டிரைவிங் லைசென்ஸ் ரூல்ஸ் மாறுகிறதா? 50 வயது வரை இது தேவை? சூப்பர் பிளானிங்கில் இறங்கிய மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிரைவிங் லைசென்ஸ் விதிகளில் வாகன ஓட்டிகளுக்கு அலைச்சலைக் குறைக்கும் வகையில், ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் மாற்றத்தைக் கொண்டு வர மத்திய அரசு தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஓட்டுநர் உரிமத்தின் ஆயுட்காலத்தை 50 வயது வரை நீட்டிப்பது மற்றும் வாகனப் பெயர் மாற்றத்தை முழுமையாக ஆன்லைன் மயமாக்குவது ஆகியவை இந்த புதிய திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்... இந்த தகவல்களை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

டூவிலரோ அல்லது காரோ வைத்திருக்கு நிறைய பேர், ஆர்டிஓ ஆபீஸ் போக வேண்டும் என்றாலே வரிசையில் நிற்க வேண்டுமே, பலமுறை அலைய வேண்டுமே என்ற சலிப்பு தான் முதலில் வரும்.

Driving Licence Rules

டிரைவிங் லைசென்ஸ் ரூல்ஸ் மாறுகிறதா

ஆனால் இனிமே அப்படி எந்த கவலையும் தேவையில்லை என்று சொல்லும் அளவுக்கு, வாகன ஓட்டிகளுக்கு ஒரு சூப்பரான திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்திருக்கிறது. டிரைவிங் லைசென்ஸ் வைத்துள்ள கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையை மிக எளிதாக்க, போக்குவரத்து விதிகளில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்களாம்.

இப்போது நடைமுறையின்படி, நாம் எடுக்கும் தனியார் வாகன டிரைவிங் லைசென்ஸ் 20 ஆண்டுகள் அல்லது நமக்கு 50 வயது ஆகும் வரை (இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை) மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு நாம் மீண்டும் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு சென்று, ஏகப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்து, புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

மத்திய அரசு சூப்பர் அதிரடி

இந்த நீண்டகால நடைமுறையை மாற்றி, இனிமேல் ஒருவருக்கு 50 வயது ஆகும் வரை அவருடைய டிரைவிங் லைசென்ஸ் செல்லுபடியாகும் வகையில் விதியை மாற்றுவது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் அடிக்கடி லைசென்ஸ் புதுப்பிக்கும் தேவையோ, அலைச்சலோ, தேவையில்லாத ஆவண வேலைகளோ மக்களுக்கு இருக்காது.

அதேபோல ஒரு வாகனத்தை இன்னொரு பெயருக்கு மாற்றுவது அதாவது Ownership Transfer, மற்றும் வாகனங்களுக்கான பெர்மிட்களைப் புதுப்பிப்பது போன்ற மிக முக்கியமான பணிகளுக்காக பொதுமக்கள் இதுவரை பலமுறை ஆர்.டி.ஓ அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலைந்து கொண்டிருந்தனர். இனிமேல் அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது.

50 வயது வரை இது வேண்டாமா

இந்த வாகனப் பெயர் மாற்றம் மற்றும் பெர்மிட் புதுப்பித்தல் போன்ற சேவைகளை முழுமையாக ஆன்லைன் மூலமாகவே டிஜிட்டல் முறையில் செய்து முடிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் தங்களின் வீட்டில் இருந்தபடியே, கம்ப்யூட்டர் அல்லது செல்போன் மூலமாக, கொஞ்ச நேரத்திலேயே இந்த வேலைகளைச் சுலபமாக முடித்துவிட முடியும்.

எனினும், மேற்கண்ட இந்த அதிரடி திட்டங்களால் மாநில அரசுகளுக்குக் கிடைக்கக்கூடிய வருமானத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்தது. அதற்கும் அதிகாரிகளே தெளிவான விளக்கம் தந்து விட்டார்கள்..

புதிய லைசென்ஸ் எடுப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் செலுத்த வேண்டிய கட்டணங்களை மக்கள் ஆன்லைன் மூலமாகவே செலுத்திவிடலாம் என்பதால், அரசுகளுக்கு வர வேண்டிய வருவாய் எந்த விதத்திலும் குறையாது என்று அதிகாரிகள் உறுதிபட சொல்கிறார்கள்.

அதேசமயம், லைசென்ஸ் ஆயுட்காலம் நீட்டிக்கப்படுவதால் விதிகளை மீறுபவர்கள் தப்பித்துவிட முடியாது. இதுக்காகவே, போக்குவரத்து விதிகளை மீறும் டிரைவர்களுக்கு, நெகட்டிவ் புள்ளிகள் வழங்கும் புதிய கட்டுப்பாட்டு முறையைக் கொண்டு வருவது குறித்தும் தீவிர ஆலோசனை நடந்து வருகிறதாம்..

ஆர்டிஓ ஆபீஸ் போக வேண்டாம்

அதன்படி, ஒரு டிரைவர் தொடர்ந்து தவறுகள் செய்து நெகட்டிவ் புள்ளிகளைப் பெற்றால், அவருடைய லைசென்ஸ் தற்காலிகமாக முடக்கப்படும் அல்லது முழுமையாக ரத்து செய்யப்படும். இதனால், சாலைப் பாதுகாப்பு இன்னும் பலப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் நிர்வாகச் சிக்கல்களைக் குறைத்து, மக்களின் அன்றாட வாழ்வை எளிதாக்குவதே இந்த மாற்றங்களின் ஒரே நோக்கம் ஆகும். இந்த புதிய பரிந்துரைகள் குறித்து ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறதாம்.. . மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே இதுகுறித்த இறுதி விவரங்கள் முழுமையாகத் தெரியவரும்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+