டுமல்ல, பாஜகவுக்கு எதிராக இந்த முறை அக்னிபத் திட்டத்துக்கு எதிராகவும் இளைஞர்கள் திரண்டிருப்பதால், அவர்களையும் இணைத்து கொண்டு டெல்லியை முற்றுகையிடும் திட்டத்தில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன..

தகரும் கனவு
அநேகமாக ஜூலை 31-ல் பஞ்சாப் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடங்க இருப்பதாகவும் சொல்கிறார்கள். போராட்டத்தை முன்கூட்டியே அறிவித்தால் தடை விதிக்கக்கூடும் என்பதால், இதை ரகசியமாகவே வைத்திருக்கிறார்களாம்... விரைவில் எம்பி தேர்தல் வர உள்ள நிலையில், அதற்கு பாஜக இப்போதே தயாராகிவரும் நிலையில், மீண்டும் போராட்டம் வெடிக்க போவதாக தகவல்கள் பரபரத்து வருவது டெல்லியை அசைத்து வருகிறது..!












Click it and Unblock the Notifications