ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு.. கர்நாடக சுற்றுலா ஆணையராக பொறுப்பேற்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தமிழகத்தில் பிறந்த ஐஏஎஸ் அதிகாரி ராம்பிரசாத் மனோகர் கர்நாடகா மின் பரிமாற்ற கழகத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பு வகித்து வருகிறார். தற்போது அவருக்கு சுற்றுலாத்துறையின் ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக வழங்கி கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ராம்பிரசாத் மனோகர் கர்நாடகா சுற்றுலாத்துறை ஆணையர் பொறுப்பையும் இன்று ஏற்றார்.

கர்நாடகவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் ராம்பிரசாத் மனோகர். தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 2010ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். கர்நாடகாவில் பணியை தொடங்கினார்.

ram-prasath-manohar-ias-takes-charge-as-the-commissioner-of-the-karnataka-tourism-department

தற்போது கர்நாடகா மின் பரிமாற்ற கழகத்தின் (KPTCL) நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகா மின் பரிமாற்ற கழகத்தின் நிர்வாக இயக்குநர் பதவியுடன் அவர் அம்மாநில சுற்றுலாத்துறையின் ஆணையர் பொறுப்பையும் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா அரசின் இந்த உத்தரவுப்படி ராம்பிரசாத் மனோகர் இன்று சுற்றுலாத்துறை ஆணையராக பொறுப்பேற்றார். அதன்பிறகு அவர் சுற்றுலாத்துறையின் உயரதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு சுற்றுலாத்துறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி விவாதித்தார். கர்நாடகா சுற்றுலாத்துறை ஆணையர் பொறுப்பு வழங்கப்பட்டதற்கு அந்த துறையின் அமைச்சர் கேஜே ஜார்ஜிற்கு நன்றி தெரிவித்தார்.

ராம்பிரசாத் மனோகர் சுற்றுலாத்துறையில் பொறுப்பு வகிப்பது இது 2வது முறையாகும். இதற்கு முன்பு சுற்றுலாத்துறை இயக்குநராக பணியாற்றினார். அந்த சமயத்தில் சுற்றுலாத்துறையில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு பாராட்டு பெற்றார். குறிப்பாக ஜி20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஜி 20 ஷெர்பா மாநாடு கர்நாடகாவின் ஹம்பியில் நடந்தது. இதனை அவர் ஒருங்கிணைப்பு செய்து பாராட்டு பெற்றார்.

அதேபோல் வரலாற்று சிறப்பு மிக்க கர்நாடகாவின் ஹொய்சாலா கோவில்கள் (பேலூர், ஹலேபிடு, சோம்நாத்பூர்) யுனெஸ்கோ பாரம்பரிய சின்ன பட்டியலில் சேர்ப்பதற்கான பணியை ஒருங்கிணைப்பு செய்வதில் முக்கிய பங்காற்றினார். எப்கேசிசிஐ உடன் இணைந்து 'தட்சிண பாரத் உற்சவ' கலாசார விழாவை ஏற்பாடு செய்தார். கிராமங்களில் உள்ள சுற்றுலா தலங்களை அடையாளம் கண்டு அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி இருந்தார்.

இவரது தலைமையின் கீழ் கர்நாடகா சுற்றுலாத்துறை முக்கிய விருதுகளை வென்றது. அதன்படி மத்திய அரசு சார்பில் சிறந்த சுற்றுலா கிராம விருது (ஹம்பி) கர்நாடகா சுற்றுலாத்துறை பெற்றது. உள்ளூர் பராம்பரியத்தை பாதுகாத்து நவீன சுற்றுலா வசதிகளை மேம்படுத்தியதை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.

அதேபோல், சிஎன்என் இந்தியாவின் பசுமை பாரம்பரிய விருது வழங்கப்பட்டது. கர்நாடகா முழுவதும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப சுற்றுலா நடைமுறைகளை முன்னெடுத்து ஊக்குவித்ததை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. மேலும், ஹம்பியில் ஜி 20 உச்சி மாநாட்டிற்கான ஷெர்பா மாநாடு நடத்தியதற்காக பிரதமர் மோடியின் அலுவலகம் மற்றும் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்திடம் இருந்து பாராட்டுகளை பெற்றிருந்தார்.

முன்னதாக பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் தலைவராக ராம்பிரசாத் மனோகர் செயல்பட்டார். அப்போது பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பெயர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+